வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

ஓ அமேசான் காடே..

பற்றி எரியுது அங்கொரு காடு..
ஆங்கே பறவைகளுக்கில்லை இனியொரு கூடு..
விலங்குகள் மறந்தன தம் சொந்த வீடு..
அமேசானியரை
அகதிகளாக்கியது
அவர்தம் நாடு...
அவர்க்கொரு தீர்வை
இறையே சீக்கிரமே கொடு...
😭😭😭

சனி, 17 ஆகஸ்ட், 2019

நிலையாமை..


ஒருவரையும் விடுவதில்லை விதி.. புரியாதவரே ஆட்டம் போடுகிறார்..புரிந்தவர் வாழ்வை கொண்டாட்டத்தோடு கடக்கிறார்..ஒரு தும்பியின் மரணமும் இழப்பே இந்த பிரபஞ்சத்தில்..#வாழ்வதிகாரம்..

அத்திவரதரைத் தவிரவும் வேறுண்டு காஞ்சியிலே..

வணக்கம் தோழமை உள்ளங்களே..
அத்திவரதர் பற்றி ஆயிரக்கணக்காக தகவல் வந்து குவிந்திருக்கும் உங்கள் இன்பாக்ஸில்.. காஞ்சிபுரம் கோவில் நகரம்..இங்கே பல்வேறு மன்னர்களில் பாதம்பட்டிருக்கிறது.. எத்தனையோ சம்வங்களைதத் தாங்கி நிற்கும் நகரம். இந்த நகரத்தின் இன்னொரு முகத்தைக் காட்டும் பதிவுதான் இது.
ஒற்றை சிலையை தண்ணீரில் வைத்து நாற்பதாண்டுகள் பாதுகாத்து தரிசனத்துக்கு வைக்கும் பாங்குள்ள மனிதர்கள் நிறைந்திருக்கும் காஞ்சியிலே இதுபோன்று அனாதரவாய் விடப்பட்டுள்ள வரலாறு பேசும் கல்வெட்டுகளை மீட்டெடுத்து அருங்காட்சியகங்களில் பாதுகாப்பாக வைத்து அல்லது இங்கேயே ஒரு அருங்காட்சியகம் அமைத்தால் எத்தனை நன்றாக இருக்கும்?!? சம்பந்தப்பட்ட மாநகருக்கான வருமானத்தையும் அது சம்பாதித்து தருமென்பதில் சந்தேகமேது?!
அந்த வருவாயை இழத்தல் தகுமோ?!?

கல்வெட்டு ஆய்வாளர்கள் எவரேனும் தங்கள் நண்பராக இருப்பின் தயவு செய்து இந்த கல்வெட்டின் அர்த்தத்தை கேட்டு சொல்லுங்கள்..



காஞ்சி புரம், மடம்தெருவில் உள்ள இது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகத்தானிருக்க வேண்டும். இத்தகைய அபூர்வங்களை நகர நாகரிகத்துக்கு பலியாக புதைபட விடுதல் தகுமா?! ஆய்வாளர்கள் தயவுசெய்து மீட்டெடுங்கள். ஒரு தமிழனாக எனது இந்தப் பதிவை செய்துள்ளேன். நீங்களும் இதனை உரியவர்கள், தகுந்தவர்கள் கண்ணில் தென்படும்வரை ஷேர் செய்யுங்கள்...
நன்றி..

சனி, 3 ஆகஸ்ட், 2019

புதுமைப்பித்தனின் கபாடபுரம் காமிக் வடிவில் http://aroo.space/2019/07/17/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%aa/
நன்றி ஒரிஜினல் அப்லோடருக்கே..

ஆசிரியர் என்பார்யார்?!?


நானெல்லாம் இன்றைக்கு ஒரு நிலைக்கு வந்து வாழ்க்கையை சிறப்புற வாழ்கிறேனென்றால் என் ஆசிரியப் பெருந்தகைகளே அதற்கு முழுமையான காரணம்.. ஹாஸ்டல் வார்டன்களாக அண்ணனாக செயல்பட்டும் பள்ளி ஆசானாக வாய்ப்புகளை தந்தும் என்னை இயக்கிய உயர வைத்த அந்த நல்ல உள்ளங்களை எப்போதும் நன்றியோடு நினைத்து பார்ப்பேன்.. திரு மற்றும் திருமதி சிம்சோன் தம்பதியினர் திரு.தேவாசீர்வாதம்,  திரு.சவரிமுத்து, திரு.அந்தோணிசாமி, திரு.ஏகாம்பரம், திரு.சம்பத், திரு.ஏழுமலை, திரு.தங்கவேலு இன்னும் எக்கச்சக்க ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் அன்பும் மட்டுமல்ல கண்டிப்பும் பிரம்படியும், காது திருகலும் அதிலும் ஒரு சார் தோள்பட்டை கை ஜாயிண்ட் தசையை பிடித்து இழுப்பார் தவளை போல ஒரு நரம்பு எழுந்து அடங்கும்... முட்டி போடுதல், சேர் இல்லாமலேயே அப்படியே அமரும் நிலையிலிருத்தல், ஏகப்பட்ட கொட்டுக்கள்... அவையெல்லாம்தான் இன்றைக்கு நான் வாழும் கவலையற்ற வாழ்வின் அடிப்படையை உறுதியாக கட்டமைத்தவை.. அன்பார்ந்த மாணவமணிகளே..ஆசிரியரை அவமதித்தென்ன லாபம்.. அவரது அறிவுரையே உங்களுக்கான நல்வேதம்..அலட்சியப்படுத்தாதீர்..ப்ளீஸ்..ஜானி சின்னப்பன்..

ஸ்ப்லாஷி_ஒரு ப்ளாடிபஸ்_அறிமுகம்_சிறார் காமிக்ஸ்!

 இனியவர் இயேசு பிறப்பின் கொண்டாட்ட நிகழ்வான  கிறிஸ்துமஸ் தின நன்னாள் வாழ்த்துக்கள் தோழமை உள்ளங்களே.. அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்களும்.. ...