வெள்ளி, 30 செப்டம்பர், 2022

துன்பங்கள் தொலைவில் இல்லை!_சிறுகதை_ஜானி சின்னப்பன்


சென்னையில் ஒரு பரபரப்பான எடிட்டிங் ரூம்.

இப்படத்தில் வரும் பறவைகள், விளங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை..

எழுத்துப்பிழையைசுட்டிக்காட்டி எடிட்டரிடம் எகிறினான் இயக்குனன் இலக்கேஷ்... எத்தனை கோடி பட்ஜெட் சார் இது.. இப்படி அசல்ட்டாசாரி சொல்றீங்களே.. விலங்குக்கு ஸ்பெல்லிங் தெரியாம..இதுல நீங்களே ஒரு தமிழன் வேற.. வேற மொழிக் காரன்லாம் வந்து கொடிய நாட்டிட்டிருக்கானுங்க...

பின்னர் மாலையில்..

ஷுட்டிங் ஸ்பாட்.. 

உதவி இயக்குநர் உத்தமசெய்யோனிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.. இன்னிக்கு என்னய்யா சிக்கனா? மட்டனா?!? 

_ஜானி சின்னப்பன்

035_விடுதலை வீரர்_விவிலிய சித்திரக்கதைகள் வரிசை




































For PDF Download:

 

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

செங்களத்தில் சாகா ஆட்டம்_மெர்லினின் மந்திர டைரி_நிறைவுப்பகுதி

வணக்கங்கள் நண்பர்களே.. 
சில பல ஆண்டுகளாக காத்திருப்பில் இருந்த நண்பர்களுக்காக இந்த கதை முற்றிலும் வாசக இரசனைக்காக அன்பளிக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் வாசித்து மகிழலாம்.  




தரவிறக்க சுட்டி: 


 

வியாழன், 15 செப்டம்பர், 2022

LC_423_சொர்க்கத்தில் சாத்தான்கள்_டெக்ஸ் வில்லர்_ஆகஸ்ட் 2022

 வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. 

இந்த மாத லயன் காமிக்ஸ் வெளியீடாக மலர்ந்திருப்பது இளம் டெக்ஸ் வரிசையில் "சொர்க்கத்தில் சாத்தான்கள்" 




ஒவ்வொரு டெக்ஸ் வில்லர் சாகசத்திலும் ஏதாவது ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு சிறு உண்மை சம்பவங்களாவது இணைக்கப் பட்டிருக்கும். அப்படி இணைக்கப்பட்ட சம்பவங்களும் கதைக்கு நம்மை இன்னும் நெருக்கமாக்கும். 



இந்த கதையில் சம்பந்தப்பட்டவர்கள் மோர்மன்கள். நல்ல கொள்கையுடைய மோர்மன்கள் இடையில் தீவிர கொள்கை உள்ளவர்கள் இருப்பதால் ஏற்படும் விளைவுகளை இந்த கதையில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எப்போதுமே மனிதர்கள் கைக்கொள்ளும் மதங்கள் அவர்களை நல்ல முறையில் ஒரு ஒழுங்குக்குள் கொண்டு வந்து இறைவன் என்கிற ஒரு மேலான சக்தி இருக்கிறது அதற்கு பயந்து நடந்தால் வரப்போகும் நல்லது கெட்டதுகள் அனைத்தையும் தாங்கும் சமாளிக்கும் சக்தி நமக்குக் கிட்டும் என்பதே மத வாதிகளின் அடிப்படை அப்படி வணங்கும் தெய்வங்களின் அடிப்படையில் ஒரு கூட்டம் ஒன்றிணைவதும் அந்த ஒன்று சேர்தல் நன்மை பயப்பதும் கண்கூடு. நம் திருவிழாக்கள், நமது ஆலயங்கள், நமது ஒன்று கூடுகை என்று அமைதியாக ஒரு கூட்டம் இருக்கும் வரை எந்த பிரச்சினையும் இல்லை. அது எப்போது தன்னை சுற்றி இருப்பவர்களும் தம் குடைக்குக் கீழ் வர வேண்டும் என்கிற நினைப்பில் அவர்களை ஆளும் எண்ணத்தை விதைக்கும்போது வரும் தீமை எத்தனை கொடூரமாக இருக்கும் என்பதுதான் இந்தக் கதையின் அடிப்படை. 



நம் நாயகன் டெக்ஸ் அறிந்த ஒரு நல்ல மோர்மன் மதத்தைப் பின்பற்றும் இனத்தவர் ஒரு தேவாலயத்தை நகருக்குள் கட்டி எழுப்பி வழிபட எண்ணுகிறார்கள். தீவிர மோர்மன் என்று விலக்கி வைக்கப்பட்ட வில்லன் கூட்டத்தார் ஆங்காங்கே தாக்குதல் தொடுத்து அழிவை விதைப்பதுடன் சம்பந்தப்பட்ட அப்பாவிகளின் பெண் குழந்தைகளை கொண்டு சென்று விடுகிறார்கள். அவர்களின் நோக்கம் என்ன? அதில் டெக்ஸ் அறிந்த குடும்பத்து அப்பாவி இளைஞன் எவ்வாறு பாதிக்கப்படுகிறான்? 


ஏற்கனவே பிரச்சினையின் மீது சவாரி செய்து கொண்டிருக்கும் நம் இளம் டெக்ஸ் எவ்வாறு அதில் இருந்து அந்த அப்பாவியை மீட்க பிராயத்தனப்படுகிறார்? அந்த அப்பாவியை மீட்கப் புகும்போது அவர் கண்டு பிடித்த உண்மைகள் என்னென்ன? அந்த உண்மைக்கு அவர் எப்படி நீதி நியாயம் பக்கம் இருந்து போராடி தனது நண்பனைக் காக்கிறார்? என்ற அத்தனை சம்பவங்களையும் பரபரப்பாக இந்த நூலில் வாசிக்கவிருக்கிறீர்கள். 


எண்பதே ரூபாயில் இப்படி ஒரு பரபரப்பான கதையை நமக்காக தேர்வு செய்து கொடுத்த லயன் எடிட்டர் திரு விஜயன் அவர்களை பாராட்டியே தீர வேண்டும். இந்த அதிரடிப் பயணம் அடுத்தடுத்தும் தனித் தடத்தில் தொடர இருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. வெளியீடு எண் 423  யாக வெளியாகி இருக்கும் இந்த நூல் கட்டாயம் உங்கள் லைப்ரரியில் இருக்க வேண்டிய நூல். நன்றி. 








செவ்வாய், 13 செப்டம்பர், 2022

ஜீன் ஆட்ரீ_அறிமுக நாயகன்_ரங்லீ காமிக்ஸ்

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. புத்தம்புது வெளியீடான ரங்லீ பதிப்பகத்தின் ஜீன் ஆட்ரீ.. 
 
மேற்கத்திய அத்துவானக் காட்டுக் கதைகள் என்கிற வரிசையில் இந்த நாயகர் களமிறங்கி இருக்கிறார். 
ரங்லீ காமிக்ஸில் வரக்கூடிய ஒலி வார்த்தைகளுக்காக இயல்பொலி சொற்களை கேட்டு வாங்கி பதிப்பித்ததுடன் அதனை யாரெல்லாம் கூறினார்களோ அந்த பட்டியலைக் கொடுத்து மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள் ரங்லீ பதிப்பகத்தார்...  



அத்துவானக் காட்டுக் கதைகள் தலைப்புக்கான விளக்கம்.. 

முதல் கதையான மோதும் பகரூ.. ஜீன் ஆட்ரீ மெஸ்கைட்டுக்கு விரைந்து கொண்டிருக்கும்போது வழிப்பறி கொள்ளை, கொலை நடந்திருக்கும் இடத்தினை கடக்க நேரிடுகிறது. 
சாதாரணமான ஒரு எளிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனம் ஏன் தாக்கப்பட்டிருக்கிறது என்று குழம்பியபடி பயணத்தைத் தொடரும்  நாயகர் ஜீன் ஆட்ரீயை நோக்கி எதிர்பாராமல் ஒரு தோட்டா  பாய்ந்து வருகிறது. ஏன் 
எதற்கு என ஆராயப் புகும் நாயகருக்குக் கிடைத்திருப்பது ஒற்றை சிறகு.. அதுவும் ஒரு பச்சைக் கிளியுடையது. அந்த ஒரு தடயத்தை வைத்தே எதிரியை எவ்வாறு அவர் கண்டு பிடிக்கிறார் நடந்த கொள்ளை, கொலைகளுக்கு யார் காரணம் என்கிற அதிரவைக்கும் திருப்பங்கள் வாசகரை தொடர்ந்து வாசிக்க வைத்து விடும்.    

தமிழில் நடைமுறையில் இல்லாத ஏன் இலக்கண, இலக்கியங்களில் கூட அவ்வளவாக தென்பட்டிருக்காத வார்த்தைகளைக் கண்டுபிடித்து இரசிகர்களிடம் கொண்டு சேர்த்து பெருமுயற்சி எடுத்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் திரு. கதிரவன். ஆனாலும் இத்தனை அதிக வார்த்தைப் பிரயோகங்கள் தேவையா, சற்றே குறைத்திருக்கலாம் என்கிற குரல்கள் ஆங்காங்கே கேட்கப்படுகிறது. ஆசிரியர் கவனிப்பார் என்று நம்புகிறோம். 
பச்சைக் கிளி எல் லோரா எல்லோரையும் ஈர்ப்பது உறுதி.. நல்ல நாயகர்.. தொடர வாழ்த்துவோம்.. 


இரண்டாம் கதையாக பரிமளிப்பது.. சரி சரி.. பழக்க தோஷம்..

இரண்டாம் கதையாக வந்திருப்பது ஏதச் சுவடுகள்..  குற்ற சுவடுகள் என்றும் பொருள் கொள்ளலாம். இந்த சித்திரக்கதையும் முழுவண்ணத்தில் கவனம் ஈர்க்கும் ஒரு சித்திர விருந்தாகவே மலர்ந்துள்ளது. நாயகர் ஜீன் மாடுகளுக்குக் காவலனாக வெப்ஸ்டர் பண்ணைக்குப் போகும் வழியில் ஒரு திருடியை சந்திக்க நேர்கிறது. அதன் பின்னர் மாட்டுக் கொள்ளைக்காரர்களை மடக்கும்போது அதில் நீடா என்கிற சுழல் காற்றுப் பெண் அறிமுகமாகிறாள். வசனங்கள் கவியுருக் கொண்டு சற்றே இன்பமான வாசிப்பை நல்குகின்றன.. தொடரும் நீடாவின் தாக்குதல்கள் அவள் தரப்பில் உள்ள நியாயத்தை முன்னே நிறுத்துகின்றன.. ஜீன் அவளுக்கான நியாயத்தை பெற்றுத்தரும் முயற்சியில் வெற்றி பெற்றாரா? என்கிற கேள்விக்கான விடையை இந்த நூலை வண்ண வண்ண சித்திரங்களுடன் வாசித்துத் தெரிந்து கொள்ளலாமே தோழமைகளே.. 

 


நூறு ரூபாயில் அட்டகாசமான பதிப்பாக வெளியாகியிருக்கும் இந்த நூலை வாங்க தொடர்புக்கு: 
ரங்லீ பதிப்பகம்: 
9043045312  

உதவிக்கு: திரு.k. v. கணேஷ்-8838272995  



என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்

 

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...