வணக்கம் தோழர்களே.. இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..
என்றும் அன்புடன் உங்கள் நண்பன் ஜானி.வியாழன், 14 நவம்பர், 2024
வியாழன், 7 நவம்பர், 2024
வகம் காமிக்ஸ் அப்டேட்ஸ்..
வணக்கம் தோழமை உள்ளங்களே.. 2025 ஆம் வருடத்திற்கான (வகம் காமிக்ஸ்).சந்தா அறிவிப்பு இதோ.. திரு.கலீல் தொடர்கிறார்..
நண்பர்களுக்கு வணக்கம்
இதுவரை தாங்கள் கொடுத்து வந்த ஒத்துழைப்பிற்கும் ஆதரவுக்கும் எனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை வெளியிட்டுள்ள புத்தகங்கள் அனைத்துமே, தரமான புத்தகம் தரமான கதைகள் என பலராலும் பாராட்டப்பட்டுள்ளது மன நிறைவையும் மகிழ்ச்சியும் தந்துள்ளது. கடந்து வந்த வருடங்களில் பல போராட்டங்களையும் பல பிரச்சனைகளையும் சந்தித்து வந்தும் கூட, பல நல்ல கதைகளை வழங்கியதில் பெருமையும் சந்தோஷமும் அடைகிறோம். இத்தொழிலில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால், பண பலமும் படை பலமும் இருக்க வேண்டும் இரண்டு பலமும் இல்லாமலே இவ்வளவு மாதங்கள் கடந்து வந்தது மிகப் பெரிய சாதனையாகவே கருதுகிறோம். இனி வரப்போகும் காலங்களும் கடும் சவாலாகவே இருக்கும் என்று நினைக்கிறோம். இங்கு என்ன மாற்றங்களை கொண்டு வந்தாலும் அதை விழலுக்கு இறைத்த நீர் போலத்தான் இருக்கிறது. 2025 ஆம் வருடத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சந்தாவை தொடரவும் விருப்பமில்லை நிறுத்தவும் விருப்பமில்லை அதனால்தான் இந்த அறிவிப்பை அறிவிக்கிறோம். 2500/- ரூபாய் சந்தா கட்டி சந்தாவில் இணைந்து கொள்ளலாம். ஆனால், என்ன கதாநாயகர்கள் எந்த மாதத்தில் என்ன புத்தகங்கள் வெளிவரும் என்று உறுதியாக சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம். (நிக் ரைடர் + ஆடம் ஒயில்டு + கிராபிக் நாவல்கள் + டயபாலிக் + சிஸ்கோ கிட் மற்றும் சில புதிய நாயகர்கள் இவர்களின் கதைகளை 2025 இல் எதிர்பார்க்கலாம்) எங்கள் மீது நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் இத்திட்டத்தில் இணைந்து பயணிக்கலாம். புத்தகங்கள் வெளிவந்த உடனே பணம் செலுத்தியவர்கள் அனைவருக்கும் புத்தகங்கள் (வழக்கம் போல்) அனுப்பி வைக்கப்படும். ஒருவேளை புத்தகங்களே வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டால், பணம் கொடுத்தவர்கள் அனைவருக்கும் பணம் திருப்பி கொடுக்கப்படும் (அப்படி ஒரு நிலை ஏற்படாது என்றே நம்புகிறோம்) சந்தா கட்ட நினைப்பவர்கள் ஒரே தவணையாக மட்டுமே கட்டவும். தமிழ்நாட்டிற்குள் - 2500
பிற மாநிலங்களுக்கு - 2700
Gpay and phone pe - 9894692768
வங்கி மூலமாக பணம் செலுத்த விரும்புவோர் கீழே உள்ள வங்கிகளின் மூலமாகவும் பணம் செலுத்தலாம்.
A.Kaleel
Bank AC. No.20269024313
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இலாஸ்பேட்டை கிளை
IFSC Code No. SBIN0010507
Mob - 9894692768
A.Kaleel
HDFC BANK
Current Ac No. 50200093806672
IFSC CODE: HDFC0002611
Branch : Ambalathadayar st
Puducherry - 605001
Mob - 9894692768
இந்த மாதம் வரவேண்டிய யானைகளின் சாம்ராஜ்யத்தில் சில பல காரணங்களால், அடுத்த மாதத்திற்கு தள்ளிப் போகிறது. அந்த இடத்தில் கிளாசிக் ஆக்ஷன் ஸ்பெஷல் வருகிறது! டயபாலிக் புக் சைஸில் கொண்டு வருகிறோம். அநேகமாக பிரிட்டிஷ் கதைகளில் வெளிவரும் கடைசி கதைளாக இது இருக்கலாம். நிச்சயம் இந்த சைஸும் இதன் பார்மெட்டும் பிடிக்குமென்றே நம்புகிறேன். ஹியூக் மார்ஸ்டன் (வேட்டையரை வேட்டையாடு) மற்றும் வெகுமதி வேட்டையன் ஜான் கதைகள் இதில் வருகின்றன. கருப்பு வெள்ளையில் 154 பக்க ஆக்ஷன் மேளாவாக இருக்கும்.
நன்றி! தங்கள் ஆதரவை நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.. உங்கள் நண்பன் ஜானி.
சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩
அன்புடையீர்... இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
இனிய காமிக்ஸ் தோழமைகளுக்கு அடியேனின் அன்பு வணக்கம். இன்றைக்கு நாம் பார்க்கவிருப்பது "பரங்கா பள்ளத்தாக்கு" ரங்லீ காமிக்ஸ் 100/- ...
-
[8/12, 09:22] 🌟ஜானி_ஷீலா💐: நண்பர்களே! சீனியர் எடிட்டர் என்று நீங்கள் அன்புடன் அழைக்கும் சவுந்தர பாண்டியன் எழுதும் மடல். நமது வெளியீடுகள் ...