COMICS I HAVE - நான் வைத்திருக்கும் காமிக்ஸ்கள்காமிக்ஸ் காதலர்களுக்கு என் இனிய வணக்கங்கள்!
அதென்னவோ காமிக்ஸ் புத்தகங்களை சேர்த்து வைப்பது, மிக மிகஇரகசியமாக ஒளித்து வைப்பது என்பது காமிக்ஸ் ரசிகர்களின் தனி அடையாளமாக மாறிப்போய்ரொம்ப நாளாச்சி!
இதனாலேயே நான் ஒரு கொள்ளை முயற்சியைமேற்கொள்ள வேண்டியதாகி போனது. இது நடந்தது சுமார் 1990 வாக்கில்...
என் நண்பர்களில் மிக மிக முக்கியமான காமிக்ஸ் காதலர்கள்
மலையப்பன்(சித்தவைத்தியர்),
மாண்டிரக் முருகன்( இமயம் காவலர் கோச்சிங் சென்டர்) ,
சங்கர் (காவல்துறை) ,
சேட்டு (என்னபா பண்றே இப்போ ),
யாசின் (HAILAGRO TECH. நிறுவனர் )
சரவணன் (செல்போன் சென்டர்)
அப்புறம் நான் மிகவும் மதிக்கும் எனக்கு காமிக்ஸ் அறுசுவையைஅனுபவிக்க மிக மிக உதவி செய்த என் காமிக்ஸ் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும்போதுஎன்னை தோழனாக அருகே அமரவைத்து படிக்க தூண்டிய,
1.திரு.குணசேகரன்அவர்கள் (எல்லை பாதுகாப்பு பிரிவில் உள்ளார்.அண்ணா! இதை பார்த்தால் என்னைதொடர்பு கொள்ளுங்கள் ப்ளீஸ்!)
2.திரு.இராதாகிருஷ்ணன் அவர்கள்
( கொத்தனார் வேலை பார்க்கிறார் )
அவர்களுக்கு என் நன்றிகளை இக்கணத்தில் உரித்தாக்குகிறேன்!
அதில் மலையப்பன் ரொம்ப குறும்பு!
நாங்கள் காமிக்ஸ் தர கொஞ்சம் கலாட்டா செய்ததை சவாலாக எடுத்துக்கொண்டுசென்னை சென்று நிறைய காமிக்ஸ்களை அள்ளிக்கொண்டு வந்து மறைத்து வைத்து நிறைய அலையவிட்டார்!
என் பொறுமை ஒரு கட்டத்தில் எல்லை மீறி போய் விடவே அவர் வீட்டில்இல்லாத சமயமாக பார்த்து கதவை கழட்டி வைத்து விட்டு (பழைய மாடல் பாஸ்) வீட்டின்பரணில் ஏறி அவரது காமிக்ஸ்களை சோதித்து படிக்காத புத்தகங்களை மட்டும்(திருட்டிலும் நேர்மை வேண்டும்!! (விஜயன் சார் கவனிக்க ஒரு தலைப்பு ரெடி!) ) அள்ளிகொண்டு வந்து விட்டேன்!
பின்னர் பல காலம் போனபின்பு அவரிடம் மன்னிப்பு கேட்டதுடன் தகுந்தபரிகாரங்களும் செய்து விட்டேன்!
ஆனாலும் கொள்ளைகள் தடுக்கப்பட வேண்டியவையே!

சரி இப்போ விஷயத்துக்கு வரேன்!
காமிக்ஸ் சேகரிப்பு என்பது நாணயம், ஸ்டாம்ப் சேகரிப்புக்குஒப்பானதாகவே இருக்கட்டும். ஆனால் என்னிடம் இந்த இந்த காமிக்ஸ்கள் உள்ளன என்றுவெளிப்படையாகவே தெரிவிப்பதற்கு நிறைய நண்பர்கள் மிக பயங்கரமாக யோசிக்கின்றனர்.
நான் ஆசிரியரை புரிந்து கொண்ட விதத்தில் நல்ல காமிக்ஸ் கதைகள் என்பகுதி மக்களுக்கு ஓரளவாவது ரசிக்க கிடைக்க வேண்டும் என்று என் ஊர் நூல்நிலையத்திற்கு கொஞ்சம் காமிக்ஸ்களை அன்பளிப்பாக அளித்தேன்!
வாடகை புத்தக நிலையத்தை கொஞ்ச காலம் நடத்தினேன்!
காவல் துறைக்கு வந்த பின்னர் என் வசம இருந்த நிறைய புத்தகங்களை புக்மார்கெட் பகுதி மூலமாக என் அப்பா திரு.ஜெ.சின்னப்பன் (ஓய்வு பெற்ற ராணுவ வீரர் - இந்திய ராணுவம் சார்பில் ஈராக் சென்று சாதனைகள் பல புரிந்தவர்) அவர்களது உதவியுடன் நிறைய புத்தகங்களை விற்பனை செய்து விட்டேன்).
முன்னராவது புக் மார்கெட் பகுதி நம் காமிக்ஸில்இருந்தது. நானும் நிறைய புக் வாங்கி இருக்கிறேன்! மீண்டும் அதை கொண்டு வர முடிந்தால் நன்றாக இருக்கும்! இது தொடர்பாக ஆசிரியருக்கு இங்கே வேண்டுகோள் வைக்கிறேன்.

நண்பர்கள் திரு.முருகவேல், அலங்காநல்லூர் (பழைய முத்து காமிக்ஸ் மற்றும் திரு.பட்டு கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய புத்தகங்களை பரிமாறிக்கொள்ள விரும்புவோர் தயவு செய்து இவரை தொடர்பு கொள்ளவும்! தொடர்புக்கு: 9944081821 )
பரணிதரன், தாரமங்கலம் _ 9047042620 
அபு சையது (சவூதி நாட்டில் இப்போ உள்ளார்! கலக்கலா சமைப்பார். கேட்டரிங் முடித்தவர். மாதம் ஒரு வாசகர் பகுதியில் வெளியான எனது போட்டோ மூலம் நண்பராக வாய்த்தவர். லால்குடி, காட்டு மன்னார் கோவில் பகுதியை சேர்ந்தவர். காமிக்ஸில் எனது முகவரியை பார்த்து நண்பனானவர். மிக நீண்ட காலமாக கடிதங்கள் மூலமே நட்பை வளர்த்து கொண்டோம். அவர் முகம் எனக்கு தெரியாது (காதல் கோட்டை ரசிகர்கள் கவனிக்க!!!) ஆனால் எங்களுக்குள் காமிக்ஸ் பரிமாற்றம் நிகழவே இல்லை. இவரது நட்பு கிடைத்தமைக்கு லயன் காமிக்ஸ் ஆசிரியர் திரு.விஜயன் அவர்களுக்கு என் நன்றிகளை இங்கே தெரிவித்து கொள்கிறேன். அவர் இல்லை என்றால் எங்கள் நட்புக்கு உயிர் கிடைத்து இருக்காது. இப்படியாக கடித பரிமாற்றங்கள் எங்கள் பிசிராந்தையார் மற்றும் கோப்பெருஞ்சோழன்     போன்ற நட்பு தொடர்ந்தது) வரை
எனக்கு காமிக்ஸ் பரிமாற்றங்கள் மூலமாக அறிமுகமானவர்களே!
ப்ளாக் என்று வந்த பின் நண்பர் கிங்விஸ்வா, பயங்கரவாதி டாக்டர் செவென், லக்கி லிமத், கார்த்திகேயன், சிவ், தீபன் (இலங்கை), ரபிக் ராஜா, சிம்பா, பின்னோக்கி, நாகராஜன் சாந்தன், லூசு பையன், கனவுகளின் காதலர், அய்யம்பாளையத்தார், பொடியன், புனிதசாத்தான், புத்தக பிரியன், சாக்ரடீஸ் ஆகியோர்அறிமுகமானார்கள். இதில் கிங் என்றும் என் மதிப்புக்குரியவர்!
அவரது ஆங்கில பதிவுகள் படிக்க எனக்கு அவ்வளவாய் புரியவில்லை. நேரம் வேறு மிக அதிகமாக பிடித்தது. அவர் தமிழுக்கு மரியாதையை அளித்த பின்னரே நான் மிக மிக ஆர்வம் கொண்டேன். அவரால் தமிழில் டைப் அடிப்பது பற்றி கற்றுக்கொண்டேன். நன்றி விஸ்வா!

காமிரேட்டுகள் அனைவருக்கும் என் நன்றிகளை இங்கே தெரிவித்துகொள்கிறேன்!

இப்போ சொல்லவந்த மிக மிக முக்கியமான விஷயத்துக்கு வருகிறேன்!
என் கை வசம் இருக்கும் காமிக்ஸ்களின் பட்டியல்களை (பெரும் பிரயத்தனத்தின் மத்தியில் சேகரித்து வைத்தது!)
ஆயா திருமதி.தாயார் அம்மாள், தாத்தா திரு.அமிர்தன் அவர்கள் (காவல் துறை பணி ஒய்வு) இருவரையும் சிரித்து மயக்கி மொக்கை போட்டு வாங்கியது, அப்பா அம்மாவுக்கு தெரியாமல் பாக்கெட் அடித்து, ஊர் ஊராக கோழி முட்டை விற்றது, புக் வாடகை விட்டு கிடைத்த கொஞ்சம் பணம் ஆகியவற்றால் சேகரித்த என் ஆருயிர் காமிக்ஸ்களில் என் நண்பர்களாலும்உறவினர்களாலும் கொள்ளையடிக்கப்பட்டவற்றை தவிர (அதில் பாலைவனத்தில் தண்ணீர் தண்ணீர், சுறா வேட்டை, பொன் விமானம், ஆர்சியோடு மோதாதே போன்ற அரிய பொக்கிஷங்களும்அடக்கம்)
இங்கே பட்டியலாக வெளியிடுகிறேன்! இவை வரிசைப் படி இல்லை என்றும் தெரிவித்துகொள்கிறேன். விற்பனைக்கு இப்போது தர உத்தேசமில்லை என்று தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன். என்றாவது விற்க ஆசை கொண்டால் இங்கேதான் தெரிவிப்பேன். எனவே கோபம் கொள்ள வேண்டாம் என் ஆருயிர் தோழர்களே!

என் தாயார். திருமதி. விஜயா அவர்களுக்கு இவை என்றால் உயிர்! எனவே மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்!
அப்புறம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்! தயவுசெய்து உதவுங்கள்!
மாதம் ஒரு வாசகர் என்ற பகுதி நினைவுள்ளதா?
அதில் என் பெயர் இடம் பெற்ற காமிக்ஸ் அனேகமாக புயல்படலம் என்று நினைக்கிறேன். உங்களில் யாரிடமாவது அது இருந்தால் எனக்கு என் போட்டோ இடம் பெற்றுள்ள மாதம் ஒரு வாசகர் பக்க ஸ்கேன் அனுப்பி வைத்தால் மகிழ்வேன்! மிக மிக பத்திரமாக பதுக்கி வைத்தும் அதனை கடத்தி விட்ட அந்த காமிக்ஸ் காதலர்களை நினைத்தால் எனக்கு மிக மிக திறமை சாலிகள் என பாராட்டத்தான் தோன்றுகிறது! (நற,நற).

தற்சமயம் என் கை வசம் இருக்கும் கதை புத்தகங்களின் பட்டியல் இதோ உங்கள் பார்வைக்காக மட்டும் !! (FOR YOUR EYES ONLY)கைவசமுள்ள லயன் காமிக்ஸ் பட்டியல்
வரிசை
எண்
தலைப்புக்கள்
கதை நாயகன்
1
நிழல் ஒன்று நிஜம் இரண்டு
சிக் பில் & கோ
2
தேடி வந்த தங்க சுரங்கம்
சிக் பில் & கோ
3
நட்புக்கு நிறமில்லை
சிக் பில் & கோ
4
மறையில்லா மன்னர்
சிக் பில் & கோ
5
மஞ்சளாய் ஒரு அசுரன்
சிக் பில் & கோ
6
மர்ம மைனா
சிக் பில் & கோ
7
மலையோடு ஒரு மல்யுத்தம்
சிக் பில் & கோ
8
கௌபாய் எக்ஸ்பிரஸ்
லக்கி லூக்
9
பரலோகத்திற்கு ஒரு பாலம்
லக்கி லூக்
10
தாயில்லாமல் டால்டன் இல்லை
லக்கி லூக்
11
சூ மந்திர காளி!
லக்கி லூக்
12
டால்டன் நகரம்
லக்கி லூக்
13
மேற்கே ஒரு மாமன்னர்
லக்கி லூக்
14
கார்சனின் கடந்த காலம் 1 & 2
டெக்ஸ் வில்லர்
15
துயிலெழுந்த பிசாசு
டெக்ஸ் வில்லர்
16
பயங்கர பயணிகள்
டெக்ஸ் வில்லர்
17
மந்திர மண்டலம்
டெக்ஸ் வில்லர்
18
கபால முத்திரை
டெக்ஸ் வில்லர்
19
சதுப்பில் ஒரு சதிகார கும்பல்
டெக்ஸ் வில்லர்
20
மரண தூதர்கள்
டெக்ஸ் வில்லர்
21
நள்ளிரவு வேட்டை
டெக்ஸ் வில்லர்
22
மரணத்தின் முன்னோடி
டெக்ஸ் வில்லர்
23
காற்றில் கரைந்த கழுகு
டெக்ஸ் வில்லர்
24
எமனின் எல்லையில்
டெக்ஸ் வில்லர்
25
சாத்தான் வேட்டை
டெக்ஸ் வில்லர்
26
மரணமுள்
டெக்ஸ் வில்லர்
27
இரத்த ஒப்பந்தம்
டெக்ஸ் வில்லர்
27
தணியாத தணல்
டெக்ஸ் வில்லர்
28
காலன் தீர்த்த கணக்கு
டெக்ஸ் வில்லர்
29
எரிந்த கடிதம்
டெக்ஸ் வில்லர்
30
இருளின் மைந்தர்கள்
டெக்ஸ் வில்லர்
31
கழுகு வேட்டை
டெக்ஸ் வில்லர்
32
பறக்கும் பலூனில் டெக்ஸ்
டெக்ஸ் வில்லர்
33
இரத்த நகரம்
டெக்ஸ் வில்லர்
34
ஓநாய் வேட்டை
டெக்ஸ் வில்லர்
35
இரத்த தாகம்
டெக்ஸ் வில்லர்
36
தலை கீழாய் ஒரு தினம்
மதியில்லா மந்திரி
37
சுல்தானுக்கு ஒரு சவால்
மதியில்லா மந்திரி
38
மரணத்தை முறியடிப்போம்
மாடஸ்டி
39
காட்டேரி கானகம்
மாடஸ்டி
40
மிதக்கும் மண்டலம்
மாடஸ்டி
41
தேடி வந்த தூக்கு கயிறு
மாடஸ்டி
42
பரலோக பரிசு
ஜூலியன்
43
கார்ட்டூன் கொலைகள்
ஜூலியன்
44
லயன் கம் பேக் ஸ்பெஷல்

45
இரத்த படலம் -6
XIII
46
இரத்த படலம் -9
XIII
47
இரத்த படலம் -1-18
XIII
48
கோபுரத்தில் கொள்ளை
விங் கமாண்டர் ஜார்ஜ்
49
கனவே கொல்லாதே
டிடெக்டிவ் டிரேசி
50
மாண்டவன் மீண்டான்
காரிகன்
51
விசித்திர வில்லன்
பெர்ரி மேசன்
52
ஹாலிவுட்டில் ஜாலி
ஜாக்கி ஸ்டார்
53
புரட்சி தலைவன் ஆர்ச்சி
ஆர்ச்சி

கைவசமுள்ள முத்து காமிக்ஸ் பட்டியல்
வரிசை
எண்
தலைப்புக்கள்
கதை நாயகன்
1
தனியே ஒரு கழுகு
கேப்டன் டைகர்
2
மின்னும் மரணம்
கேப்டன் டைகர்
3
அமானுஷ்ய அலைவரிசை
மார்டின்
4
சரித்திரத்தை சாகடிப்போம்
மார்டின்
5
பறக்கும் பாவை படலம்
ஜேம்ஸ் பாண்ட்
6
திகில் டெலிவிஷன்
ஜானி
7
திசை திரும்பிய பில்லி சூன்யம்
ஜானி
8
சாத்தானின் சாட்சிகள்
ஜானி
9
மரண மாளிகை
ஜானி
10
வைர வேட்டை
ஜான் சைமன்
11
பெங்குவின் படலம்
விங் கமாண்டர் ஜார்ஜ்
12
ஒரு திகில் திருமணம்
விங் கமாண்டர் ஜார்ஜ்
13
மரண ஒப்பந்தம்
ராபின்
14
ஜன்னலோரம் ஒரு சடலம்
ராபின்
15
புயல் பெண்
ராபின்
16
யானை கல்லறை
ஜோ
17
புதையல் பாதை
ஜோ
18
எத்தர் கும்பல் எட்டு
மாண்ட்ரேக்
19
காற்றில் கரைந்த பாலர்கள்
மாண்ட்ரேக்
20
நள்ளிரவில் ஒரு நாடகம்
மாண்ட்ரேக்
21
நிழல் எது? நிஜம் எது?
மாண்ட்ரேக்
22
காலத்துக்கொரு பாலம்
மர்ம மனிதன் மார்டின்
23
மை டியர் மம்மி
ராபின்
24
அமானுஷ்ய அலைவரிசை
மர்ம மனிதன் மார்டின்
25
மரண மண்
வெஸ்
26
சிவப்பு தலை சாகசம்
ஷெர்லக் ஹோல்ம்ஸ்
27
பழி வாங்கும் பிசாசு
ராபின்
28
கொலை அரங்கம்
ஜான் சில்வர்
29
பரலோகப் பாதை
கேப்டன் டைகர்
30
பழி வாங்கும் புகைப்படம்
விங் கமாண்டர் ஜார்ஜ்
31
வீடியோவில் ஒரு வெடிகுண்டு
ராபின்
32
ஒரு மாந்த்ரீகனின் கதை

33
த்ரில் ஸ்பெஷல்
கறுப்பு கிழவி
34
பனியில் ஒரு பிணம்
ராபின்

தங்க கல்லறை
கேப்டன் டைகர்
35
திசை திரும்பிய தோட்டா
கேப்டன் டைகர்
36
இரத்த கோட்டை
கேப்டன் டைகர்
37
மேற்கே ஒரு மின்னல்
கேப்டன் டைகர்
38
செங்குருதி பாதை
கேப்டன் டைகர்
39
புயல் தேடிய புதையல்
கேப்டன் டைகர்
40
சிறையில் ஒரு புயல்
கேப்டன் டைகர்
41
குள்ள நரிகளின் இரவு
ப்ரூனோ பிரேசில்
42
மின்னல் ஜெர்ரி

43
பொன்னில் ஒரு பிணம்
மர்ம மனிதன் மார்டின்
44
நொறுங்கிய நாணல் மர்மம்
ஜூலியன்

பேய்த்தீவு இரகசியம்
சார்லி

பறந்து வந்த பயங்கரவாதிகள்
லாரன்ஸ்&டேவிட்

கைவசமுள்ள திகில் காமிக்ஸ் பட்டியல்
வரிசை
எண்
தலைப்புக்கள்
கதை நாயகன்
1
சாவதற்கு நேரமில்லை
ஜான் சைமன்
2
சைத்தான் ஜெனரல்
கேப்டன் பிரின்ஸ்

கைவசமுள்ள காமிக்ஸ் க்லாசிக்ஸ் பட்டியல்
வரிசை
எண்
தலைப்புக்கள்
கதை நாயகன்
1
காற்றில் கரைந்த கப்பல்கள்
& மூளை திருடர்கள்
லாரன்ஸ் &டேவிட் – ஜானி
2
மைக்ரோ அலைவரிசை
& மர்ம தீவு
லாரன்ஸ் &டேவிட் – ஜானி
3
பார்முலா திருடர்கள்
& தங்க விரல் மர்மம்
லாரன்ஸ் &டேவிட் – ஜானி
4
ப்ளைட் 731
& ஜானி இன் லண்டன்
லாரன்ஸ்&டேவிட் – ஜானி
5
கடத்தல் குமிழிகள்
& பாம்பு தீவு
ஸ்பைடர் & இரும்புக்கை மாயாவி
6
இயந்திர தலை மனிதர்கள்
& யார் அந்த மினி ஸ்பைடர்?
ஸ்பைடர்
&இரும்புக்கை மாயாவி
7
எத்தனுக்கு எத்தன்
& நாச அலைகள்
ஸ்பைடர்
&இரும்புக்கை மாயாவி
8
பாதாள போராட்டம்
& பறக்கும் பிசாசு
ஸ்பைடர்
& இரும்புக்கை மாயாவி
9
கொலைப்படை
& நடுநிசி கள்வன்
ஸ்பைடர்
&இரும்புக்கை மாயாவி
10
மர்மத் தீவு
& நியூயார்க்கில் மாயாவி
ஸ்பைடர்
&இரும்புக்கை மாயாவி
11
பாதாள நகரம்
& டாக்டர் டக்கர்
ஸ்பைடர்
&இரும்புக்கை மாயாவி
12
தலை வாங்கி குரங்கு
டெக்ஸ் வில்லர்
13
களிமண் மனிதர்கள்
இரும்புக்கை மாயாவி
14
கொலைகார கலைஞன்
ஜானி


கை வசமுள்ள ராணி காமிக்ஸ் பட்டியல்
வரிசை
எண்
தலைப்புக்கள்
கதை நாயகன்
1
இயந்திர மனிதன்
டைகர்&ஹென்றி
2
மர்ம விபத்து
டைகர்&ஹென்றி
3
துரோகி
கிட் கார்சன்
4
எகிப்திய மம்மி
தியோ
5
மண்டை ஓட்டு மாளிகை
மாயாவி
6
கடத்தப்பட்ட நடிகை
மாயாவி
7
மந்திரியை கடத்திய மாணவி
ஜேம்ஸ் பாண்ட்
8
தப்பி ஓடிய இளவரசி

கைவசமுள்ள மற்ற காமிக்ஸ் பட்டியல்
வரிசை
எண்
தலைப்புக்கள்
கதை நாயகன்
1
பூலோக நரகம்


நன்றி! மீண்டும் சந்திப்போம்தோழர்களே! இதை படித்து முடித்தகாமிக்ஸ் அன்பர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்! நீங்கள் தமிழ் காமிக்ஸ்களை பதுக்க ஆரம்பித்த அந்தநொடியில்தான் காமிக்ஸ் குற்றங்கள் பெருக ஆரம்பித்தன! அது போல நம் ஆசிரியர் ஒரு காலத்தில் நினைத்து இருந்தால் காமிக்ஸ் வரலாறு திசை திரும்பி இருக்காது!
காமிக்ஸ்களுக்காக நிறைய தண்டம் அழ வேண்டி இருந்திருக்காது! உங்கள் தளராத முயற்சியால் தற்போது சென்னையில் ஒரு தமிழ்காமிக்ஸ் கூட பழைய புத்தக அங்காடிகளில் இல்லை. ஆனால் ஸ்பைடர் மேன்களும்,அவேன்ஜெர்களும், எக்ஸ் மேன்களும் நிறைய கிடைக்கிறார்கள். அத்தனையும்ஆங்கிலத்தில்!! மைலாப்பூர் காவல் நிலையம் எதிரில் உள்ள வாடகை புத்தக நிலையத்தில்அட்வான்ஸ் தந்து உறுப்பினர் ஆனால் நிறைய டின்-டின்,
Astrix & Oblix, வகையறாக்கள் வாடகைக்கு எடுத்து சென்னை வாசிகள் ருசிக்கலாம். அதைவிட்டால் வேறு மார்க்கம் இருப்பின் அதையும் இங்கே தெரிவிக்கலாமே நண்பர் படைகளே!உங்கள் வசம் இருக்கும் கதை புத்தகங்களை யாரும் கொள்ளை இட மாட்டார்கள்! ஆகவே தயவுசெய்து உங்கள் புத்தகங்களின் பட்டியலை வெளியிடுங்களேன்! நாங்கள் மகிழ்வோமே தவிரஉங்களை தொந்தரவு செய்ய மாட்டோம்! ப்ளீஸ்! ப்ளீஸ்! ப்ளீஸ்!
அப்புறம் ஒரு மண்டை காய வைக்க போகும் செய்தி! இங்கே கொஞ்சம் பொதுஅறிவு செய்திகளை அவ்வபோது பதிவிடலாமே என்று நினைத்திருக்கிறேன்! முடிஞ்சா படிங்கமக்களே! கையில் ஒரு கோடியில் ஆயிரம் ரூபாயாவது வெல்லலாம்! ஹீ! ஹீ! ஹீ!
அது ஒன்னும் இல்லை என் நண்பர் படை மணலூர் பேட்டையில் மையம் கொண்டு “இமயம்காவலர் கோச்சிங் சென்டர் என்று ஒரு அமைப்பை நிறுவி புதிதாக காவல் துறைக்கு பணியில் சேரபோட்டிக்கு தயாராகும் வீர இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். தொடர்புக்கு..
Tr.G.Murugan - 9976677306
நட்புக்கு மரியாதை செய்ய இங்கே தெரிவித்து உள்ளேன். வாய்ப்பிருப்பவர்கள்பயன்படுத்தி கொள்ளவும்.
என்றென்றும் அதே அன்புடன் தங்கள் இனிய ஜானி!!

Comments

நல்ல பதிவு! லிஸ்ட் எல்லாம் போட்டுருக்கீங்க! பார்த்து, காவலர் வீட்டிலேயே களவாண்டு விடப் போகிறார்கள் நமது காமிக்ஸ் வெறியர்கள்! ;)

அப்புறம் word verification எடுத்துட்டா நல்லா இருக்கும்!
நண்பர் திரு ஜான் சைமன்,

நான் எனது பெயரை உங்களது லிஸ்டில் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நன்றிகள் பலப்பல :)

நீங்கள் கூறியுள்ளது போல, உங்களது தகவல் "மாதம் ஒரு வாசகர்" என்ற பகுதியில் வெளிவந்த புத்தகம் என்னிடம் உள்ளது நண்பரே :)

விஜயா கோழி பண்ணை, விழுப்புரம் என்ற முகவரியுடன் சரியா ?

ஸ்கேன் செய்து அனுப்பி வைக்கிறேன் என்பதை விட ஸ்கேன் செய்யாமலே அனுப்பி வைத்தால் என்ன ? ஆம் இந்த புத்தகம் உங்களிடம் இல்லாத பொழுது, இதை உங்களிடமே கொடுத்து விடலாம் என முடிவு செய்துள்ளேன்.

என்னால் முடிந்த அளவு நான் பழைய புத்தகங்களை சேகரிக்க தொடக்கி உள்ளேன். (அப்படி கிடைத்ததுதான் உங்களது புத்தகம்). ஆனாலும் ஒரு சில புத்தகங்கள் (குறிப்பாக டைகர் மற்றும் டெக்ஸ்) எனக்கு கிடைக்காதது உங்களிடம் உள்ளது. தங்களால் முடிந்ததால் (!) அந்த சில புத்தகங்களை மட்டும் எனக்கு கொடுத்தால் (டைகர் மற்றும் டெக்ஸ் மட்டும் ) நான் படித்துவிட்டு நல்ல படியாக உங்களிடமே திருப்பி கொடுத்து விடுவேன் (இவை இன்னும் நான் படிக்காதவை என்பதால்)

கூடிய விரைவில் உங்களது தகவல் உள்ள புத்தகம் உங்களை வந்தடையும் (நான் இன்னும் படிக்கவில்லை, இந்த வாரம் படித்து விட்டு உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்)

உங்கள் நண்பன்
நாகராஜன் சாந்தன்
parimel said…
என்னிடம் புயல் படலம் உள்ளது. நண்பர் நாகராஜன் சாந்தன் அனுப்பவில்லை என்றால் நான் உங்களுக்கு அனுப்ப தயாராக உள்ளேன்.
நண்பர் பரிமேல்,

அந்த புத்தகம் புயல் படலம் அல்ல. அது பெர்முடா படலம் .....

புயல் படலம் புத்தகம் என்னிடம் இல்லை. எனவே அந்த புத்தகத்திலும் நண்பரின் தகவல் உள்ளதா என தெரியவில்லை.

அடுத்த வாரத்தில் நான் நண்பர் ஜான் அவர்களுக்கு இதை அனுப்பி வைக்கிறேன் ...

நாகராஜன் சாந்தன்
John Simon C said…
அந்த வோர்ட் வேரிபிகாதியன் எடுக்கும் முறையை கொஞ்சம் சொல்லி கொடுங்க சாமீய்ய்!!!
John Simon C said…
நன்றி நாகா!! மிக்க நன்றி ஜி ! தங்க மனசுக்கரர்களுக்கு என்றுமே பஞ்சம் இல்லை என்று காட்டி விட்டீர்கள் ஜி! மறக்க முடியாத ஒரு பரிசினை அளித்து விட்ட்டீர் தோழரே!
John Simon C said…
நாகா எந்த ஊரில் இருக்கிறீர்கள்?
நான் சென்னை வாசி. என் முகவரியை தங்கள் மின்னணு முகவரிக்கு அனுப்புகிறேன்! தங்கள் மின்னணு முகவரி?
அப்படியே தங்களுக்கு தேவையான நூல் பற்றி தகவல் கொடுங்களேன்!!!
jsc.johny@gmail.com
John Simon C said…
மிக்க நன்றி பரிமள்! தங்கள் அன்புக்கு எனது நன்றிகள்!
http://www.bloggernanban.com/2012/02/word-verification-22.html
John Simon C said…
இவ்ளோ நல்லவங்க நிறைந்த காமிக்ஸ் உலகில்தான் நாம இன்னும் இருக்கோம்! இருந்தாலும் யாரோ எங்கோ கிளப்பி விடும் வதந்திகளுக்கு பஞ்சமே இல்லாமல் போய் எல்லோரையும் அலற வைக்கிறது இல்லையா நண்பர்களே!
அன்பு மட்டுமே வெல்லும்! நிலைத்து நிற்கும்! பரிமள், நாகா ஆகியோர் இதற்கொரு சிறந்த முன்னுதாரணம்!
John Simon C said…
நன்றி கார்த்தி அவர்களே! உங்க பதிவுகளில் நிறைய கேள்விகள் உள்ளன அந்த பத்து கட்டளைகளைதான் சொல்கிறேன் அப்புறம் அங்கே வரேன்!
John Simon C said…
ஜி திருத்தி விட்டேன் மிக்க நன்றி ஜி எல்லாம் உங்க கிட்ட இருந்து கற்று கொள்வதுதான் !!!
ஹி ஹி ஹி
P.Karthikeyan said…
உங்கள் வெளிப்படையான இந்த பதிவு மூலம் என் மனச ரொம்ப டச் பண்ணிடீங்க நண்பரே. முதல் வேலையா ஆபீஸ் விட்டு வீட்டுக்கு போனதும் 'புயல் படலம்' என்கிட்டே இருக்கன்னு பார்கபோறேன்
Meeraan said…
உங்க லிஸ்ட்ட பார்த்தா பொறாமையா இருக்குங்க
Meeraan said…
உங்க லிஸ்ட்ட பார்த்தா பொறாமையா இருக்குங்க
நண்பர் ஜான்

தங்களது முகவரிக்கு மெயில் அனுப்பி உள்ளேன்.

நாகராஜன் சாந்தன்
John Simon C said…
மிக்க நன்றி கார்த்திக் ஜி
John Simon C said…
நண்பர் திரு மீரான் அவர்களே! எல்லாம் நம் நண்பர்களது அன்பும் மற்றும் நான் காமிக்ஸ் கேட்கும்போதெல்லாம் பணத்தை அள்ளி தந்த என் காமிக்ஸ் ரசிக்கும் இனிய குடும்பம் மட்டும்தான் இதற்கு மூல காரணம் ஜி! அவர்களுக்கு என் கோடானு கோடி நன்றிகள்!
Erode M.STALIN said…
டால்டன் சகோதரர்களே எங்கப்பா போய்டீங்க ......ஒரு செம ஆளு நம்மளாண்ட மாட்டிகிட்டாரு வாங்க உடனே போய் லவட்டிகிட்டு வந்துரலாம் ..... தலையாரி வூடுன்னு பயந்துகிட்டு வராம உட்டுராதிங்க ..... லக்கி லூக்க அடுத்த மாதம் தான் ஆசிரியர் வெளிவுடுறாராம்


ஹீ ஹீ .... நானும் இந்த பட்டியலை கூடிய விரைவில் போட்டு அனைவரின் வைத்தெரிச்சலையும் வாங்கி கட்டிகிறேன்
John Simon C said…
தேங்க்ஸ் ஸ்டாலின் ஜி! நாமல்லாம் சுனாமியிலையே சும்மிங் போடுரவுங்க! இதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்!
போடுங்க போடுங்க அப்பத்தான் நிறைய பேர் முன்வருவாங்க! திருட்டு சிடி போல திருட்டு நண்பர்களும் குறைவாங்க! நல்ல ஆரோக்கியமான சூழல் உருவாகும்!
இது தமிழ் காமிக்ஸ் மறுமலர்ச்சி யுகம் பாஸ்! அட இதையும் தலைப்புக்கு அனுப்பி இருக்கலாமோ?
John Simon C said…
அப்புறம் தலையாரி வீட்ல ஆட்டையை போட வந்தா வேப்பிலை வரவேற்புக்கு நான் கியாரண்டி! ஹி ஹி
நண்பர் ஸ்டாலின்,
புத்தக லிஸ்டுடன் உங்களது வீட்டு முகவரியும், புத்தகங்கள் எங்கு உள்ளது என்ற தகவல்களையும் தந்தாள் நன்றாக இருக்கும்.

நண்பர் ஜான்,
வேப்பிலை வரவேற்பு எல்லாம் வேண்டாம். எங்களது நோக்கமே வேற :)

நாகராஜன்
Erode M.STALIN said…
புத்தகத்தை எங்காவது மறைத்து வைத்தபின் முகவரிதருகிறேன். ஆனால் புத்தகம் இருக்கும் இடம் கன்னி தீவை சிந்துபாத் கண்டுபிடிபதைவிட மோசமாக இருக்கும்
John Simon C said…
மிக்க நன்றி நாகா!
தங்களை பார்த்ததே சந்தோசம்தான்! பேச மிக குறைவான வினாடிகளே கிடைத்தாலும் DUTY FIRST JOLLY NEXT என்பது என்றுமே நல்லது!
இதனால் சகல ஜனங்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் நம் நண்பர்கள் என்றுமே தாய் குணம் படைத்தவர்கள் என்பதை இங்கே சொல்லி கொள்ள விரும்புகிறேன்! நண்பர் நாகராஜன் சாந்தன் அவர்கள் ஒரு பைசா கூட பெறாமல் எனது தகவல்கள் வெளி வந்த பெர்முடா படலம் என்ற லயன் காமிக்ஸ் புத்தகத்தை எனக்கு கொடுத்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்!என்பதை அன்போடு தெரிவித்துகொள்கிறேன்! அவரின் தயாள குணம் குறித்து நேரில் நன்றி தெரிவிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. மிக்க நன்றி நண்பா! உனக்கு எனது மனம் நெகிழ்ந்த நன்றிகள். எனக்கு இந்த நூல் கிடைக்க முயன்ற அத்தனை நல்ல மனம் படைத்த நண்பர் படைக்கும் எனது வணக்கங்கள்.
John Simon C said…
மிக்க நன்றி நாகா!
தங்களை பார்த்ததே சந்தோசம்தான்! பேச மிக குறைவான வினாடிகளே கிடைத்தாலும் DUTY FIRST JOLLY NEXT என்பது என்றுமே நல்லது!
இதனால் சகல ஜனங்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் நம் நண்பர்கள் என்றுமே தாய் குணம் படைத்தவர்கள் என்பதை இங்கே சொல்லி கொள்ள விரும்புகிறேன்! நண்பர் நாகராஜன் சாந்தன் அவர்கள் ஒரு பைசா கூட பெறாமல் எனது தகவல்கள் வெளி வந்த பெர்முடா படலம் என்ற லயன் காமிக்ஸ் புத்தகத்தை எனக்கு கொடுத்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்!என்பதை அன்போடு தெரிவித்துகொள்கிறேன்! அவரின் தயாள குணம் குறித்து நேரில் நன்றி தெரிவிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. மிக்க நன்றி நண்பா! உனக்கு எனது மனம் நெகிழ்ந்த நன்றிகள். எனக்கு இந்த நூல் கிடைக்க முயன்ற அத்தனை நல்ல மனம் படைத்த நண்பர் படைக்கும் எனது வணக்கங்கள்.
John Simon C said…
kaarthi erichalootum pathivuukku guiaranti enru alaikkiraar ananivarum vaarungal "http://www.bladepedia.com/2012/05/blog-post_12.html" Ku!
நண்பரே

அடுத்தவரை மகிழ்வித்து பார்ப்பது நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

இந்த புத்தகத்தை நீங்கள் பெற்ற பொழுது நீங்கள் அடைந்த மகிழ்ச்சியே எனது சந்தோசம் :)

நாகராஜன்
நண்பா...உங்கள் காமிக்ஸ் ஆர்வம் என் பள்ளிகூட நினைவை யாபகபடுத்தி விட்டது. மிக அருமையான பதிவு. மாயாவி- இந்த வார்த்தையை வாழ்நாள் முழுதும் என்னால் மறக்கவே முடியாது.
நண்பா...உங்கள் காமிக்ஸ் ஆர்வம் என் பள்ளிகூட நினைவை யாபகபடுத்தி விட்டது. மிக அருமையான பதிவு. மாயாவி- இந்த வார்த்தையை வாழ்நாள் முழுதும் என்னால் மறக்கவே முடியாது.
Abisheg said…
உங்கள் கலாட்டாக்களும்,அந்த நாள் ஜாபகங்களும் அருமை jsc ஜான் சைமன் ஸார்.

//மன்னிப்பு கேட்டு,ஆனாலும் கொள்ளைகள் தடுக்கப்பட வேண்டியவையே!//
என்று ராணி கொமிக்ஷில் வரும் முன்னாள் கொள்ளையன் ஜானி போல் சொல்லி விட்டீர்கள்,இல்லை உங்கள் கலெக்சனை கொள்ளையடிக்க வேண்டும் என்ற வெறியே வந்திருக்கும்.
John Simon C said…
he he he abisheg ji! nanrigal pala
NARESH KUMAR said…
ஜானி சார் உங்கள் சேகரிப்பு அருமை உங்கள் உள்ளமும் நட்பு மும் அதை விட அருமை
NARESH KUMAR said…
ஜானி சார் உங்கள் சேகரிப்பு அருமை உங்கள் உள்ளமும் நட்பு மும் அதை விட அருமை
John Simon C said…
மிக்க நன்றி நரேஷ் ஜி! நம் நண்பர் வட்டம் என்றுமே தழைத்திருக்கும் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே. அனைவரும் வாழ்க!

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!