Monday, 30 July 2012

லயன் 28-ஆவது ஆண்டு மலர்!

அன்பு நிறைய உள்ள அன்புக்கும் பாசத்திற்கும் கட்டுப்பட்ட நண்பர்களே!
       லயன் இருபத்தெட்டாவது ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் இந்த பொன்னான தருணத்தில் நம் ஆசிரியர் திரு விஜயன் அவர்கள் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் வேளையில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். 
              லக்கி லூக்குக்கே இது ஒரு அட்டகாசமான வெளியீடுதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரது அனைத்து சாகசங்களுமே அமர்க்களமாக அமைந்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். சும்மா இருக்கட்டுமே என்று இந்த பதிவை ஆரம்பித்தேன். நல்ல காமிக்ஸ் கதை சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்திழுக்கும் எந்த காலத்துக்கும் ஏற்ற கதை. லயனின் இருபத்தெட்டு வருட பாய்ச்சலில் பிறந்திருக்கும் அருமையான கதை. ரூபாய் நூறு விலையில் நம்மை மகிழ்விக்க லயன் பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ள இந்த கதை சிவகாசியில் கிடைக்கிறது. மிஸ் பண்ணி விடாதீர்கள் உங்க காப்பிக்கு முந்துங்க.. உங்க ஆர்வத்தை தூண்டும் விதமாக சில பக்கங்கள் உங்க கண்களுக்கு! சிறப்பான விமர்சனத்திற்கு அணுகவும் கிங் விஸ்வாவின் தமிழ் காமிக்ஸ் உலகம் ப்ளாக்..
         
          நம்ம காமிக்ஸ் ரசிகர்களின் முதல் சாய்ஸ் எப்போவுமே ஹாட் லைன் பகுதிதான். அதிலும் சார் ப்ளாக் ஆரம்பித்தது முதல் ஒரே கொண்டாடமாகத் தான் போய்கிட்டு இருக்குது! அவர் மகனுக்கு இந்த தருணத்தில் நம்ம அனைவரது சார்பிலும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். 

எனக்கு நண்பர் திரு.புளிய சாத்தான் ச்சே ச்சே புளிய வேதாளம் அடச்சே புனித சாத்தான் அவர்கள் வாங்கிய பஜ்ஜி (அதான் சார் இந்த புத்தகத்திற்கு பெயர் வைக்க கிட்டிய நல்வாய்ப்பு ) மீதுதான் அதிக ஆசை. இன்னும் நிறைய அவர் சாதிக்க நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்! அட்டகாசமான பெயர் சூட்டி நம்மை மகிழ செய்த அவருக்கும் நம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த நூலுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்த நமது ஆசிரியர் திரு.விஜயன்  சௌந்திர பாண்டியன் அவர்களுக்கும் நன்றிகள் பல உரித்தாகுக!

Add caption
மாதர் குல திலகம், அகில உலக நாயகி, மக்கள் மனதில் முடி சூடா கனவு கன்னி, உயர்ந்த அழகி, சிறந்த வீராங்கனை, அட்டகாசமான, ஆர்ப்பாட்டமான அதிரடிக்காரி, சாகசக்காரி, இளவரசி (இல்லேன்னா வில்லி கிட்ட எவன் மாட்டி உதைபடறது? ) மாடஸ்டி ப்ளைசி முத்துவின் நாற்பதாவது ஆண்டு வெளியீட்டில் வந்து அதிரடி செய்ய போவது மிக மிக மிக நல்ல செய்தி. இந்த புக் வேணும்னா உடனே ஒரு நானூற்று முப்பதைந்தினை பிரகாஷ் பதிப்பகம், சிவகாசிக்கு அனுப்பிடுங்க. இது உருண்டு புரண்டாலும் அப்புறம் கிடைக்கவே கிடைக்காத அற்புதமான புத்தகமாகும். கிடைத்த வாய்ப்பில் முதலில் முயல்பவன் அறிவாளி மட்டுமல்ல புத்திசாலியும் கூட என்று நித்தியானந்த மகரிஷி சொல்லி இருக்காராம் இவர் நீங்க நினைக்கிற "அவர்" இல்லை நண்பர்களே! அப்புறம் பார்த்து கொள்ளலாம் என்று தாமதம் செய்ய வேண்டாம் நண்பர்களே. உடனே செயல்படுவீர்! புதையலை சொந்தமாக்குவீர்!  இப்படிதான் கூலாக ஆரம்பிக்குது கதை வழக்கமா நம்ம டால்டன் பயல்கள் தப்பிக்கும் முறைகள் சிரிப்பை வரவழைக்கும். இம்முறை அவர்கள் தப்பிக்கும் காட்சி...... அப்போ நடக்கற சங்கதிதான் என்றாலும் நம்ம லக்கிய பார்த்து விடாது கருப்பு ரேஞ்சுக்கு பயந்து ஓடும் நண்பர்கள் அடைக்கலம் ஆவதோ ஒரு துன்பியல் நாடகம். அவர்களது ஓட்டம் நமக்கெல்லாம் கொண்டாட்டம்! அதான் இங்கே அசத்தலே! 


நம்ம டால்டங்க எங்க போனாலும் வில்லங்கமா ஏதாவது பண்ணி பிரச்சனையை கிளப்பி விட்டு நம்மை வயிறு குலுங்க சிரிக்க வச்சிடுவாங்க. 
அவர்களது அட்டகாசம் அவர்களின் நாட்டை தாண்டி கனடாவில் ஒலிக்கிறது. அங்கே செய்யும் கலாட்டாக்கள் அமர்க்களமாக அமைந்து உள்ளன!
வாழ்க்கை பாதையில் வானவில்லை தேடி பயணம் போகும் ஒரு கும்பலின் கதைதான் "வானவில்லை தேடி" நல்ல ஒரு கதைக்கு தேவை என்ன? அதில் வரும் படைப்புகள் இதில் வரும் கதை மாந்தர்கள் அனைவருமே வறுமைக்கு வாழ்க்கைப்பட்டவர்கள். துன்பம் என்ற நெருப்பை தங்கள் சிரிப்பு என்னும் தண்ணீரால் அணைக்க பழக்கப்பட்டவர்கள்! வாழ்க்கையில் வசந்தம் வந்து அரவணைக்கும் என்று எதிர்பாராமல் வானவில்லாம் வாழ்வின் இன்பக்கதவுகளை தாங்களே தட்டி பார்த்து விடும் முயற்சியில் துணைக்கு அழைக்கிறார்கள் நண்பர் லக்கி லூக்கினை!!!! அவரது வழிகாட்டுதல் எந்த அளவுக்கு உதவியது? அதில் நண்பர் ஜாலி ஜம்பரின் உதவி என்ன? என்ற விடைகளுக்கு மறவாமல் வாசியுங்கள் நியூ லுக் ச்பெசியல் (ஹி! ஹி! ஹி! கொஞ்சம் இலக்கியம் முயன்றேன் ) 


இந்த கதையில் ஒரு அறிவாளி ஆராய்ச்சி சிகரம் வருகிறார். அவரும் அவரது கண்டுபிடிப்புகளும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க செய்யும். அதில் சாம்பிளுக்கு ஒன்று உங்களின் அன்பான பார்வைக்காக .....

இது போன்ற அதிரடிகளும் சிரிப்பூட்டும் அனுபவமும் பெற புத்தகத்தினை கையில் வாங்கி படியுங்க மக்கா.

ஆச்சரியங்கள் வாழ்க்கையில் அலுப்பூட்டும் நிமிடங்களை நம்மை விட்டு விலகி ஓட செய்யும் அல்லவா? நம் லயன் ஆசிரியர் ஆச்சரியங்களுக்கு ஒட்டு மொத்த குத்தகை தாரர் போல அவ்வப்போது நம்மை வியப்பில் ஆழ்த்துவார். காரிகனின் சகாப்தம் முடிந்ததே என்கிற கவலையில் ஆழ்ந்த எனக்கு மிக வியப்பூட்டியது இந்த காரிகனின் அதிரடிதான்.  மனித வேட்டை ஒரு மரண வேட்டை! இம்முறை மோதும் வில்லனுக்கும் காரிகனுக்கும் நேரடி பகையே கிடையாது. ஆனால் இவரின் வேட்டை வெறிக்கு இம்முறை இலக்காகும் நபர் காரிகன். அதுதான் இவர் செய்த மிக பெரிய பிழை! 

இதில் சில காட்சிகள்.

 மக்களே புக் வாங்கி படிங்க. கையில் வைத்து படிப்பதில் அதுவும் அதன் புது வாசனையை நுகர்ந்து கொண்டே படிப்பது என்பது மிக அருமையான விடயம் நண்பர்களே. நிறைய  படிங்க நிறைய ரசிங்க நிறைய இணையதளத்தில் நம்ம முத்து பக்கத்தில் உங்க கருத்து மலையை கொட்டுங்க நண்பர் கருத்துகளை பதிவிடுங்க. இங்கே சென்னையில் சமீபத்தில் லாந்து மார்க் போனேன். ஒரு நடுத்தர வயது அம்மா, பார்க்க வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் போலிருந்தார்.  தனது குழந்தைகளுக்கு தமிழ் காமிக்ஸ்தான்  வேண்டுமென்று கொடி பிடித்து கொண்டிருந்தார். இன்றும் கூட நம் தமிழ் மொழியாம் தாய் மொழியில் காமிக்ஸ்க்கு தேவை இருக்கிறது.  நல்ல தமிழ் காமிக்ஸ்கள் வளர வேண்டும் நண்பர்களே!  அதுக்கு நீங்க காசு கொடுத்து உங்க நண்பர்கள் குழந்தைகள் அனைவருக்கும் நம்ம காமிக்ஸ் வெளியீடுகளை வாங்கி கொடுத்து மகிழ செய்யலாமே!  சரியா? மாற்றம் என்ற ஒன்றை தவிர எதுவும் மாறாதது தானே நண்பர்களே! இன்னும் கொஞ்சம் விவரங்கள் பின்னர் சேர்க்கிறேன்! வாழ்க! வளர்க! 

அன்பு உள்ளம் கொண்ட சிநேகிதர்களுக்கு சிநேகத்துடன் உங்கள் அன்பின் நண்பன் 16 comments:

 1. நண்பரே எல்லாம் சரி கடைசியில் கையில் துப்பாக்கியோடு பயமுறுத்திவிட்டீங்க போங்க :))
  .

  ReplyDelete
 2. நண்பர்களே உரிமையின்றி வெளியிடப்பட்ட லக்கி லூக் கலர் காமிக்ஸ்களில் ஒன்று உங்கள் பார்வைக்கு.

  http://soundarss.blogspot.in/2012/07/lucky-luke-color-comics.html

  ReplyDelete
 3. நண்பரே !!!

  எல்லாவற்றிலும் சூப்பர் கடைசியாக உள்ள "சிங்கம்" ஜான் சைமன் அவர்கள்தான் :)

  தொடர்ச்சியாக இரண்டு பதிவுகளை போட்டு தாக்கி விட்டீர்கள்.. அருமை..

  ஸ்கேன் செய்த படங்கள் எல்லாம் மிக பெரிய சைசில் உள்ளது. அவற்றை சிறியதாக விண்டோ சைசில் வருமாறு வைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

  நாளை உங்களது அடுத்த பதிவை எதிர்நோக்கி உங்கள் நண்பன்.

  (ஏதோ என்னால முடிஞ்சது...)

  ReplyDelete
 4. தலைவரே,
  சூப்பர் பதிவு.

  But இன்றைய தினம் ஒரு சோகமான தினம். ஆகையால் பிறகு வந்து கமென்ட் இடுகிறேன்.

  ReplyDelete
 5. நன்றிகள் பல நண்பர்களே! உங்க அன்புக்கும் ஆதரவிற்கும் என்றும் நான் கடமை பட்டவனாவேன்! நண்பர் கிங் அவர்களே! அது எப்படி உங்க படங்களை கிளிக் செய்தால் வேறு டேபிள் திறக்கிறது? ஸ்டாலின் சார் எனது பதிவில் உள்ள போட்டோக்களை கிளிக் செய்தா மிக தெளிவின்றி தெரிவதாக சொன்னார். அதை சரி செய்ய தங்கள் உதவி தேவை அதான் பெரிய படங்களை அப்படியே போட்டு விட்டேன்.

  ReplyDelete
 6. good post friend in you own style

  ReplyDelete
 7. //துன்பம் என்ற நெருப்பை தங்கள் சிரிப்பு என்னும் தண்ணீரால் அணைக்க பழக்கப்பட்டவர்கள்! வாழ்க்கையில் வசந்தம் வந்து அரவணைக்கும் என்று எதிர்பாராமல் வானவில்லாம் வாழ்வின் இன்பக்கதவுகளை தாங்களே தட்டி பார்த்து விடும் முயற்சியில் துணைக்கு அழைக்கிறார்கள் நண்பர் லக்கி லூக்கினை!!!!//


  யென்னமா எலுதிக்கீர தலீவா.... சூப்பர் பீலிங்மா உன்கு......படு சோக்கா கீது.....

  ReplyDelete
 8. நல்வரவு நண்பர் திரு அருண் அவர்களே! நம்ம ஸ்டாலின் சார் சென்னை பக்கம் வந்து போனதாக தகவலே இல்லையே ஆனால் சென்னை தமிழில் பிச்சி உதறுகிறார். நான் TNPSC க்கு தயாராக முயல தமிழ் எம்மை பிணைத்தது.

  ReplyDelete
 9. Pathivu arumaiyaka ullathu valthukal...

  ReplyDelete
 10. நல்வரவு நண்பர் சாக்ரடீஸ் அவர்களே நன்றிகள் பல

  ReplyDelete
 11. நல்ல பதிவு நண்பரே அடிக்கடி பதிவிடுங்கள். உங்களுக்கே உரிய பாணியில் அமைந்திருப்பது உங்கள் பதிவின் சிறப்பு.

  ReplyDelete
 12. நண்பரே, தரம் வாய்ந்த உங்களது ,அற்புதமான விமர்சனம் மற்றும் விளம்பரம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது,விளம்பரத்திற்கு உங்களது இந்த பதிவையே வைக்கலாம் .தூள் கிளப்பிட்டீர்கள் .இதனை அப்படியே காப்பி செய்து நமது ஆசிரியரின் வலைத்தளத்திலும் ஏற்றவும் கார்த்திக் போல .

  ReplyDelete
 13. நண்பரே, தரம் வாய்ந்த உங்களது ,அற்புதமான விமர்சனம் மற்றும் விளம்பரம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது,விளம்பரத்திற்கு உங்களது இந்த பதிவையே வைக்கலாம் .தூள் கிளப்பிட்டீர்கள் .இதனை அப்படியே காப்பி செய்து நமது ஆசிரியரின் வலைத்தளத்திலும் ஏற்றவும் கார்த்திக் போல .

  ReplyDelete
 14. கண்டிப்பாக நீங்கள் கொடுத்துள்ள போசை போலவே ,இலக்கி தரம் வாய்ந்ததே நீங்கள் செய்துள்ள போஸ்டும்.

  ReplyDelete
 15. வணக்கம் இரும்பு கையரே பணிகள் மிக அதிகம்!! அதான் உடனே பதில் அளிக்க முடியலை! நீங்க சொன்ன மாதிரி லிங்க் mattum அவர் ப்ளாக்ல போட்டு விட்டேன்!

  ReplyDelete

மலர்_24_இதழ்_33_3.00_ தளபதி சதி_வேதாளர்_இந்திரஜால் காமிக்ஸ்_அலெக்ஸ்சாண்டர்

ஹாய் ஆல்... இது இந்திரஜால் காமிக்ஸ் நேரம்.. இப்போது தளபதி சதியை உங்களுக்கு வழங்க முன்வந்து தானே கைபேசி வழி ஒளி வருடல் செய்து முயற்சித்தி...