புதன், 25 டிசம்பர், 2013

விண்வெளியில் ஓர் அதிரடி!!!

           அன்பிற்கினிய அனைத்து காமிக்ஸ் நேயர்களுக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்! நம்ம லயனின் அதிரடி காமிக்ஸ் வெளியீடான அபாயம் மிக்கவன்; ஆபத்து நிறைந்தவன்; டேன்ஜர் டயபாலிக்.

          இவரின் மறு வருகை மாபெரும் வரவேற்பினை தமிழ் கூறும் நல்லுலகு நிகழ்த்திக்காட்டியுள்ள இந்த இனிய நாட்களில் சுமார் இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன்பதாக வெளியாகி இத்தனை காலம் அடங்கிக் கிடந்த முதல் சாகசம் அவ்வப்போது ஆங்காங்கே தலை நீட்டித் தனது தனித் தன்மையை பறை சாற்றி வருகிறது! இந்த மகிழ்ச்சி நிறை வேளையிலே அந்த காமிக்ஸில் வெளியான ஒரு எட்டுப் பக்க சாகசம் உங்கள் பார்வைக்கும் லயன் இதழ்களில் சந்தா கட்டும் எண்ணத்தை ஊக்குவிக்கும் நல் எண்ணத்துடனும் இங்கே உங்கள் பார்வைக்கு....   







"அற்புதமான அந்த நண்பருக்கும், எங்கள் நிமித்தம் நீங்கள் காட்டும் அக்கறைக்கும் மிக்க நன்றி சார்! சென்னையில் அப்படி ஒரு நூலகம் அமைக்கும் எண்ணத்தில்தான் நண்பர் சொக்கலிங்கம் மற்றும் சில நண்பர்கள் முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம்! இதே போன்ற நல்ல உள்ளம் கொண்ட; அதீத விலை கேட்காத அன்பு நண்பர்கள் யாரேனும் மீண்டும் அணுகினால் தயவு செய்து எனக்கு தெரிவிக்கவும்! சென்னையிலும் ஒரு இலவசமாகப் படித்து செல்லும் வகையில் ஒரு நூலகம் இருப்பது நல்லதுதானே சார்!_இது நம் அன்பு ஆசிரியர் திரு.விஜயன் அவர்களின் http://lion-muthucomics.blogspot.in/2013/12/blog-post_24.html வலைப் பூவில் தெரிவித்துள்ள கருத்து நண்பர்களே! உங்கள் எண்ணங்களை எங்களுக்கு தெரிவிக்க மறவாதீர்கள்! அப்படியே அரிய புத்தகங்களை நமக்கு அளிக்க முன்வரும் நண்பர்களிடமும் இது குறித்து விவாதிக்க மறவாதீர்கள்!  

செவ்வாய், 24 டிசம்பர், 2013

இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!!!

அன்பு நிறை நெஞ்சங்களே!
இனியதொரு பொழுதினிலே உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி!! அனைவரும் நலமா? நாம் இப்போது படிக்கவிருப்பது
          மோயீசன் (எ) மோசஸ் (எ) மூஸா அலை ஹி சலாம் அவர்களது பாதை! இஸ்ராயேல் மக்களை இறைவன் வழிநடத்த ஒரு தலைவரை தேடுகிறார்! அந்தத் தேடலில் மலர்ந்த அன்பு நெஞ்சம் மோசஸ்!!! பெற்ற தாயால் நைல் நதியில் வீசப்பட்ட சூழலில், நன் மனம் படைத்த  எகிப்திய தேச இளவரசி ஒருவரால் ஆதரிக்கப்படும் நண்பர் மோசஸ் வாழ்வில் இறைவன் ஒரு தீப்பறக்கும்  முள் செடி ஒன்றின் மூலமாகக் குறுக்கிடுகிறார்! 
        அடிமைத்தனத்தில் சிக்குண்டு பிரமிடுகளையும், ஸ்பிங்க்ஸ்களையும் எகிப்தின் மாபெரும் கட்டுமானங்களையும் கட்டிக் கொண்டு பாடுபடும் ஜனங்களை மீட்க எகிப்தின் மன்னரினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இறைவன் தேர்ந்து கொண்ட பாத்திரம் மோயீசன் என உணர செய்து சில பல மந்திர வித்தைகளை அருளி அனுப்பி வைக்கிறார்!
           தனது சகோதரன் ஆரோன் (எ) ஹாரூன் அவர்களுடன் சென்று மன்னனை தரிசித்து அவனது அவையில் உள்ள மாந்திரீகர்களை தோற்கடித்து தன் சொந்த மக்களான இஸ்ரவேல் மக்களை செங்கடலைப் பிளந்து வழிநடத்தி கானான் தேசம் சேர்க்கிறார் நண்பர் மோயீசன் அவர்கள்! இந்த கிறிஸ்துமஸ் தினத்தில்  தங்களுக்கு இந்த அன்பளிப்பை நல்குவோர் --ரா.தி.முருகன் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர்! அவர்களுக்கு என் நன்றிகளை நம் வலைப்பூ  தெரிவித்துக்கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அன்று செங்கடல் கடந்து இரவில் நெருப்புத் தூணாக, பகலில் மேகத் தூணாக நின்று இஸ்ராயேல் மக்களை வழி நடத்தியது போன்று இன்றும் உங்கள் அனைவரையும் நல்வழி காட்டி ஆசீர்வதிப்பாராக!!!ஆமென்!
(ஆமென் என்பதற்கு அப்படியே ஆகட்டும் என்று பொருள்!!)  




































RELATED ARTICLES:

செவ்வாய், 17 டிசம்பர், 2013

நான் கட்டிட்டேன்.....அப்ப நீங்க?

இனிய வணக்கங்கள் நண்பர்களே! நம்ம லயன் காமிக்ஸ் குழும சந்தா படிவம்! வருடம் ஒரு முறை சந்தா செலுத்துவதுடன் நம்ம பணி முடிந்தது! புத்தகத்தை சிறந்த முறையில் தயாரிப்பதில் இருந்து வீட்டு வாசல் வரை புத்தகங்களை கொண்டு வந்து சேர்ப்பிப்பது வரை அனைத்துப் பொறுப்புகளுக்கும் லயன் காமிக்ஸ் குடும்பம் காட்டும் அக்கறை அளவுகோல் தாண்டியது! ஆகவே உங்களது அருமையான கனவுப்பட்டறை காமிக்ஸ்களால் அலங்கரிக்கப்பட மறவாமல் செலுத்துவீர் சந்தா! புத்தம் புது புத்தகங்கள் உங்களைத் துரத்திடும் உருண்டோடும் பந்தா! லயன் ஆசிரியரிடம் இல்லாதது பந்தா! கட்டிட்டு அவ்வப்போது கொடுப்பீர் லந்தா... ஹீ ஹீ ஹீ!
அப்புறம் சில அட்டைகளின் ஸ்கான் பக்கங்கள் நம்ம தேவைக்கும் பதிப்புகளுக்கும் ஏற்றதாக வித்தியாசமான நிறங்களிலும் வண்ணங்களிலும் சின்னச் சின்ன மாறுதல்களுடன் வந்த காலமும் ஒன்று உண்டு! அதில் என் கண்ணில் பட்டதொரு வித்தியாசமான அட்டை!!!

அப்புறம் எனக்கு ஒரு சந்தேகம்! இந்த லயன் விடுமுறை மலர் குறித்து உங்கள் எண்ணங்களை எழுதுங்களேன்!
அட்டையை அலங்கரிப்பது பாட்டில் பூதம்தான் என்றபோதிலும் கதை பெருச்சாளிப் பட்டாளத்தினருடையது!  ஆகாயக் கோட்டை என்பதோ ஒரு கட்டுரை! விச்சு கிச்சு இருந்தாலும் நம் அன்பு ஆசிரியரின் ஹாட் லைன் இல்லை! இதில் இன்னொரு கொடுமை என்னன்னா லயன் வெளியீடு என்பதற்கு கதையின் முடிவில் வெளிவரும் வெளியீட்டு எண் பக்கமும் இல்லை! விவரம் அறிந்த பெருமக்கள் விடை தந்து உதவலாமே????
கதை என்னன்னா......






அப்புறம் இன்றுதான் ஒரு காவலராக பிரேத பரிசோதனை சென்று அனைத்துப் பணிகளையும் செய்து கற்று வந்தேன்! வாழ வேண்டிய வயதில் ஒரு சகோதரி தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டார்!அவரதுஆன்மாு ்ுசாந்தி ்ொஅடைய ்எல்லாம் ்வல்ல ்இறைவனை மன்றாடுகிறேன்்!
!! 
தற்கொலை என்கிற ஒரு விஷயம் மகா கொடுமையானது தோழர்களே! மனிதரை இறைவன் சிந்தித்து, உணர்ந்து, அன்பு செலுத்தி, பாசம் காட்டி வாழும் பெரிய பரிசுடனேயே இந்த பூமிக்கு அனுப்பி வைக்கிறார்! நம் அன்பினை இப் புவியில் விதைக்கையில் ஆங்கே வெறுப்பும், வஞ்சனையும், பொய்யும், புரட்டும், அழிக்கும் எண்ணங்களும் தோன்றவே தோன்றாது! சக மனிதர்களை நேசியுங்கள்! ஒரே வினாடியில் எடுக்கும் தற்கொலை முடிவானது எத்தனைக்கெத்தனை உற்றாருக்கும் உறவினர்களுக்கும் மகா வருத்தத்தையும் சங்கடத்தையும் கொடுக்கிறது என்பதை நேரில் கண்டேன்! தற்கொலை எண்ணம் வருவது ஒரு விநாடிக் கீற்றினிடையே மட்டுமே தோழமைகளே! அந்த ஒரு நொடியை தீரத்துடனும் கடவுள் நம்மைக் கைவிடார் என்கிற நம்பிக்கையுடனும் கடந்து வாருங்கள்! உலகம் உங்களை இழந்தால் உலகுக்கே மகா நட்டம்! நீங்கள் இந்த பூமியின் விதைகள்! உங்களில் ஒளிந்திருக்கும் சக்தி மகத்தானது! உங்கள் ஆன்மா இந்த உலகை புதுப்பிக்கும்! மலர செய்யும்! மணம் வீசச் செய்யும்! உலகுக்கு நீங்க முக்கியங்க! அன்பினால் அரசாள்வீர்! இறை நம்பிக்கை கொள்வீர்! வாழ்க வளமுடன்!  என்றும் அதே அன்புடன்_உங்கள் அன்பு நண்பர் ஜானி! 

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...