இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!!!

அன்பு நிறை நெஞ்சங்களே!
இனியதொரு பொழுதினிலே உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி!! அனைவரும் நலமா? நாம் இப்போது படிக்கவிருப்பது
          மோயீசன் (எ) மோசஸ் (எ) மூஸா அலை ஹி சலாம் அவர்களது பாதை! இஸ்ராயேல் மக்களை இறைவன் வழிநடத்த ஒரு தலைவரை தேடுகிறார்! அந்தத் தேடலில் மலர்ந்த அன்பு நெஞ்சம் மோசஸ்!!! பெற்ற தாயால் நைல் நதியில் வீசப்பட்ட சூழலில், நன் மனம் படைத்த  எகிப்திய தேச இளவரசி ஒருவரால் ஆதரிக்கப்படும் நண்பர் மோசஸ் வாழ்வில் இறைவன் ஒரு தீப்பறக்கும்  முள் செடி ஒன்றின் மூலமாகக் குறுக்கிடுகிறார்! 
        அடிமைத்தனத்தில் சிக்குண்டு பிரமிடுகளையும், ஸ்பிங்க்ஸ்களையும் எகிப்தின் மாபெரும் கட்டுமானங்களையும் கட்டிக் கொண்டு பாடுபடும் ஜனங்களை மீட்க எகிப்தின் மன்னரினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இறைவன் தேர்ந்து கொண்ட பாத்திரம் மோயீசன் என உணர செய்து சில பல மந்திர வித்தைகளை அருளி அனுப்பி வைக்கிறார்!
           தனது சகோதரன் ஆரோன் (எ) ஹாரூன் அவர்களுடன் சென்று மன்னனை தரிசித்து அவனது அவையில் உள்ள மாந்திரீகர்களை தோற்கடித்து தன் சொந்த மக்களான இஸ்ரவேல் மக்களை செங்கடலைப் பிளந்து வழிநடத்தி கானான் தேசம் சேர்க்கிறார் நண்பர் மோயீசன் அவர்கள்! இந்த கிறிஸ்துமஸ் தினத்தில்  தங்களுக்கு இந்த அன்பளிப்பை நல்குவோர் --ரா.தி.முருகன் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர்! அவர்களுக்கு என் நன்றிகளை நம் வலைப்பூ  தெரிவித்துக்கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அன்று செங்கடல் கடந்து இரவில் நெருப்புத் தூணாக, பகலில் மேகத் தூணாக நின்று இஸ்ராயேல் மக்களை வழி நடத்தியது போன்று இன்றும் உங்கள் அனைவரையும் நல்வழி காட்டி ஆசீர்வதிப்பாராக!!!ஆமென்!
(ஆமென் என்பதற்கு அப்படியே ஆகட்டும் என்று பொருள்!!)  
RELATED ARTICLES:

Comments

King Viswa said…
ஜானி,

உங்களுக்கும்,

உங்கள் குடும்பத்தினருக்கும்,

உற்றார் உறவினருக்கும்,

நட்பு வட்டதிற்க்கும்,

சுற்றத்திற்க்கும்

இனிய கிறித்துமஸ் நல் வாழ்துக்கள்.
நண்பரே,

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் ...
Ramesh said…
இனிய கிறித்துமஸ் நல் வாழ்துக்கள்

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!