திங்கள், 21 டிசம்பர், 2015

கரைந்து மறைந்தவன்...


இனம் பார்த்துப் பழகினேன்
இடியுண்டு விழுந்தேன்.

மதம் பார்த்துப் பழகினேன்
மனமொடிந்து போனேன்.

சமூகம் பார்த்துப் பழகினேன்
சதி சறுக்கி விழுந்தேன்.

மொழி பிரித்துப் பழகினேன்
விழி நீர் வீழ விலகினேன்.

கட்சியின் வெளிச்சத்தில்
கரை வெட்டிகளின் பளபளப்பில்

தோரணங்களின் மயக்கத்தில்
விண் தொடும் விளம்பரங்களைப்

பார்த்துக் கலந்தேன்.
கால் தடுக்கி வீழ்ந்தேன்.

சாக்கடை மீதென் இனிய வதனம்.
இனி எழுவது சாத்தியமே இல்லை

என்றானதும் அப்படியே மறைந்து போனேன்
சூரியனின் முன் பனியாக.


ஆம். 
நான் கரைந்து மறைந்தவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Enter The Phantom_FREW First Issue வேதாளர் முதல் FREW இதழ்_கதைச்சுருக்கம்

 வணக்கங்கள் வாசக தோழமை உள்ளங்களே!                  இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வேதாளர் சித்திரக்கதைகளின் உலகப் புகழ் பெற்ற FREW பதிப்ப...