ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

தாவீது_விவிலிய சித்திரக்கதை வரிசை_011

வணக்கங்கள்  தோழமை உள்ளங்களே.
இது தமிழ் காமிக்ஸ் டைம்ஸ்..நம் தமிழ்  நாட்டிலே  எக்கச்சக்கக் கதைகளும், காவியங்களும் மலர்ந்தும் மறைந்தும் தக்க நேரம் வரும்போது யாராலோ, எவராலோ, எங்கோ ஒரு மூலையில் இருந்து சடுதியில் குதித்துத் தன்னை வெளிக்காட்டிக் கொள்வதுண்டு. கல்வெட்டுகளும் அப்படித்தான், மதுரையம்பதியில் ஒரு மாற்று சிந்தனை கொண்ட கல்வெட்டு ஆராய்ச்சியாளர் வைகை ஆற்றை இரசித்துக் கொண்டிருந்தோர் மத்தியில் புகுந்து சலவையாளர்கள்  அடித்துத் துவைத்துக் கொண்டிருந்த கல்லைப் பார்த்தார். அவர் பார்வையில் அதில் இருந்த வட்டெழுத்துக்கள் மட்டுமே தென்பட்டன. அதனை வைத்து ஒரு மறைந்த மன்னரின் கொடை உள்ளத்தை இனம் காண முடிந்தது. இது போன்று எத்தனையோ எடுத்துக் காட்டுகள்.

சிவில் எஞ்சினியரான திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்கள் தேனியில் உள்ள தன் இல்லத்தில் பாதுகாத்து வைத்திருந்த இந்த தாவீதின் வரலாறு இன்று உங்கள் பார்வைக்கு படிக்கவும், இரசிக்கவும் வைக்கப்பட்டுள்ளது என்றால் அதன் பின்னால் இத்தனை ஆண்டுகளாக அதனைப் பாதுகாக்கவும், அதனை இப்போது டிஜிட்டல் ரூபத்தில் தங்கள் வசம் கொண்டு வந்து சேர்க்கவும் ஆன செலவினங்கள் மற்றும் உழைப்பை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அன்னாருக்கு நன்றிகள். இதோ அந்த மாவீரனின் வரலாறு. வேண்டுவோர் மட்டும் மின்னஞ்சல் இங்கே பதியுங்கள். தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு நேரடியாக இலவசமாக அனுப்பி வைக்கப்படும். 





நிற்க, இதனைப் போன்றே நம் தமிழ்த் தாய்த்திரு நாட்டில் கால வெள்ளம் அடித்துக் கொண்டு போன எத்தனையோ சித்திரக்கதைகளும், இலக்கிய நூல்களும், சித்தர் வாக்குகளும் கணக்கிலடங்கா. அவற்றைக் கண்டு பிடிக்க எத்தனையோ விதமான எண்ணற்ற முயற்சிகள் இன்றளவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் சித்திரக்கதைகளைத் தேடிக் கண்டுபிடிக்கவும் அதனை வெளிக் கொணரவும் இன்றளவும் பிரயத்தனப்படுக் கொண்டுள்ளது. உங்களது இல்லங்களை அலசி ஆராயுங்கள். அப்படி ஏதேனும்
இன்னும் இணைய உலகுக்கு அறிமுகமாகாத எத்தனையோ சித்திரக்கதைகளில் ஒன்றேனும் தங்களிடம் இருக்குமாயின் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அவற்றை மறுபிறவி எடுக்க வைக்கும் முயற்சிகளை இன்றும் என்றும் எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை முறியடித்து வெளிக் கொணர்வோம். தமிழின் சிறுவர் இலக்கியத்துக்கு எங்களால் ஆன தொண்டாற்றுவோம் என்ற உறுதியுடன் விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம்.
_ஜானி சின்னப்பன்.  
இறைவனுக்கு சித்தமிருப்பின். விரைவில்...

6 கருத்துகள்:

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...