வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

சித்திரக் கதையும், சின்னதாய் ஒரு சிந்தனையும்..

வணக்கங்கள் ப்ரியமானவர்களே!
அமெரிக்க நிலத்தின் சார்புடைய கதைகளை மட்டுமே பிரசுரித்து வந்தால் இயல்பாகவே நமது கலாச்சாரம் வில்லும் வாளும் கொண்டே ஆங்கில ஏகாதிபத்திய பீரங்கிக் குண்டுக்குத் தன் மார்பைக் காட்டி நின்ற வீரங்கள் மழுங்கடிக்கப்படுதல் போன்றவை நிகழ்ந்திடல்தான் பெரும் சோகம். எனது மகனுக்கு பென் டென் மீதான பரிச்சயம், ஜாக்கிசான் மீதான உரிமை, டோரிமானின் மீதான நட்பு, என் சிறுவயது இங்கிலாந்து வேவு வீரர் 007 மீதான காதல்..நினைவு கூறப்படுவதை விட நமக்காக, நம் தேசமாம் தாய்த்திரு நாட்டுக்காக செக்கிழுத்து, சவுக்கடி பட்டு வீர வாளேந்தி எதிரியை நேருக்கு நேர் எதிர் கொண்டு, தூக்கு மேடையைத் துச்சம் என மதித்து தூக்குக் கயிறை முத்தமிட்டு உயிர்த்தியாகம் செய்து என எண்ணற்ற காரியங்களை ஆற்றிய நமது தீரர்கள் நினைவு கூறப்படுதல் நிகழ்ந்த காமிக்ஸ் பதிவுகள் வெகு குறைவே. அகத்தியக் குறு முனியும் போகரும் அவ்வப்போது திரைப்படங்களில் சுட்டுப் பொருளாக திகழ்ந்தாலும் அவர்களது அஷ்டமா சித்திகளை வடக்கே சக்திமான் கொண்டு வந்த அளவுக்குக் கூட நம் தமிழ் மண் நினைவு கூர்ந்து சித்திர இலக்கியத்துள் புகுந்து சிறார்கள், இளைய தலைமுறைகளை அடைந்திட எடுத்திட்ட மெகா முயற்சிகள் ஏதும் கண்ணுக்கெட்டியவரை சித்திரக்கதைகள் பக்கம் தென்படவில்லை. ஒரேயொரு சந்திரஹாசம் விலை அதிகமாக அமைந்து வெகுஜனத்துக்கு எட்டாமல் விலகிப் போனதும் நாமறிந்ததே. அந்த விதத்தில் வடக்கே பல நாகராஜ், சக்ரா போன்ற நவநாகரிகத்துக்குப் பொருந்திவரும் கதைகள் படைக்கப்பட்டு வருகின்றன. மேலும் உள்ளூர்க் கலைஞர்கள் போற்றப்படுகிறார்கள். அவர்தம் படைப்புகள் அங்காடிக்கு வரும்போதே வாசகர்களால் அள்ளப்படுகிறது. சக்ரா ஸ்டான் லீ விரும்பிப் பெற்றுத் திரைப்படமாக்கி அங்கீகாரம் கொடுக்குமளவுக்கு சாத்தியங்கள் உச்சங்களை எட்டி வருகின்றன. நமது கதை எழுத்தா்களது கதைகளில் எத்தனை எத்தனை விதமான படைப்புகள் உள்ளன என்பது காமிக்ஸ் ப்ளஸ் நாவல் வாசிப்போருக்கு நன்கு தெரியும். ஆர்னிகா நாசர் எழுதாத பேன்டசியா? பரத், சுசீலா செய்யாத சாகஸமா? விவேக் இல்லாத விறுவிறு ஸ்டோரியா? ஈகிள்ஸ் ஐ, செல்வா, பால்ராஜ், ஆன்மிக மிரட்டல்களுக்கு விடாது கருப்பு போன்ற கதைகள், சரித்திரத்துக்கு ராஜராஜ சோழனில் பாலகுமாரனின் பார்வைகள், காரி, பாரி, ஓரி என தனித்தனி பயணங்கள்..நிற்க ஒரு நிமிடம் யோசியுங்களேன். கோவையையும், சென்னையையும், உதகையையும் இன்னும் பிற பகுதிகளைச் சுற்றி ஓராயிரம் கதைகள். சிலைக் கடத்தலும், போதை மருந்து இளைஞர்களைப் பாதிப்பதையும் அவற்றைத் தடுக்க எத்தனையோ விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதையும் இதுபோன்று பலப்பல தளங்களில் கதை புனையலாம், சித்திரக் கதைகளாக்கலாம். அவற்றை வாங்கிட வாசகர்கள் என்றுமே தயார். பதிப்பிக்கவும், கதைகளை சமைத்திடவும், தூரிகை ராஜ்யம் நிகழ்த்திடவும் நீங்கள் தயாரா? இதுதான் இப்போதுள்ள சூழ்நிலையில் எங்கள் கேள்வி..தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் சார்பில் உங்கள் நண்பன் ஜானி சின்னப்பன்.

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...