சொத்தென என் முன் வந்து விழுந்ததொரு
பிழைத்திருந்தால் பறவையாகி வானை அளந்து தன் நடனக் கால்களைத் தரையில் பதித்து குருகுரு வெனும் குரலோசையால் மனதை மயக்கியிருக்கும் வாய்ப்பினைப் பெற்றிருந்த அந்த முட்டை. விழுந்து பிளந்து உள்ளிருந்த உலகம் காணா ஜீவனொன்று திடுதிப்பென உலகினில் எறியப்பட்ட அதிர்ச்சியில் கண்ணும் திறவாத பேரதிர்ச்சியுடன் தன் பிஞ்சு வாயை மட்டும் பிளந்தபடி பிளந்த முட்டைக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தது. ஈவிரக்கத்தைப் பல ஒளி மைல்களுக்கு அப்பாலேயே நெஞ்சின் உள்ளிருந்து எடுத்துப் போட்டு விட்டு வீரியத்துடன் உயிரைப் பறிக்க வந்த காலனாகத் தன் இறக்கைகளை அடித்துக் கொண்டு ஒலியின் வேகத்தை மிஞ்சிடும் வேகத்துடன் கீழிறங்கிப் பாய்ந்த அந்தக் காலன் காக வடிவிலிருந்தாலும் தன் பணியைச் செவ்வனே ஆற்றிய திருப்தியோடு மேலேறிப் பறந்தான் காலில் பாசக் கயிறில்லாமல் தன் கோரக் கால்களால் பற்றிப் பிடித்துக் கொண்டு...
அடைந்ததொரு அதிர்ச்சியா, சோகமா, கண்ட காட்சி தந்த வேதனையா எது என்னை உடைத்ததோ நானறியேன்..ஆனால் உள்ளே ஏதோ உடைந்து நொறுங்கி ஏதோ ஒன்று கருகும் உணர்வோடு கலங்கி நின்றேன் கண்களில் பெருக்கெடுக்கும் வடிகால் ஒன்றுக்கு அணைபோட்டு அடக்கிடும் பிரயத்தனத்துடன்..
இயற்கைக்கு ஆக்கலும் அழித்தலும் சுழற்சியாக இருக்கலாம் ஆனால் உணர்ச்சிகளுக்கு உணர்வுகள் மட்டுமே தெரியும் முன்பின் விளைவுகளும் பாவ சாபங்களும் கால நேரங்களும் உணர்வுக்குள் ஒன்றுமில்லையே...
காட்சியைக் கண்டவாறே பதிவிட்டு விட்டேன்
உங்களுக்கும் உணர்வுகளைக் கடத்தியிருப்பின் அது எனது பிழையாகக் கொண்டென்னைப் பொறுத்திடுங்கள்...
இவண் ஜானி சின்னப்பன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக