ஞாயிறு, 16 டிசம்பர், 2018

IND-22-037-பாங்குக் கொள்ளைகளின் மாயம்-ஜேம்ஸ் ஜெகன்

ப்ரியமானவர்களுக்கு ஜானியின் மார்கழி மாதப் பிறப்பின் வாழ்த்துக்களும் வந்தனங்களும்.. இம்முறை நண்பர் திரு.ஜேம்ஸ் ஜெகன் அவர்களின் அன்பளிப்பாக மலரவிருப்பது 1985ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15-21 வார படைப்பாக இந்திரஜாலில் வெளியாகிய அபூர்வமானதொரு மறுபதிப்பு இதழ் மாண்ட்ரேக் -லொதார் அதிரடியில்..வெளியான வண்ண இதழாகும்.. புத்தகத்தை நமக்கு வழங்கிய அவரை வாழ்த்தி
பாங்குக் கொள்ளைகளின் மாயம்
வெளியிட்டு மகிழ்வோம்...

வியாழன், 6 டிசம்பர், 2018

அம்புலி மாமா மார்ச் -1993-கரூர் குணா


நண்பர் திரு குணாவின் தொடர் முயற்சிகளை என்னால் அவரது வேகத்துக்கு ஈடு கொடுத்துப் பதிவிட முடியவில்லை...ராக்கெட் குணாவின் உழைப்பு அத்தனை அபாரம்..அதிலிருந்து சில துளிகளை அவ்வப்போது பறிமாறுகிறேன்.. 


IND-069-எலியரக்கர் பொறி-கணேஷ்

வணக்கங்கள் பிரியமானவர்களே...

ஒரு குழந்தை ஆற்றங்கரையில் விடப்பட்டால் ஓடி ஓடி கூழாங்கற்களையும், சிப்பிகள், சங்குகளையும் பொறுக்கும்..அதனை தன் வீட்டுக்குக் கொண்டு வரும்..தன்னை சுற்றியுள்ள குழந்தைகளோடு அதனை வைத்துக் கொண்டு ஆடிப்பாடி மகிழும்...என் நிலையும் அதுவேதான்...எக்கச்சக்க கதைகளை நண்பர்கள் போட்டி போட்டுக் கொண்டு குவித்து வருகின்றனர்..அதனை நினைக்கையில் நிச்சயமாக மகிழ்ச்சியையும் பேருவகையையும் எய்துகிறேன்... இதோ நண்பர் கணேஷின் 
எலியரக்கர் பொறி

கூடாரத்தில் கேலிக்கூத்து -இந்திரஜால் காமிக்ஸ்

மதுர கணேஷ் அவர்களது பங்களிப்பாக மலர்கிறது...



கூடாரத்தில் கேலிக்கூத்து

பத்து பக்க படக்கதைகள் தொகுப்பு-கோவை கிரிஜி

ப்ரியமானவர்களே...
உங்கள் தேடல்கள் நிறைவாகட்டும்..
கனவுகள் ஜெயம் காணட்டும்..
வாழ்க்கை இனிதாகட்டும்...

இதோ உங்களுக்காக கோவைத் தென்றல் கிரிஜி அவர்களது படக்கதை தொகுப்புகளை கொடுத்து மகிழக் காத்திருக்கிறார்...

என் பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்லிதயங்களுக்கும் என் அன்பும் நன்றியும்...😃😃😃

உடனே தரவிறக்கி மகிழுங்கள்...


பேயை நம்பி...
வழியில் வந்த ஆபத்து..
வார்டு நெம்.5
வேங்கை வேட்டை..

வெள்ளி, 30 நவம்பர், 2018

பைக்கோ கிளாஸிக்ஸ் 11 புத்தகங்களின் தொகுப்பு-கணேஷ்

பாதாள அறையில் பயங்கரம்-பொன்னி காமிக்ஸ்

வணக்கம் தோழமை உள்ளங்களே...
ஷேர் மட்டும்தான் செய்கிறேன்.. உழைத்த பாதுகாத்த திரு.சுரேஷ் சந்த் திரு.குணா கரூர் ஆகியோருக்கு நன்றியும் அன்பும்..

https://www.mediafire.com/download/3mo5xomwmb3id1b

டிட்-பிட்ஸ்
நன்றி நமது அம்மா நாளிதழ்


Ind கருமுத்துக்கள்ளர் ஜேம்ஸ் ஜெகன்

வணக்கம் நட்பூக்களே.. நண்பர்கள் திரு.ஜேம்ஸ் ஜெகன் திரு.குணா  கரூர் அவர்களது முயற்சியில் உழைப்பில் உருவான கருமுத்துக்கள்ளர் உங்கள் வாசிப்புக்காக இதோ.... சில வேளைகளில் இன்னார் என பெயர் குறிப்பிட நேரம் இல்லாத நிலையில் பகிர்வை மட்டும் செய்து விட்டு விலகி விடுகிறேன்.. நான் சார்ந்துள்ள பணி அப்படி.. நண்பர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன்..


இந்த காமிக்ஸ் ராணி காமிக்ஸிலும் இருமுறை பதிப்பிக்கப்பட்டதே..

நட்புடன் ஜானி..

செவ்வாய், 27 நவம்பர், 2018

இயந்திர மனிதர்கள்_ஜெயம் காமிக்ஸ்

அன்புக்குரியவர்களே அநேக நமஸ்காரங்களுடன் அடியேன் ஜானி தங்களின் நலம் விழைந்து வரையும் லிகிதம்...

இதுபோல காணாமல் போகும் காமிக்ஸ்களை தேடிப்பிடித்து பகிரும் நல்ல இதயங்களால்தான் இன்றைக்கும் புத்துணர்வூட்டப்படுகிறது இன்றைய தலைமுறை காமிக்ஸ் சமூகம்.. இன்னும்தேடுங்கள்..இன்னுமதிகமாய் பகிருங்கள்..வாழ்த்துக்கள்...வாழியவே தமிழ்பிராட்டி...




















17.10.2019
இன்று இந்த கதையின் ஓவியங்களையும் லிங்கையும் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நேரமின்மை காரணமாக நிறைய போஸ்டுகள் இது போன்றே அப்டேட் செய்யாமல் உள்ளன..அவற்றையும் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன், எந்த போஸ்ட்டாவது அதுபோன்று அரைகுறையாக நிற்கிறது என தாங்கள் காணும்பட்சத்தில் எனக்கு தெரியப்படுத்தவும்.. வழக்கம்போல இம்முறையும் நண்பர் திரு.குமார் திருப்பூர் உதவியுடன் இந்த லிங்க் கொடுக்கப்படுகிறது..நன்றியும் அன்பும்.. 

வியாழன், 22 நவம்பர், 2018

எச்சரிக்கை 888-பொன்னி காமிக்ஸ் -மதுர.கணேஷ்

இனிய மழைநேர வணக்கங்கள் தோழமை உள்ளங்களே...உங்களை மகிழ்விக்க மதுர பேராசிரியர் கணேஷ் அவர்களது ஒத்துழைப்பில் மலர்ந்த பொன்னியின் ராஜ்யத்தின் சிறியதொரு அணிகலன் இதோ...
காணாமல் போன அறிவியல் அறிஞரை தீவொன்றில் தேடிப் புறப்படும் நாயகன் ஜெய் சங்கர் நிகழ்த்தும் சாகஸப்பயணமே...

For pdf linx..
எச்சரிக்கை இது மூணெட்டு

சனி, 15 செப்டம்பர், 2018

மகாபாரதம் முழுவதும் காமிக்ஸ் வடிவில்:


நண்பர் ஸ்ரீராம் லெட்சுமணனின் உதவியோடு திரு.இரா.தி.முருகன் அவர்களது புத்தகங்களைப் பெற்று ஸ்கேனித்து ஆவணப்படுத்தியுள்ள மகாபாரதம் முழு வடிவத்தில் உங்களுக்கு ஒரு ஜிபிக்கும் மேலான சைஸில் கிடைக்கிறது. உதவிய உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும்...

http://www.mediafire.com/file/8r2feg97c6qs7av/PACK_Mahabaratam.pdf

Electronic Gadgetsகளிலிருந்து உங்கள் குழந்தைகள் விடுபட...

Electronic Gadgetsகளிலிருந்து உங்கள் குழந்தைகள் விடுபட:
---------------------------

புத்தக வாசிப்பு அறவே குறைந்து விட்ட இச்சூழலில், குழந்தைகளை மீண்டும் புத்தக வாசிப்பின் பக்கமாக திருப்ப ஒரு அரிய கருவி சித்திரங்கள் மூலம் கதை பேசும் "Comics"கள். சிறுவயது முதல் காமிக்ஸ் படித்து வளரும் குழந்தைகளிடம் இயல்பாகவே கற்பனைத்திறன் மிகுந்திருக்கும். புதிய கோணத்தில் சிந்திக்கும் திறனும், Creativityயும் அதிகரிக்கும்.  முக்கியமாக நேரடியாக கடினமான புத்தகங்களை அவர்களிடம் புகுத்துவதை விட காமிக்ஸ் வாங்கிக் கொடுத்துப் பாருங்கள், அதன்பின் அக்குழந்தை காமிக்ஸ் துவங்கி அனைத்து விதமான புத்தகங்களையும் வாசிக்காமல் விடாது.

குழந்தைகள் Electronic Gadgets களிடமிருந்து விடுதலை பெற்று அறிவு உலகத்தின் பக்கம் தனது கவனத்தைச் செலுத்த காமிக்ஸ் ஒரு அடிப்படை ஆரம்பப்புள்ளி.

பெரியவர்களும் இவற்றை வாசிக்கலாம்.

தற்போது தமிழில் காமிக்ஸ் கள் மிகச் சிறப்பான தரத்தில் வெளிவருகின்றன.

குழந்தைகளுக்கு காமிக்ஸ்களை வாங்க:


சனி, 25 ஆகஸ்ட், 2018

MB-006-கர்ணனின் வருகை-மகாபாரத சித்திரக்கதை வரிசை..

இனிய வணக்கங்கள் தோழமை கொஞ்ச நெஞ்சங்களே... கர்ணன்...செவாலியே சிவாஜி நடிப்பில் மெய்மறக்க வைத்த வீரகாவியம்...
மகாபாரதத்தின் கருணை வள்ளல் கர்ணன்... தான் கொடுத்த தானத்திலேயே சிறந்ததானமான உயிர் தானத்தை இறைவனுக்கே செய்த வள்ளல்...அற்புதமான கர்ணனின் வருகையை வாசித்து மகிழ உங்களை அன்புடன் வரவேற்கிறேன்... 







தரவிறக்க சுட்டி...


வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

15-32 உயிரைத் தேடி...-ORTIZ























ஆம் நண்பர்களே உணர்வுகள் திரும்ப வேண்டும்... ஒன்றிணைந்து பல சாதனைகள் படைக்க வேண்டும்.. இந்த உயிரைத் தேடி உணர்த்தும் கருத்தும் அதுதான்.. ஒன்றிணையுங்கள்..சகலமும் சாத்தியமாகும்.. குறிப்பிட்ட இடைவெளிக்குப் பின்னர் பக்கங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்ட பிடிஎப் உங்களை வந்தடைய வேண்டியது இங்கே நாம் குறிப்பிட்டுள்ள நண்பர்களின் கரங்களில்தான் இருக்கிறது... 
இந்த அதிரடிக்கதையை இரசித்தீர்கள் எனில் உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்... 

உங்கள் பங்களிப்பும் தேவை இங்கே.. நன்றி...

Enter The Phantom_FREW First Issue வேதாளர் முதல் FREW இதழ்_கதைச்சுருக்கம்

 வணக்கங்கள் வாசக தோழமை உள்ளங்களே!                  இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வேதாளர் சித்திரக்கதைகளின் உலகப் புகழ் பெற்ற FREW பதிப்ப...