வெள்ளி, 15 ஜூன், 2018

RC 312- உயிர் காக்கும் முத்திரை..முகமூடி வீரர் மாயாவி..






இந்த சித்திரக்கதையை தரவிறக்கம் செய்து வாசிக்க...
இந்த சித்திரக்கதையை கொண்டுவருவதில் ஆர்வமாக உதவிய திரு,சதீஷ் மற்றும் திரு குணா அவர்களுக்கு நன்றியும் அன்பும்..








இந்த அமைப்பு இன்னும் இயங்கி வருகிறதா என நண்பர்கள் கூறலாம்...


நான் கற்றுத் தேர்ந்தது அரசுப் பள்ளியில்... அப்போது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.. இந்த தபால் வழி ஆங்கிலம் கற்றுத்தரும் இன்ஸ்டிட்யூட்தான். மிகவும் குறைந்த விலையில் தரமான புத்தகங்களை அனுப்பி வைத்திருந்தார்கள். இப்போதும் இயங்குகிறதா என்பது தெரியாது. ஆனால் என்னை உருவாக்கியதில் இந்த தபால் வழி பாடங்கள் இன்றியமையாத பங்கினை வகித்தன.. ஆங்கிலம் என்றாலே அலர்ஜி என்ற நிலையில் இது பெரிய உதவியாகவே அமைந்தது என்னைப் போன்ற கிராமத்து மாணவனுக்கு...ராணி காமிக்ஸில் வந்த விளம்பரம்..

ராணி காமிக்ஸில் வெளியான அந்த கால பார்லி ஜி விளம்பரம்...இன்றைக்கும் இதுதான் எனக்குப் பிடித்தமான பிஸ்கட்.. எங்கள் ஊரில் ராணி காமிக்ஸ் மட்டுமே விற்பனையாகும். பிஸ்கட் வாங்க காசு வாங்கி அதை தியாகம் செய்து காமிக்ஸ் வாங்கி வந்து விடுவது மாதமிருமுறை தவறாது நிகழும்..ஒரு டிராபிக் போலீஸ்காரருக்கு தண்ணீர் தரும் சின்ன பாப்பா.. என்றும் மறவோம் வாழ்நாள் வரை என்கிற வசனம்... ஆஹா..ஆஹா.. எத்தனை நேர்மறையான விளம்பரம்...



என்றும் உங்கள் நண்பன் ஜானி...

4 கருத்துகள்:

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...