புதன், 29 செப்டம்பர், 2021

மரணத்துடன் ஒரு திருமணம்_ரங்லீ காமிக்ஸ் வெளியீடு..

 

ரங்லீ காமிக்ஸின் நான்காவது வெளியீடாக வந்திருக்கும் மரணத்துடன் ஒரு திருமணம்.. அட்டைப் படமே கவனம் ஈர்க்கிறது.. தனித்த பல படைப்புகளை மூன்று நான்கு ககதைத் தொகுப்புகளாகவும், சுவையான பல கட்டுரைகளை பதிப்பித்தும் திறம்பட செயலாற்றிவரும் ரங்லீ காமிக்ஸின் புதிய வரவை ஆதரிப்போம்.. 
இந்த காமிக்ஸில் 
-மரணத்துடன் ஒரு திருமணம்
-பிளிரும் நீதி
-அதிமேதாவி
-சுமத்ரா விதை
ஆகிய நான்கு கதைகள் இடம்பெற்றிருக்கின்றன.. அவற்றை ஒவ்வொன்றாக வாசித்து மகிழ்ந்து ஒவ்வொரு விதமான சுவையையும் ருசிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.

நூலின் டீசரைப் பார்வையிட:
மேலதிக விவரங்களுக்கு:

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

ஆவேசக் கவிதை_திகில் கிராமம்

 ஆவேசங் கொண்டவனின் 

கூக்குரல் கவிதை வரிகள்...


வா வா வெக்காளி..

வா வா வெக்காளி..

உன் பின்னே நிற்கும் ஆதிகுடி..

புதைக்கப் பாத்துது மனுச குலம்..

விதையா முளைச்சி வெளிவருவோம்..

அழிக்கப் பார்த்த ஒரு பயலும்

பொழைக்க மாட்டான் இனிமேலும்..

சக்தியும் பலமும் கொடுத்தாயே

உலகை நசுக்க மறப்போமா?

உப்பைத் தின்னவன் எவன்னாலும்

தண்ணியைக் குடிக்க வெச்சிருவோம்..

தப்பை செஞ்சவன் எவன்னாலும்

தலையைக் காவு வாங்கிருவோம்..


அலட்சியம் பண்ணா ஆதிகுடி

பொழச்சி வந்து பொளப்போமடா..

ஆவேசமா வாரா வெக்காளி...

அவ முன்னே பூமி அடங்குமடா..

வா வா வெக்காளி..

துணையா வா வெக்காளி..


_ஜானி சின்னப்பன்.

திகில் கிராமம்


இது லோன் உல்ப் பப்ளிகேஷன் முதல்  வெளியீடு..


தற்போது பரபரப்பான விற்பனையில்..

திங்கள், 20 செப்டம்பர், 2021

அநீதி அகற்றிடு! _கற்பனைக் கதை_ஸ்பைடர்+சுஸ்கி விஸ்கி சந்தித்தால்.._ஜானி சின்னப்பன்

 ஸ்பைடர்.. ஸ்பைடர்..

பதட்டத்தோடு ஓடி வந்தார் பெல்ஹாம்.. சிலந்திவலைப்படுக்கையிலிருந்து துள்ளிக்குதித்தான் அந்த வீர வேங்கை ஸ்பைடர். என்ன பெல்ஹாம்..பேய் அறைந்ததைப் போல விழிக்கிறாய்?!? 

ஸ்பைடர்.. யாரோ இரண்டு குழந்தைகள் எதையோ தேடி நம் ஒளிவிடத்தில் அலைகிறார்கள்.. காமிராவில் காட்சி தெரிகிறது.. 


அடேய் ஆர்டினி.. இரகசியக் கோட்டையை மறைக்கும் மாயத்திரையை மறைத்து விட்டான் போலிருக்கே.. குறும்பன்.. எங்கே அவன். குரலில் கோபம் கொப்பளித்தாலும் மனதில் மென்மை தெறித்தது ஸ்பைடரிடம். பெல்ஹாம்..அந்த இருவரையும் அழைத்துவா..




சற்று நேரத்தில் சிறு அறிமுகத்துக்குப் பின்..

ஸ்பைடர் அங்கிள்.. வாங்க உங்க ஹெலிகாரில் ஒரு இடத்துக்குப் போகணும்.. புதிரா எதோ இரகசியம் ஒளிஞ்சிருக்கு ஓர் இடத்தில்.. சுஸ்கி விஸ்கி யின் அன்புக்குக் கட்டுப்பட்டான் ஸ்பைடர் புறப்பட்டது ஹெலிகார்.

அதன் கட்டுப்பாடுகளை உற்றுக் கண்காணித்தவாறே வழியை சொல்ல ஏரியொன்றின் அருகில் இறங்கியது ஹெலிகார்..

ஆர்டினி..ஐயோ நீரென்றால் பயம்..உயரமென்றாலும் பயம்.. பயபுள்ளையை விட்டுத் தப்பி எங்காவது ஓடிப்பிடலாம்னா விடவே மாட்டேங்கிறான் தம்பி.. புலம்பலுக்குப் புன்னகையை உதிர்த்தனர் சுஸ்கி விஸ்கி..


இந்த ஏரிக்கடியில் ஏதோ மர்மம் ஒளிஞ்சிருக்கு.. சுற்றியும் பாருங்கள் என்று கூற ஸ்பைடரின் கூர்விழிகளுக்குக் கதிரியக்கம் பாதித்த சூழல் புரிந்தது.. தனது நுட்பமான கருவிகளின் துணையுடன் பெல்ஹாமின் மூளையுடன் ஆர்டினியின் அலறலோடு ஏரியை இம்மிவிடாது அலசி எப்போதோ கடத்தப்பட்டு அங்கே கைவிடப்பட்டிருந்த அணு உமிழ் ஆயுதம் கண்டெடுக்கப்பட்டு பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றப்பட உள்ளூர் ஆட்கள் ஒன்று கூடி அவர்களை ஆரவாரத்தோடு வழியனுப்ப..சுபம்🙏🏻💐😄💓

All in one வாட்ஸ் அப் குழுவுக்காக..

மேலதிகக் கதைகளுக்கு:

திங்கள், 13 செப்டம்பர், 2021

டைகர் கதை வாசிக்க..

 நண்பர் ஒருவர் ஏற்கனவே FB ஒன்றில் பதிவு செய்த details:


டைகர் கதைகள்:-


லெப்டினன்ட் ப்ளூபெர்ரி (தமிழில்: கேப்டன் டைகர்) கதை தொடர்கள் 1963ல்

முதன் முறையாக

வெளியிடப்பட்டன. இதில்

இதுவரை 28கதைகள் இடம்பெற்று

உள்ளன. இவை அனைத்தும்

தமிழில் வந்துவிட்டன.


1,2,3,4&5=இரத்தக்கோட்டை-5பாக

கதை(ஒற்றை ஒற்றை பாகங்களில் கறுப்பு வெள்ளையில் முத்து காமிக்ஸ்ல போடப்பட்டு, ஆகஸ்ட் 2017ல் ஈரோடு விழாவில் ஒரே இதழாக வண்ண மறுபதிப்பாக வெளியிடப்பட்டது)


6. தோட்டா தலைநகரம்-சிங்கிள்

சாட்- வண்ண மறுபதிப்பு-2018மார்ச்.


7,8,9&10=இரும்புக்கை

எத்தன்-4பாக கதை.(முத்து 250ல் ஆரம்பிக்கப்பட்டு அந்தரத்தில் தொங்கி, வண்ணத்தில் 2013 மே மாதம் க்ளைமாக்ஸ் பாகங்கள் போடப்பட்டன.)


11&12=தங்க கல்லறை-இருபாக

கதை(2012நவம்பரில் வண்ணமறுபதிப்பு)- என்னைப் பொறுத்து நெ1. ஆஃப் டைகர்.


13to23=மின்னும் மரணம்-11பாக

கதை- தி கிரேட் ஸ்டோரி ஆர்க் ஆஃப் டைகர். முத்துவில், லயனில் என ஆங்காங்கே போடப்பட்டு, 2015ஏப்ரலில் பிரமாண்டமான வண்ண மறுபதிப்பாக வெளியானது. 


24,25,26,27&28=என் பெயர்

டைகர்-5பாக கதை- கி. நா. பாணியில் இருந்தாலும் கூட வசீகரிக்க ஏதோ உள்ளது. 


இத்தொடர் பெரிய வெற்றி

பெற்றதை அடுத்து டைகரின்

இளவயது நடப்புகளை கொண்ட

யங்டைகர் சீரியஸ் 1989ல்

வெளியிடப்பட்டது. அதில்

இதுவரை 21கதைகள் வந்துள்ளன.

தமிழில் 9கதைகள் 3பாக, இருபாக

கதைகளாக வெளிவந்துள்ளன.

இன்னமும் 12பாக்கியுள்ளன.


இளம்டைகர்...

1,2&3=இளமையில் கொல்-3பாக

கதையாக லயன் கெளபாய் ஸ்பெசலில் வெளியானது.(அடுத்த வண்ண மறுபதிப்பு இதுவாகத்தான் இருக்கும்)


4. மரணநகரம் மிசெளரி(வைல்டு

வெஸ்ட் ஸ்பெசல்sep2012-இருபாக கதையின் முதல் பாகம்)

5. கான்சாஸ் கொடூரன்

(முத்துNBS jan2013-இருபாக கதையின் க்ளைமாக்ஸ்) 


6. இருளில் ஒரு

இரும்புக்குதிரை(முத்து NBS

jan2013-அடுத்த இருபாக கதையின் முதல் பாகம்)

7. வேங்கையின் சீற்றம்(டிசம்பர்

2013-NBSல் வந்த இருபாக கதையின் க்ளைமாக்ஸ் சாகசம்)


8. அட்லான்டா ஆக்ரோசம்

9. உதிரத்தின்விலை...8&9-ஒரே

இதழாக மார்ச்2014ல் வந்த இருபாக

சாகசம்.


9. மார்ஷல் டைகர் - Lion magna spl லில் வந்த முதல் பாக கதை

10. வேங்கைக்கு முடிவுரையா & ரனகள ராஜ்ஜியம்- 2 பாக கதை


அடுத்த 9 பாகங்கள் கொண்ட இளம் டைகருக்காக ஆவலுடன் வெயிட்டிங்.

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

ஆவேசம் கொண்டெழுந்தவனின் பாடலிது_திகில் கிராமம்..

 திகில் கிராமம்


(இது வீழ்த்தப்பட்டவர்கள் விழித்தெழுந்தெழுந்த வீரக்கதை)


வா வா வெக்காளி..

வா வா வெக்காளி..

உன் பின்னே நிற்கும் ஆதிகுடி..

புதைக்கப் பாத்துது மனுச குலம்..

விதையா முளைச்சி வெளிவருவோம்..

அழிக்கப் பார்த்த ஒரு பயலும்

பொழைக்க மாட்டான் இனிமேலும்..

சக்தியும் பலமும் கொடுத்தாயே

உலகை நசுக்க மறப்போமா?

உப்பைத் தின்னவன் எவன்னாலும்

தண்ணியைக் குடிக்க வெச்சிருவோம்..

தப்பை செஞ்சவன் எவன்னாலும்

தலையைக் காவு வாங்கிருவோம்..


அலட்சியம் பண்ணா ஆதிகுடி

பொழச்சி வந்து பொளப்போமடா..

ஆவேசமா வாரா வெக்காளி...

அவ முன்னே பூமி அடங்குமடா..

வா வா வெக்காளி..

துணையா வா வெக்காளி..


_ஜானி சின்னப்பன்.

அனைவருக்கும் இனிய விநாயகர் தின வாழ்த்துக்கள்..

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

பிணமென்று நினைத்தாயோ..?_வினாடி கதை வரிசை_ஜானி சின்னப்பன்

ஊஊஊஊ என்ற ஊளைச்சத்தம் அந்த சுடுகாட்டுக்கு அருகிலிருந்த ஜீவனேஷின் வீட்டை நிறைத்தது.. ஊருக்கு ஒதுக்குப்புறமாய் தன்னந்தனியே அவனது வீடு.. பலப்பல அசிங்கமான நிழல் காரியங்களுக்கு அவனுக்கு உதவிக் கொண்டிருந்த வீடு அது..

வீட்டுக்குள்ளே ஜீவனேஷ்..

எங்கோ ஒரு ஆந்தையின் அலறலில் அவனது இதயம் ஒருகணம் நின்று துடித்தது. நெற்றியில் துளித்துளியாய் வியர்வையோடு   ஜீவனேஷ் நிமிர்ந்தான். இந்த ஆறடி ஆழம் சரியாய்த்தானிருக்கும்..அவன் மனம் திட்டமிட மண்வெட்டியை ஓரம் வைத்து விட்டு அந்த பெண்ணின் சடலத்துடைய காலைப் பற்றி இழுத்து குழிக்குள் தள்ளினான்.. 

அப்படியே அவனை இழுத்துக் குழியில் தள்ளிய விசையோடு வெளியே பாய்ந்தாள் ஷைனிகா.

ஜீவனேஷ்  குழிக்குள் விழுந்த வினாடியில் பள்ளத்தின் பக்க சுவர்கள் அப்படியே சரிந்து ஜீவனேஷை மூடிக் கொள்ள மூச்சடங்கும் ஓசை..மயான அமைதி..

தன்னை அழிக்க நினைத்த காதலனின் பணக்கார புதுக் காதலி ஜூவாலினியை நினைத்து ஒரேயொரு செகண்ட் கடைக் கண்ணில் கசிவுடன் வெளியேறினாள்..

விடை பெறுகிறேன் காதலா..

@Copyright belongs to jscjohny.blogspot.

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...