இந்த சித்திரக்கதையை வாசித்து மகிழ:
https://www.mediafire.com/file/w5n39xvwzblpf5h/042_Thaveethin+Magan.pdf/file
வெள்ளி, 31 மார்ச், 2023
042_தாவீதின் மகன்_விவிலிய சித்திரக்கதை வரிசை
புதன், 29 மார்ச், 2023
IJC 149_மயான குகை_குணா கரூர்
திங்கள், 27 மார்ச், 2023
எங்க ஊர் நூலகத்துக்கான சித்திரக் கதைகள் ஷெல்ப் கனா
மணலூர்பேட்டை நூலகத்தின் 58 ஆவது ஆண்டு விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் மார்ச் 05, 1965 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை சார்பில் கிளை நூலகம் தொடங்கப்பட்டது.
இந்நூலகத்தின் 58 ஆவது ஆண்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டக் குழுத்தலைவர் கு.ஐயாக்கண்ணு தலைமை வகித்தார்.
அரிமா சங்க மாவட்ட தலைவர் அம்மு ரவி, முதுகலை தாவரவியல் ஆசிரியர் அரிமா தா.சம்பத், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் பணி நிறைவு பெ.முனியன், வர்த்தகர் சங்க துணைச் செயலாளர் கு.சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாசகர் வட்டக் குழு துணைத் தலைவர் இளங்கவி சண்முகம் வரவேற்று பேசினார்.
நல்நூலகர் மு.அன்பழகனிடம் திருவண்ணாமல ஹோமியோபதி மருத்துவர் எம்.ராமானுஜம், மணலூர்பேட்டை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மா.தம்பிதுரை ஆகியோர் வாசகர்கள் பயன்பாட்டிற்காக ரூபாய் 15 ஆயிரம் மதிப்புள்ள நூல் அடுக்குகளை நன்கொடையாக வழங்கினர்.
திருக்கோவலூர் வாசகர் வட்டக்குழுத் தலைவர் கவிமாமணி சிங்கார. உதியன் நூலகப் புரவலர்களுக்கு பட்டயம் வழங்கிப் பாராட்டி பேசினார்.
தமிழ் காமிக்ஸ் வாசர் வட்டம் சார்பில் காவலர் ஜானி சின்னப்பன் தமிழ் காமிக்ஸ் நூல்களை நன்கொடையாக வழங்கினார்.
விளந்தை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜகோபால், நூலகப் புரவலர்கள் மொ.நடராஜன், சி.சக்கரை, ம.வெங்கடேசன், எம்.ஜி.கண்ணன், ம.பாலு நாயுடு, கு.அய்யாசாமி, பி.ராமமூர்த்தி, எஸ்.ஜெயக்கண்ணு, ஒவியர் சு.செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பணியாளர்கள் அ.கிருஷ்ணமூர்த்தி, ச.தேவி, கி.பாஸ்கரன், பெ.விக்னேஷ் செய்திருந்தனர்
வாசகர் வட்ட பொருளாளர் வீர.சந்திரமோகன் நன்றி கூறினார்.
காமிக்ஸ்_அனுபவங்கள்
அதுவொரு ஓட்டைதகரடப்பா பங்க்கடை. அதில்தான் எனது குட்டி வாடகைப் புத்தக நிலையம் இயங்கியது. பள்ளி சிறுவர்கள்தான் என் உலகம். அவர்கள்தான் என் வாடிக்கையாளர்கள்.. 10 காசு வாடகை. எனது தந்தையாரின் முட்டை கடையிலேயே எனது புத்தகங்களை வைத்து அழகு சேர்த்திருந்தேன். விதவிதவிதமாக அடுக்கி அழகு பார்ப்பது என் வழக்கம். அவ்வப்போது தோழர் முருகன் வந்து உதவி விட்டுப் போவார். ஒரு பலத்த அடைமழை நாளில் புத்தகங்கள் அனைத்தும் நனைந்து கொழகொழத்துப் போயின. என்னால் உடனடியாக அவற்றை மீட்க இயலாமல் போய் கண்ணீர் மல்கிய நாட்கள் அவை. ஐம்பது ரூபாய் மின்னும் மரணத்தை பக்கம் பிரித்து காய வைப்பதற்குள் நாக்கு தள்ளி விட்டது. இன்றும் மறக்கா வடு மனதில். ஏகப்பட்ட லயன் ராணி மேகலா மேத்தா கொஞ்சமே கொஞ்சமாக டால்பினின் அத்தனை வெளியீடுகளும், கோபக்கனல் போன்ற எதிர்கால கதைகளும் இரத்தப்படலம் பாகங்களும் அங்கே அவ்வப்போது விவாதத்தில் இருந்து வந்தவையே. இளையராஜா, சங்கர் இருவரும் செம்ம கலாய் கலாய்ப்பார்கள் என்றாலும் அடங்காத ஆசையோடு சித்திரக்கதைகளின் விவாதங்கள் அனல் பறக்கும். என் தந்தை திரு.சின்னப்பன் அந்த விவாதங்களில் ஆழமாக பேசுவதை கண்டு உனக்கு ஏற்ற தந்தையடா என்னும் நண்பர்களிடம் என் தோழர் அவர் என்று பெருமையோடு சொல்வேன். அத்தனை இலகுவாக காமிக்ஸ் டைம் பாஸ் அங்கே நடக்கும்..அந்நாட்களில் வாசித்திராத பொன்னி போன்ற காமிக்ஸ்களைக் கண்டால் டித்தாக வேண்டும் என்கிற பேரவா ஏற்படுகிறது..
சனி, 25 மார்ச், 2023
வெள்ளி, 24 மார்ச், 2023
033_தூதுவன்_விவிலிய சித்திரக்கதை வரிசை
வணக்கங்கள் தோழர்களே.. விடுபட்ட 033 தூதுவன் விவிலிய சித்திரக்கதை இப்போது வெளியிடப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டிய நண்பர் திரு.செந்தில் நாதன் அவர்களுக்கு நன்றிகள்.
புதன், 22 மார்ச், 2023
IJC 060_விண் வழி வந்த விடுகதை மற்றும் சூதாடிகளின் கோட்டை_ குணா கரூர்
ஒரு பக்க காமெடியில் மணியன் விலங்குகளை அன்பு செய்வது எப்படி என்று காண்பிக்க வருகிறான்..
சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩
அன்புடையீர்... இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
இனிய காமிக்ஸ் தோழமைகளுக்கு அடியேனின் அன்பு வணக்கம். இன்றைக்கு நாம் பார்க்கவிருப்பது "பரங்கா பள்ளத்தாக்கு" ரங்லீ காமிக்ஸ் 100/- ...
-
[8/12, 09:22] 🌟ஜானி_ஷீலா💐: நண்பர்களே! சீனியர் எடிட்டர் என்று நீங்கள் அன்புடன் அழைக்கும் சவுந்தர பாண்டியன் எழுதும் மடல். நமது வெளியீடுகள் ...