புதன், 7 பிப்ரவரி, 2024

கண்ணீருக்கு நேரமில்லை_டெக்ஸ் வில்லர்_ஜனவரி வெளியீடு

 வணக்கம் வாசகர்களே.. 

ஜனவரியில் வெளியாகியிருக்கும் லயன் காமிக்ஸின் 442 வது வெளியீடு இந்த கண்ணீருக்கு நேரமில்லை.. 

விலை ரூ.100
கருப்பு வெள்ளை 
132 பக்கங்கள் 
கதை: போசெல்லி
சித்திரங்கள்: பிரிந்திசி 
கதை சுருக்கம்: சாம் வில்லர் மற்றும் டெக்ஸ் வில்லரின் சிறு பிராயத்து கதைகளை ஆர்வத்துடன் வாசித்து வரும் நமது இளம் டெக்ஸ் வில்லர் தொடர் இந்த கதையிலும் தனது பங்கினை செம்மையாக நிறைவேற்றுகிறது. 
1854 டெக்சாசில் வசித்து வரும் சாம் மற்றும் டெக்ஸ் அவர்களது தந்தையுடன் வசித்து வருகின்றனர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்கிற சிறு வயதின் மகிழ்வுகளும் அவர்களுக்கு வாய்த்திருந்தது.
அங்கே ஒரு நடன நிகழ்ச்சியும் தொடர்ந்து கைகலப்பும் எழ டெக்ஸ் தந்தை கென் வில்லர் வந்த பின்னரே சமாதானம் ஆகிறது.   
கண் விழித்தால் டெக்ஸ் வேறொரு காலத்தில் இருக்கிறார். நடந்ததெல்லாம் கனவுதான்.. ஜிம்மி, செவ்விந்தியர் கோசைஸ் இருவருடனும் இருக்கிறார் டெக்ஸ். தனது பிறப்பு, வளர்ப்பு அனைத்தையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். கன்னீ பில் என்பவரிடம் குதிரையேற்றமும், துப்பாக்கி சுடுதல் பயிற்சியும் பெற்ற நம் நாயகர் டெக்ஸ் சிறந்த வீரராக உருப்பெற அவரது தம்பி சாம் சிறந்த பண்ணை கால்நடை வளர்ப்பாளராக உருமாறுகிறார்கள். காலம் உருண்டோடுகிறது. 


கால்நடைகளைத் திருடி மெக்சிகோவில் விற்கும் கொள்ளைக் கும்பல் ஒன்று தந்த தொல்லையை சமாளிக்கும் முயற்சியில் கென் வில்லர்  இறந்து விட பழிக்குப் பழி வாங்க பாய்ந்து புறப்படுகிறார் டெக்ஸ். ஆனால் சாம் பண்ணையைப் பார்த்துக் கொள்ள இருந்து விடுகிறார். 




அவரது இலக்கான எதிரிகளை மெக்ஸிக மண்ணில் கண்டுபிடித்து போட்டுத் தள்ளுகிறார்கள் இருவரும். அவர்களை விரட்டி வரும் மெக்ஸிக ரோந்துப் படையை தவிர்த்துக் கொள்ளும் முயற்சியில் கன்னீ தன் இன்னுயிரைப் பறி கொடுக்கிறார். தனது சகோதரனுக்கே பண்ணை உரிமையை விட்டுத்தந்து புறப்படுகிறார் டெக்ஸ். அவரைத் துரத்தும் கேள்வி கால்நடைகள் உண்மையில் மெக்சிகோ சென்றடையவில்லை என்பதுதான். அதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்று கண்டறியும் முயற்சியிலும் டெக்ஸ் இறங்குகிறார். 
அவரது பாதையில் அப்போது வருவதுதான் டைனமைட். 
அந்த குதிரையின் உதவியுடன் ரோடியோ ஆட்டக்களத்தில் புகுந்து பிரபல்யமாகிறார் டெக்ஸ். 
ஆனால் சாம்? அவனது பண்ணையை பிடுங்க முயற்சிக்கும் பெரு முதலாளி ரீபோவிடம் மோதி உயிரைப் பறிகொடுக்கிறார் சாம் வில்லர்.
டெக்ஸ் அதே பண்ணையை கைப்பற்றி தீக்கிரையாக்குவதுடன் ரீபோவின் மொத்த கும்பலையும் ஒழித்துக் கட்டுகிறார். அதற்கு டெக்ஸ் என்னென்ன செய்தார்? அவர் வாழ்வில் அடுத்தடுத்த சம்பவங்கள் என்ன நிகழ்ந்தன? திக் திக் பக்கங்கள் உங்களுக்கான பதிலினைத் தரும்.. 
132 பக்கங்களில் பக்காவான ஆக்ஷன் சித்திரக்கதையாக மலர்ந்திருக்கிறது இந்த கண்ணீருக்கு நேரமில்லை.. கண்டிப்பாக உங்கள் நூலகத்தில் இருக்க வேண்டிய ஒன்று என்பேன்.. விலை விவரங்களுக்கும், ஆன்லைன் ஆர்டருக்கும் 

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி. 
 



  



      



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...