திங்கள், 24 ஜூன், 2024
ஞாயிறு, 23 ஜூன், 2024
கூர் நாசியாரும் மூன்று கால் ஓநாயும்_தமிழில் முதன்முறையாக..
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் வாசக உறவுகளே.. நம் வாசகர் வட்டத்தை சேர்ந்த பத்தாவது, பதினொன்றாவது, பன்னிரெண்டாவது வகுப்பு பிள்ளைகள் தேர்வில் தேர்ச்சியடைந்தால் அனைவரும் இணைந்து சிறு பரிசு ஏதாவது தருவோம் என்கிற என் எண்ணத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றிகள்.. அந்த பரிசுகள் ஒவ்வொரு பிள்ளைகளையும் சென்று சேர்வதைக் காணும்போது மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது.. வாழ்த்துக்கள் அனைவருக்கும்..
சனி, 22 ஜூன், 2024
செவ்வாய், 11 ஜூன், 2024
ஞாயிறு, 9 ஜூன், 2024
தோழர் மாயாவி சிவா.. மறைவு..அஞ்சலி
வணக்கங்கள் தோழமைகளே.. நண்பர் மாயாவி சிவா நம்மை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். தமிழ் சித்திரக்கதை உலகில் அவரை அறியாதோர் யாருமிலர். சேலம் ஏற்காட்டில் இருந்து சித்திரக்கதை வாசகராக அறிமுகமாகி சித்திரக்கதை விமர்சனங்கள், எடிட்டிங், புதிய கதைகளை தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தல், அவற்றிற்கான திரைப்படத் தொடர்புகள் என்று பல்வேறுபட்ட தன் திறமைகளை நம்முடன் பகிர்ந்து கொள்வார். அன்னாரது மறைவினால் வாடும் குடும்பத்தாருக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்வோம்..
மனதில் இவருக்கான இடம் எப்போதும் அதே பசுமையாய் தொடரும்.. மறைவது உடலே. ஆன்மா அல்ல.. நண்பரே.. என்றும் எம்முடன் வாழ்வீர்...🙏🏻😞
Boopathy, Rasi Puram
நண்பர் மாயாவி சிவா - ஈடு செய்ய இயலாத இழப்பு! அவரை நேரடியாக சந்தித்து முதலும் கடைசியுமாக பேசியது 2020-ம் ஆண்டு. சேலம் செவ்வாய்பேட்டையில் தனியாக தொழில் செய்து வருவதாக சொன்னார். ஏற்காடு சொந்த ஊர். சேலம் பிரபாத் அருகில் உள்ள கடையில் நேரடியாக சந்திப்பு. சந்திப்புக்கு முன்பும் பின்புமாக சில பல மாதங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டும் இருந்தோம். அந்த காலகட்டத்தில் சில பல கதைகளை தமிழில் மொழிபெயப்பு செய்து கதைகளை வெளியிட்டு மாயாவி சிவா-சுரேஷ் சந்த் - கேவிஜி என மற்றும் பலருடன் குழுவாக வெகு ஆரவாரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தோம்.
மாயாவி சிவா அவர்களிடம் செல்லும் ஒவ்வொரு கதைக்கும், அவர் எழுதும் முன்னோட்டங்களும், கதைக்குத் தொடர்புடைய விபரங்களும் ஒரிஜினல் கதையையே தூக்கி சாப்பிடுவது போல இருக்கும். அந்த அளவுக்கு ஆழமாக சென்று விபரங்களைத் தேடி எழுதுவார். அவருடைய எழுத்தாற்றலும் அந்த அளவிற்கு விறுவிறுப்பானதாக இருக்கும். அப்போது தான் காமிக்ஸ் சேகரிக்கத் தொடங்கிய தருணமென்பதால், அந்த புத்தகங்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதையும் சந்திப்பின் போது எனக்கு சொல்லியிருந்தார். அந்த 2020-ம் ஆண்டு சந்திப்பிற்குப் பிறகு, 2-3 முறை சேலம் சென்ற போது தொடர்பு கொண்ட போது, அவர் வெளியூர்களுக்கு சுற்றுப்பயணத்தில் இருந்தார் என்பதால் சந்திக்கவும் முடியவில்லை.
பின்பான காலகட்டத்தில் மொழிபெயர்ப்பு வேலைகளில் ஈடுபடாமல் நான் ஒதுங்கி விட்டதால், அவர் உட்பட இன்னும் பல நண்பர்களிடமும் அதிகம் தொடர்பில் இல்லை. சில மாதங்களுக்கு முன்பு, ஐயா அலெக்ஸாண்டர் வாஸ் அவர்களின் மறைவு ஏற்படுத்திய காயம் ஆறுவதற்குள், அடுத்து மாயாவி அவர்களின் மறைவு! அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த வருத்தங்களையும், அவருடைய குடும்பத்தினருக்கு எனது உளமார்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
நாமும்..
சேட்டை நான்சி_அறிமுகம்
வணக்கம் தோழர்களே.. இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்.. என்றும...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
இனிய காமிக்ஸ் தோழமைகளுக்கு அடியேனின் அன்பு வணக்கம். இன்றைக்கு நாம் பார்க்கவிருப்பது "பரங்கா பள்ளத்தாக்கு" ரங்லீ காமிக்ஸ் 100/- ...
-
வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...