செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

வைரக்கடத்தல் மர்மம் டயபாலிக் வகம் காமிக்ஸ்

 

வெளியீடு -வகம் காமிக்ஸ்
விலை-ரூ.160/-
பாத்திரங்கள்-க்ரே,மிராண்டா
பீட்டர்,ஜோசப், ஆண்டனி
ராய், பக்
மற்றும் பெரியவர்
இது ஒரு 
டயபாலிக் ஈவா சாகஸம்


உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றவை தள்ளினும் தள்ளாமை நீர்த்து.. குறள்தான் நினைவுக்கு வருகிறது. அருமையான பரபரப்பான அசத்தலான அதே சமயம் உணர்வுபூர்மான கதை இது. வைரக்கடத்தல்  இரகசியம் அறிந்தவர் கொல்லப்படுகிறார். சாகும்தருவாயில் ஒரு பெண் அதனை தெரிந்துகொண்டுவிட துரத்தல் படலம் நீடித்து அப்பெண்ணின் குடும்பத்தாரை இந்த கலாட்டாவுக்குள் இழுத்து வந்து விடுகிறது. பெண்ணின் சகோதரர் கொல்லப்பட பெண்ணின் அப்பா டயபாலிக்கின் உதவியை நாடுகிறார். ஒரு பழிதீர்க்கும் படலம்தொடர்கிறது. இறுதிவரை பாவம்சுமந்த வைரங்களில் தனக்கு பங்கே வேண்டாம் என பெரியவர் மறுத்து கம்பீரம் காட்ட கதை நிறைகிறது..வகம் ஜூலை வெளியீடு இது. வாய்ப்பளித்த உங்கள் அனைவரையும் வணங்குகிறேன்..🙏🏻🙏🏻🙏🏻❤‍🔥

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

காமிக்ஸ் வாசகர் வட்டம்-லயன் ஸ்பெஷல் க்ரூப்


 [8/12, 09:22] 🌟ஜானி_ஷீலா💐: நண்பர்களே!

சீனியர் எடிட்டர் என்று

நீங்கள் அன்புடன் அழைக்கும் சவுந்தர பாண்டியன் எழுதும்

மடல். நமது வெளியீடுகள் சம்பந்தமாக எடிட்டர்

அவ்வப்போது Blog மூலமும் காமிக்ஸ் Hotline, What's app,Telegram மூலமும் தொடர்பு கொண்டு 

வருகிறார்.  


எனது பங்களிப்பாக உங்களுடன் உலக காமிக்ஸ் குறித்த

செய்திகள், படங்கள் கொண்ட What's app 

group ஒன்று நடத்த விரும்புகிறேன். காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய எண் மற்றும் What's app முகவரி தெரிவிக்கிறேன்.

எண்; 95857 17993

முகவரி: World Of Comics.

 நமது வாசகர்கள் அனைவரும் இணைந்து சில சாதனைகள் படைப்போம்  வாருங்கள்!

இந்த தளத்தில் 

உலக காமிக்ஸ் பற்றி புதிய தகவல்களை

நீங்கள் அறிந்திடலாம்.

அவ்வப்போது இந்த

குழுவின் செய்திகளை

உங்கள்  நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் அனுப்பிடலாம்.

காமிக்ஸ் வாசகர் வட்டம் விரிவடைய செய்வது மட்டுமே நமது நோக்கம்.

உங்கள் வாழ் நாட்களில் புதிய வாசகர் வட்டம் உருவாகுவதைக் கண்டு மகிழ உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்!

 https://chat.whatsapp.com/F4WYmwt95pJ7SVAIi2KrJl

முத்து காமிக்ஸ் நிறுவனரே துவங்கியுள்ள வாசகர் வட்டம் இது.. கமான் ஜாயின் போர்ஸஸ்..

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

லயன் 40 ஆண்டு விழா

 வணக்கம் அன்பு நெஞ்சங்களே.. 

ஈரோடு புத்தகத்திருவிழா மிகவும் நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் சென்று நிறைவானதில் மிக்க மகிழ்ச்சி.. சோதனையாக இம்முறை மிகவுமே ஆசைப்பட்டும் கூட நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை.. பார்க்கலாம்.. 

இம்மாதம் நிறைய சிறப்பான இதழ்கள் வெளியாகி வாசகர்களை திக்கு முக்காட வைத்து விட்டது என்றால் அது மிகையல்ல.. லயன் ஒரு பக்கம் அதிரடி காட்ட வகம் ஒரு பக்கம் அடித்து ஆட சிறப்பான காமிக்ஸ் களம் களைகட்டுகிறது.. 

ஒரு அறிவிப்பு 

லயன் 40 ஆண்டு விழா நிகழ்வின் போது எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களும், வீடியோக்களும்,

 நண்பர்கள் அனைவரும் இணைந்தவுடன் மேலே உள்ள டெலிக்ராமில் பதிவேற்றப்படும்.


காமிக்ஸ் நண்பர்கள் உடனே இணையவும்.

https://t.me/+U7xKz0dz2OUxNWNl

நன்றிகள் நண்பர்களே.. 

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...