ஞாயிறு, 8 டிசம்பர், 2024

ஒற்றை ஓவியம் ஒன்பது கோடி!!!_ ஓவியர் + காவலர்_ ராபர்ட் ரைமன்_குறிப்புகள்.

 

வணக்கம் தோழமை உள்ளங்களே.. சன் செய்தி ஒரு வினோத சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது.. 
அதெப்படி ஒரு வெள்ளை ஓவியத்துக்கு ஒன்பது கோடி 


அந்த அசகாய சூரர் இவரே.. இவர் வரைந்த வெள்ளை ஓவியத்துக்கு ஏன் இந்த மதிப்பு? அதில் அப்படி ஜனங்கள் என்னதான் பார்க்கிறார்கள்? 
முதலில் யார் இந்த ரைமன்? 
அமெரிக்காவில் வாழ்ந்து நியூயார்க்கில் வெள்ளை வண்ணத்தில் மேஜிக் செய்த இவரின் வாழ்க்கைப் பயணம் May 30, 1930 – February 8, 2019 வரையிலான காலக்கட்டம். ஆனால் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இவரது ஓவியங்கள் காலம் கடந்தும் பேசப்படும். மோனோ குரோம் ஓவியங்கள், மினிமலிசம் மற்றும் கான்செப்ட் ஓவியங்கள் இவரின் தனிச் சிறப்பு மிக்கவை. 
இவர் வெள்ளை கேன்வாஸில் வெள்ளை வண்ணம் கொண்டு தீட்டும் ஓவியங்கள் மிகவும் புகழைப் பெற உதவின. டென்னஸி மாகாணத்தின் நாஷ்வில்லே நகரில் பிறந்து வளர்ந்த இவர் 1948-49ல் டென்னஸி பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டில் கல்வி பெற்றவர் பின்னர் ஆசிரியர்களுக்கான ஜார்ஜ் பீபாடி கல்லூரியில் 1949-1950களில் கல்வி பெற்று பின்னர் அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்து கொரியப் போரில் பங்கேற்றிருக்கிறார். இளம் வயது இராணுவ சேவை அமெரிக்க மண்ணில் இருந்து அந்நிய தேசத்தில் போரில் பங்கேற்றது என்று இவரது உலகம் விரிந்தது. நியூயார்க் நகரில் சாக்ஸபோன் இசைக் கலைஞர் அவதாரமும் 1953ல் எடுத்திருக்கிறார்.  


இசைக் கலைஞர்+இராணுவ வீரர் என்று இவரது வாழ்க்கைப் பயணத்தில் பல்வேறு அனுபவங்களை பெற்றவர் இவர்.. அது மட்டும்தானா?
அடுத்த வினாடி நிலையற்ற இவ்வாழ்வில் நாளை நடப்பதை யார் அறிவார்? 
ஒரு பாதுகாவலனாக நியூயார்க் நகரிலுள்ள நவீனத்துவ ஓவியங்களின் மியூசியத்தில் பணிக்கு சேர்ந்தவருக்கு அங்கே சோல் லீவிட் மற்றும் டான் ப்லாவின் போன்ற ஓவியர்கள் பரிச்சயமானார்கள்.  
அங்கே 1960 வரை பாதுகாவலராகவே ஓவியங்களைக் காப்பாற்றி வந்தவர் அவராவார். 


தனது அபார்ட்மெண்ட்டில் ஓவியக் கருவிகளை வாங்கி 1953முதலே பல முயற்சிகளை செய்து பழகி வந்தார். அதன் தொடர்ச்சியாகவே அவரது  சிறந்த ஓவியங்கள்  படைக்கப்பட்டு சிறிது சிறிதாக வெற்றியை சுவாசித்து இன்று ஒற்றை வெள்ளைப் பக்கத்துக்கு ஒன்பது கோடியா என உலகத்தை வாய் பிளக்க செய்திருக்கிறார். இன்று அவர் நம்மிடையே இல்லை என்றாலும் அவர் ஓவிய விரும்பிகளின் மனதில் என்றும் இளமையாக வாழ்வார்.. 


அவரது புகழ்பெற்ற வாக்கியம்.. 
"என்ன வரைந்தாய் என்று கேட்பதை விட எப்படி வரைந்தாய் என்று கேளுங்கள்.."  

ஒரு இன்டர் வியூவில் அவரிடம் கேட்கப்பட்டவை தமிழில்.. 

நீங்கள் வெள்ளை ஓவியங்களை உருவாக்குகிறீர்களா?

இல்லை, இது மேலோட்டமாகத் தோன்றலாம், ஆனால் நிறைய நுணுக்கங்கள் உள்ளன மற்றும் அதில் வண்ணம் உள்ளது. எப்போதும் மேற்பரப்பு பயன்படுத்தப்படுகிறது. எஃகு சாம்பல் மூலம் வருகிறது; நெளி காகித பழுப்பு மூலம் வருகிறது; கைத்தறி மூலம் வருகிறது, பருத்தி (இது பெயிண்ட் போன்றது அல்ல - இது வெண்மையாகத் தெரிகிறது): இவை அனைத்தும் கருதப்படுகின்றன. இது உண்மையில் ஒரே வண்ணமுடைய ஓவியம் அல்ல. அது ஒரு பெயிண்ட் மற்றும் அது தலையிடாததால் வெள்ளை நடந்தது. நான் பச்சை, சிவப்பு, மஞ்சள் பயன்படுத்த முடியும், ஆனால் ஏன்? சிவப்பு, பச்சை மற்றும் விஷயங்களை குழப்பும் எல்லாவற்றிலும் ஈடுபடாமல், வண்ணப்பூச்சியைப் பயன்படுத்துவதும், அதில் ஏதாவது ஒன்றைச் செய்வதும் எனக்கு ஒரு சவாலாக இருக்கிறது. ஆனால் நான் எப்போதும் வண்ணத்துடன் வேலை செய்கிறேன். நான் என்னை வெள்ளை ஓவியம் வரைவதாக நினைக்கவில்லை. நான் ஓவியங்கள் வரைகிறேன்; நான் ஒரு ஓவியன். வெள்ளை பெயிண்ட் என் ஊடகம். இதில் நிறைய வண்ணங்கள் உள்ளன. நான் சிவப்பு, பச்சை, மஞ்சள் போன்ற நிறங்களைக் குறிக்கவில்லை; ஆனால், நிறம், அந்த அர்த்தத்தில்.

உங்கள் வெள்ளை நிறத்தில் வேறு எந்த நிறங்களையும் கலக்கிறீர்களா?

இல்லை, பொதுவாக இது தூய வெள்ளை மற்றும் நான் மேற்பரப்பை நிறமாக அனுமதிக்கிறேன். உதாரணமாக, எஃகில் இருக்கும் நிலையான ஓவியங்களுடன், நான் எஃகின் சாம்பல் நிறத்தைப் பயன்படுத்தினேன்; துணியுடன், நான் துணியின் நிறத்தைப் பயன்படுத்துவேன். இந்த எல்லா சந்தர்ப்பங்களிலும், அது தூய வெள்ளை போடுகிறது. ஆனால் நான் செய்த லித்தோகிராப்பில் வெள்ளை நிறத்தை மாற்றினேன். நான் அதை சூடேற்றினேன்; காகிதத்தின் சூழ்நிலை மற்றும் அது எவ்வாறு அச்சிடப் போகிறது என்பதன் காரணமாக லித்தோகிராப்பின் மையில் சிறிது மஞ்சள் போட்டேன். வெதுவெதுப்பான வெள்ளை மற்றும் மிகவும் சாம்பல், குளிர் வெள்ளை நிறங்கள் உள்ளன, அது வெள்ளை நிறத்தின் பிராண்ட் அல்லது நீங்கள் எந்த வகையான பெயிண்ட் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. ஆனால், அதில் நான் அதிக கவனம் செலுத்துவதில்லை.

மேலும் வாசித்து அந்த மேதையை உணர்ந்து கொள்வது சிறப்பு இதோ அதற்கான சிறு வாசலை நான் திறந்து வைக்கிறேன்..

https://www.artforum.com/features/an-interview-with-robert-ryman-213235/


என்றும் உங்கள் அன்பின் மழையில் நனைந்து கொண்டே இருக்கும்.. 
ஜானி 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒற்றை ஓவியம் ஒன்பது கோடி!!!_ ஓவியர் + காவலர்_ ராபர்ட் ரைமன்_குறிப்புகள்.

  வணக்கம் தோழமை உள்ளங்களே.. சன் செய்தி ஒரு வினோத சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது..  அதெப்படி ஒரு வெள்ளை ஓவியத்துக்கு ஒன்பது கோடி  அந்த அ...