ஒரு ஹேப்பி நியூஸ்.. காமிக்ஸ் எனும் கனவுலகப் போட்டியில்
2014ல் வெளியான இரவே இருளே கொல்லாதே சித்திரக்கதையிலிருந்து விமர்சனப் போட்டி வைத்தனர். அதில் பரிசைத் தட்டிட்டாரு நம்ம தோழர் @Sures Thanapal கூடவே நானும்..ஹிஹி விமர்சிச்ச அத்தனை பேரையுமே பரிசால் மகிழ்விச்சிருக்காங்க..
அவர்கள்
@Gunasekaran Muthuswamy
@discoverboo_Boopathi Rasipiram Nagpur
@~Baranitharan
@Sures Thanapal
@Cm Siva Ingam Cni 😇
@~Thottam Siva
@🤩Chris Ruban🥳
@சின்னமனூர் பி சரவணன்
@~Madhusoodhanan RK
காமிக்ஸ் எனும் கனவுலக நிர்வாகிகள் உறுப்பினர்கள் சக வாசகர்கள் அனைவருக்கும் தமிழ் காமிக்ஸ் வாசக வட்டம் சார்பாக நன்றிகள்.
அடுத்து நான் எழுதிய
இரவே இருளே கொல்லாதே விமர்சனத்திலிருந்து
காமிக்ஸ் என்னும் கனவு உலகம் விமர்சனப்போட்டி
தலைப்பு இரவே.. இருளே.. கொல்லாதே!
நடிகை ஒருத்தி தன்னுடைய எதிர்காலத்தை சிறப்பாக்கிக் கொள்ள வேண்டிப் பயணப்படுகிறாள். அப்போது கார் ஒரு விபத்தில் சிக்கி விட ஒரு குக்கிராமத்தில் சிகிச்சைக்காக தங்க நேரிடுகிறது. அவளை துரத்தும் இறந்த கால நினைவுகளில் அங்கிள் செஸ்டர் காமுகனாக துரத்திவர நிகழ்கால நடப்பில் சைக்கோ கொலையாளி ஒருவன் அவளை சுற்றிச்சுற்றி வலைப்பின்னலாக கொலைகளை நிகழ்த்தி வலைக்குள் சிக்க வைக்க முயற்சிக்கிறான். அவ்வப்போது கற்பனை கலந்த கனாக்களின் தாக்கமும் அவளை வாட்டியெடுக்கிறது. இந்த சைக்காலஜிக்கல் திரில்லருக்குள் கதைக்குள் கதையாக ஏகப்பட்ட கதைமாந்தர்கள் நிறைந்திருக்க நாம் காமிக்ஸ்தான் வாசிக்கிறோமா இல்லை இந்த அப்பாவிப் பெண்ணைத் துரத்திடும் பூச்சாண்டியின் கொடூரமான பல பாகத் திரைப்படத்துக்குள் ஒரு பாத்திரமாகி விடுகிறோமா என்ற சந்தேகமே எழுகிறது. வழக்கமான சைக்கோ த்ரில்லர்களின் கொலையாளிகள் பின்புலமாக கொலையாளியை நியாயப்படுத்தும் ஒரு கதைப்பின்புலம் இருக்கும். இங்கே நட்பு வட்டம் ஒன்றும் அதன் தைரியத்தை சோதிக்கும் ஒரு ஹேங்மேன் வீடும் பல திகில் சம்பவங்களும் நம்மை ப்ரேம் பை ப்ரேம் திகைப்புக்குள்ளும் குழப்பத்திலும் சிக்கலுக்குள்ளும் கதையை விட்டு நகராவண்ணம் இறுக்கிக் கட்டிப் போட்டு விடுகின்றன.. ஜோயெல் காலெடேவின் கதையமைப்பும் ஓவியர் டெனிஸின் கொடூரப் பூசணிக்காய் இளிப்போவியங்களும் ஹ்யூபெர்ட்டின் இருளும் ஆழமுமான வண்ணங்களும் லயன் காமிக்ஸ் கதைத் தேர்வும் தீபாவளி மலராக வெளியிடப்பட்ட இம் மூன்று பாகக் கதையும் ஹாலோவீன் தினத்திலேயே வெளியிடப்பட்டு நம்மை ஹாரர் கதைக்களத்துக்குள் தள்ளிய விதமும் நிச்சயமாக சிறப்பானவை.. குறியீடாக பூசணிக்காய்களும் புனுகுப்பூனை ஒன்றும் கதை நெடுக ஹாலோவீன் தொடர்புடைய காட்சிகளும் ஆங்காங்கே சரியான இடத்தில் வந்து ஒரு புரட்டுப்புரட்டி விட்டுப் போகிறது. ஆக மொத்தம் த்ரில் விரும்பும் பலமான இதயங்களுக்கும் கதையில் வரும் திரைப்பட ஓனரினைப் போல தைரியமாக பேய்ப்படங்களை ஒற்றை ஆளாக தியேட்டரிலேயே அமர்ந்து பார்க்கும் தில்லான வாசகர்களுக்கும் செமத்தியான ட்ரீட் இந்த இரவே..இருளே..கொல்லாதே..
நன்றிகள் அகெய்ன்.