நமது அன்புக்கும் பாசத்துக்கும் வெள்ளை இளவரசி மீதான தனியொரு காதலுக்கும் சொந்தக்காரர் ஆசிரியர் திரு.சரவணன் அவர்களது இனிய பிறந்ததினத்திற்கான அன்பளிப்பாகவும் நம்மவர் திரு.கணேஷ்குமார் அவர்களது பயிற்சி முடிந்து சிறப்பான தருணத்தின் மகிழ்ச்சியைப் பகிரவும் அபூர்வங்களை அகழ்ந்தாய்வு செய்து நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ள தோழர் திருமலை அவர்களின் அம்புலிமாமா 1972 நவம்பர் மாத இதழின் புதுப்பிக்கப்பட்ட பிரதியினை வாசக தெய்வங்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம்..
தரவிறக்க சுட்டி..
லயன் காமிக்ஸ் மே மாத இதழ்கள் இன்று முதலே ஆன்லைன் விற்பனைக்கு வந்து விட்டன.. மூன்று இதழ்கள்..
மைனாவோடு மஞ்சு விரட்டு, நிழல் ஓநாய்கள், ஜன்னலோரமாய் மரணம் ஆகிய மூன்று இதழ்கள்.. டெக்ஸ் இம்முறை இடம்பெறவில்லை..
மைனாவோடு மஞ்சு விரட்டு..
நினைவுகளைத் தொலைத்து விட்டுத் தேடும் மனிதன் XIIIன் கதையில் வரும் கிளைக்கதை இது. பெலிசிட்டி பிரவுன்.. நமது நாயகனின் சித்தி.
நினைவுகள் மீண்டு தன் குடும்பத்தாரோடு இணைந்து கொள்ள சந்தோஷமாக வந்த xiii ஐ கொலைக்குற்றத்தில் சிக்க வைத்து விட்டு அவரது சொத்தை மொத்தமாக ஆட்டையைப் போட்டவள்.. இது ஏன் அவள் இவ்வளவு கல்நெஞ்சக்காரியாக வாழ்க்கையை நடத்தினாள் என்பதே இந்த கிளைக்கதையில் ஆராயப்படுகிறது.. இது அவளது தொடர்ந்த நிகழ்வுகளை நமக்கு தெரிவிக்கும் முகமாக உருவான கதை. கொலைப்பழி சுமந்த xiii ஐ ஒரு கட்டத்தில் வேறு இடத்தில் சந்திக்க நேர்கிறது. மிகவும் அருமையானதொரு கதை..
அடுத்து ஸகுவாரோ ஒரு நவ நாகரிகமான காலக்கட்டத்தில் வாழும் செவ்விந்திய நாயகன் சந்திக்கும் பிரச்சினைகளை கூறும் அதிரடிக்கதை.. நிழல் ஓநாய்கள்.. நமக்குப் பிடித்தமான நவஜோ செவ்விந்திய இளைஞன். டெக்ஸ் நவஜோ இனத்தவரின் தலைவர் என்பதால் உடனே இவரை மனதுக்குள் வா நட்பே என்று வரவேற்கத் தூண்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக