வியாழன், 15 ஜனவரி, 2026

இரும்புக்கை மாயாவி_திரைப்படம் தொடர்பாக..

 வணக்கங்கள் வாசக வாசகியரே.. அனைவருக்கும் ஹேப்பி பொங்கல்..

ஒரே விஷயம்தான். ஒரு சர்வதேச கதையை நாம என்னதான் இந்திய ரீதியில் எடுத்தாலும் அதன் ஆன்மா சிதைந்து விடும்.. நிழற்படை தலைவர் மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நம் சித்திரக்கதை வாசகர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து விட்ட ஒன்று.. அதனை எப்படித் தழுவி எடுத்தாலும் "பிரயோஜனமில்லை பாஸ்" நீங்க ஆயிரம் கோடி வசூல் பண்ணாலும் நாங்க வெறுமே வேடிக்கைதான் பார்ப்போம்.. இதை பொழுது போக்குக்காக பார்த்துக்கிறோம். எங்க லூயிஸ் கிராண்டேல் _லோக்கல் புஸ்பாவா எப்பயும் மாற முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்து கொள்கிறேன்..



விஞ்ஞானி பாரிங்கரின் ஆராய்ச்சி உதவியாளனாக ஸ்டீல் க்ளா ஒரு சாதாரண நபராகவே அறிமுகமாகிறார் ஸ்டீல் கிளா கதையில். ஒரு விபரீதமான ரசாயன விபத்தில் அந்த அற்புதம் நிகழ்கிறது.. மாய உருவம் கிடைக்கப்பெற்றாலும் வலது மணிக்கட்டை அந்த விபத்தில் இழந்து விட்டார் அந்த அப்பாவி உதவியாளன்.. அதன் பின்னர் தன்னிலை உணராது பல சிக்கல்களை உருவாக்கி அவற்றில் இருந்து மீள்கிறார். அவரை பிரிட்டிஷ் இரகசிய அமைப்பான நிழற்படை தன் வீரர்களில் ஒருவராக மாற்றிக் கொண்ட பின்னரே உலகைக் காக்கும் ஏகப்பட்ட சாகசங்களை நிகழ்த்துகிறார் இரும்புக்கை மாயாவி.. அவருக்கு பொருத்தப்பட்டிருக்கும் கரம் அதில் இருக்கும், துப்பாக்கி, மயக்க வாயு, டிரான்ஸ்மீட்டர் போன்றவை அக்கால வாசகர்களால் அதி அற்புதமான கருவிகளாகக் கொண்டாடப்பட்டன. இன்றோ பல்வேறு நாகரிகக் கருவிகளும் உபகரணங்களும் உலகை ஆண்டு வரும் தலைமுறைகளின் பிடிக்குள் இருக்கும் காலக்கட்டம்.. இப்போதும் அதே லூயிஸ் கிராண்டேலுக்கு தனி மவுசினை புத்தக விழாக்களில் கண்கூடாகக் காண்கிறோம்.. அந்த அளவுக்கு செல்வாக்கான கதாநாயகரை ஒரு அவதார் லெவல் ஹாலிவுட் இயக்குனர் இயக்கினால் அதில் அர்த்தம் இருக்கும்.. ஸ்னைடர் இருக்கிறார் அவரிடமாவது முயற்சித்துப் பார்க்கலாம். ரூசோ பிரதர்ஸ் இருக்கிறார்கள்..அவெஞ்சர்களை மிகவும் சிறப்பாகக் காண்பித்தவர்கள்.. இப்படி ஒரு கதாநாயகரை லோக்கல் குத்து சாங்கில் காண சகிக்காது என்பதே ஒரு சராசரி காமிக்ஸ் இரசிகனாக என் பர்சனல் எண்ணம்..இதனை ஒரு முறை மிஷ்கினிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்.. நமது நண்பர்கள் அவருக்கும் நண்பர்களே.. 
அவர் எடுத்த முகமூடியை லோக்கலாக உருவாக்கிய விதத்தில் பல சிக்கல்களைக் கொண்டு வந்து விட்டார்.. ஆகவே அப்படியே விட்டு விட்டேன்.. 
இப்போது லோகேஷ் கனகராஜ். அவருக்கும் இப்போது நான் சொல்ல நினைப்பது இதுதான்.. இரும்புக்கை மாயாவி முதல் லோக்கல் பறக்கும் மாயாவி, பெல்ட் மாயாவி, மாத்திரை மாயாவி வரை வாசித்த வாசகர்கள் சார்பில் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றுதான்.. அந்த  இரும்புக்கை மாயாவியை அப்படியே விட்ரலாமே தலீவா.. நமக்கு வேற கதைகளா இல்லை? 
நன்றி.. ஹேப்பி பொங்கல் ஆல்.. 

இல்லை..விட முடியாது என்கிறீர்களா..சரி இதை வாசியுங்கள்..ஸ்டீல் கிளா + ஆந்திரா கரம் மசாலாவுடன் லோக்கல் வைப் பண்ண ஒரு திரைப்பட இரசிகராகக் காத்திருப்போம்.. வேற வழி.. 

1 கருத்து:

  1. இந்த கதை இருக்காது அண்ணா. இதை தழுவிய வேற கதையாக இருக்கலாம்

    பதிலளிநீக்கு

இரும்புக்கை மாயாவி_திரைப்படம் தொடர்பாக..

 வணக்கங்கள் வாசக வாசகியரே.. அனைவருக்கும் ஹேப்பி பொங்கல்.. ஒரே விஷயம்தான். ஒரு சர்வதேச கதையை நாம என்னதான் இந்திய ரீதியில் எடுத்தாலும் அதன் ஆன...