வணக்கங்கள் அன்புள்ளங்களே.. விடுபட்ட இந்திரஜால் காமிக்ஸ்களை மீட்டெடுக்கும் தவசீலர் திரு.செந்தில்நாதன் அவர்களது தேடலின் விளைவாக கிடைக்கப்பெற்ற இந்த அபூர்வமான சித்திரக்கதையை நம்முடன் மனமுவந்து பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு நமது அன்பும் நன்றியும்..
இதில் சிறு கதைகள் சில இடம்பெற்றிருக்கின்றன..
-கம்பி நீட்டிய கள்ளர்கள்
-காவு வாங்கிய கழுகுக் கூடு
-எட்டாத கபால குகை
ஆகியவை வீர வேதாளனின் சாகசங்களின் புகழ் பாடுகின்ற கதைகளாக இடம்பெற்றுள்ளன..
ஆக முழுமையான பரவச அனுபவத்துடன் இந்த ஆதிகால புத்தகத்தை வாசித்து மகிழ நமக்கு வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ள தமிழ் வாசகர் வட்ட அன்புள்ளம் திரு.செந்தில்நாதன் மற்றும் அனைத்து தமிழ் காமிக்ஸ் இரசிகர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. தேடல்கள் தொடரட்டும்.. என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய... என்ன லிங்க் ஆ?
தந்துடறேன் பிரண்ட்ஸ்..
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக