புதன், 25 டிசம்பர், 2024

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்


 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். அவரது பல்வேறு கட்டுரைகளையும் ஒரு தொகுப்பாக தொகுத்து ஏழு நூல்களாக நமக்குப் பரிமாறவிருக்கிறார். அதற்கான வெளியீட்டு விழா இன்று இன்னும் பதினைந்தே நிமிடங்களில் துவங்கவிருக்கிறது.. அவரை ஒரு இரசிகனாகவும், நண்பனாகவும், இப்போது பணிமாறுதலால் நூறு கிலோமீட்டருக்கு அப்பால் சற்றே  தூரத்தில் இருந்தும்  இரசித்து வாழ்த்திக் கொள்கிறேன்.. அவரது வலைப்பூ இணைப்பு இதோ.. 

https://tamilcomicsulagam.blogspot.com/

நாம் ஒரு கதையைப் படித்து விட்டு அப்படியே கடந்து சென்று விடுவோம். அதன் பின்னணி, அதில் சம்மந்தப்பட்ட ஓவியர்கள், கதாசிரியர்கள் பற்றிய குறிப்புகளை சுவாரசியம் கலந்து தருவது இவரது பாணி.. ஆன்லைனில் வாசித்த கட்டுரைகள் இப்போது சிறப்பாக எடிட் செய்யப்பட்டு ஓவியங்கள் இணைத்து புத்தகமாகக் கையில் ஏந்தும்படி வெளியாவது கணினி உலகுக்கு அப்பாற்பட்ட சராசரி வாசகர்கள் உலகத்துக்கு சிறந்த வழிகாட்டியாக அமைந்திடும் என்பதில் ஐயமில்லை.. ஆரவாரமான சென்னை புத்தக திருவிழாவில் இந்த நூல்களை வாங்கி மகிழலாம்.. கிடைக்கும் ஸ்டால்கள் குறித்த விவரங்களுக்கு ஸ்டே ட்யூன்ட்.. 

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன். 

ஸ்ப்லாஷி_ஒரு ப்ளாடிபஸ்_அறிமுகம்_சிறார் காமிக்ஸ்!

 இனியவர் இயேசு பிறப்பின் கொண்டாட்ட நிகழ்வான  கிறிஸ்துமஸ் தின நன்னாள் வாழ்த்துக்கள் தோழமை உள்ளங்களே.. அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்களும்.. 


ஸ்ப்லாஷி.. தமிழில் முதன்முறையாக அறிமுகப்படுத்திக் கொள்வோம்.. குட்டிப் பையன் ஸ்ப்லாஷி ஒரு பிளாட்டிபஸ். அவனுக்கும் மற்ற சிறுவர்கள் போன்று ஆட்டம் போடுவதும் ஓட்டம் விடுவதுமே ஆர்வம். ஆல் கலர் காமிக்ஸ் என்கிற இதழில் இந்த சுட்டிப் பையன் காணக்கிடைத்தான். அவன் தமிழில் பேசினால் எப்படி இருக்கும் என்கிற கற்பனைக்கு உயிர்கொடுக்க ஒரு சின்னஞ்சிறு முயற்சியே இது.. என்ஜாய்.. 


இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களுடன் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.. ஹேப்பி xmas! 

  

வெள்ளி, 20 டிசம்பர், 2024

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்... 

இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்" லென்று முழுவண்ணத்தில் நமது குட்டி ஆஞ்சநேயர் களமிறங்கி வனத்தின் அப்பாவி ஜீவன்களுக்குப் பாதுகாப்பு நல்குகிறார்.. அந்த சித்திரக்கதை விவரங்கள் இதோ.. 

லயன் லைப்ரரியில் வெளியாகி இருக்கும் கபீஷ்தான் அந்த நாயகன்..
சிறார் மனங்களை கவர்ந்து இழுத்த நாயகன் சுட்டிப்பயல் கபீஷ்.. தமிழில் சிறப்பான வடிவங்களில் ப[பலமுறை வெளியிடப்பட்டு நற்பெயரைப் பெற்ற இந்தத் தொடரில் வேட்டையன், புலி, நரி என்று வில்லத்தனங்களும் அப்பாவி முயல்களும் சிறுவர்களுக்குப் புது உலகினை எப்போதும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பதுதான் விஷேசம்.. இந்த கபீஷ் இப்போது முழு வண்ணத்தில் நம்மை மகிழ்விக்க நூறு ரூபாய் விலையில் லயன் லைப்ரரியின் நாற்பத்து மூன்றாவது வெளியீடாக மலர்ந்திருக்கிறது.. 
முன்பு பூந்தளிர்-பைக்கோ க்ளாசிக்ஸ் பதிப்பகங்கள் தொகுப்பாக வெளியிட்டிருக்கின்றன.. 
 



1989ம் ஆண்டில் வெளியான ஒரு விளம்பரம்.. பூந்தளிர் கொண்டு வந்த தொகுப்பினைப் பற்றிய குறிப்பு.. 
லயன் தளத்தில் ஆன்லைனில் வாங்க லிங்க் இதோ.. 

https://lion-muthucomics.com/latest-releases/1270-kapish-special-1.html

புதன், 18 டிசம்பர், 2024

க்வாக் சுந்தரம் பராக்! பராக்! பராக்! _கணேஷ் பாலா கலக்கல் பதிப்பில்..

 செ.பு.க.-1

=======


வரவிருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சிக்காக நான் தங்கத்தாமரை பதிப்பகத்துக்காக வடிவமைத்த சில விசேடமான புத்தகங்களைத் தினம் ஒன்றாக இங்கே அறிமுகம் செய்யலாம் என்றிருக்கிறேன்.

அந்த வரிசையில் முதலாவதாக... முகத்தில் புன்னகை விலகாமல் படிக்க வைக்கும், படித்த பிறகும் ஓவியங்களை ஒருமுறை பார்த்து ரசிக்க வைக்கும், பிறிதொரு நாளில் மன உற்சாகத்துக்காக மீண்டும் படிக்கத் தூண்டுகிற ஒரு சித்திரக் கதை புத்தகம். இல்ல, வேணாம்.. படக்கதை புத்தகம்.. இல்லையில்ல.. காமிக்ஸ்ன்னே வெச்சுக்கலாம் (குணா கமல் குரலை மனதுக்குக் கொண்டு வரவும்)

எழுநூற்று எழுபத்தேழு ரூபாய் எழுபது பைசா விலை வைக்க வேண்டிய இந்த காமிக்ஸ், உங்களுக்காக வெறும் 70 ரூபாயிலேயே பதிப்பிக்கப்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன், ச்சே, மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொல்கிறேன், ச்சே, கொள்கிறேன்.

மேலும் அதிக விவரங்களை அறிந்து கொண்டு வாங்கி ஆதரிக்க உதவியாக இந்த பதிவினையும் இரசியுங்கள்.. 

க்வாக் சுந்தரம் -ஒரு அறிமுகம்

ஞாயிறு, 8 டிசம்பர், 2024

ஒற்றை ஓவியம் ஒன்பது கோடி!!!_ ஓவியர் + காவலர்_ ராபர்ட் ரைமன்_குறிப்புகள்.

 

வணக்கம் தோழமை உள்ளங்களே.. சன் செய்தி ஒரு வினோத சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது.. 
அதெப்படி ஒரு வெள்ளை ஓவியத்துக்கு ஒன்பது கோடி 


அந்த அசகாய சூரர் இவரே.. இவர் வரைந்த வெள்ளை ஓவியத்துக்கு ஏன் இந்த மதிப்பு? அதில் அப்படி ஜனங்கள் என்னதான் பார்க்கிறார்கள்? 
முதலில் யார் இந்த ரைமன்? 
அமெரிக்காவில் வாழ்ந்து நியூயார்க்கில் வெள்ளை வண்ணத்தில் மேஜிக் செய்த இவரின் வாழ்க்கைப் பயணம் May 30, 1930 – February 8, 2019 வரையிலான காலக்கட்டம். ஆனால் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இவரது ஓவியங்கள் காலம் கடந்தும் பேசப்படும். மோனோ குரோம் ஓவியங்கள், மினிமலிசம் மற்றும் கான்செப்ட் ஓவியங்கள் இவரின் தனிச் சிறப்பு மிக்கவை. 
இவர் வெள்ளை கேன்வாஸில் வெள்ளை வண்ணம் கொண்டு தீட்டும் ஓவியங்கள் மிகவும் புகழைப் பெற உதவின. டென்னஸி மாகாணத்தின் நாஷ்வில்லே நகரில் பிறந்து வளர்ந்த இவர் 1948-49ல் டென்னஸி பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டில் கல்வி பெற்றவர் பின்னர் ஆசிரியர்களுக்கான ஜார்ஜ் பீபாடி கல்லூரியில் 1949-1950களில் கல்வி பெற்று பின்னர் அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்து கொரியப் போரில் பங்கேற்றிருக்கிறார். இளம் வயது இராணுவ சேவை அமெரிக்க மண்ணில் இருந்து அந்நிய தேசத்தில் போரில் பங்கேற்றது என்று இவரது உலகம் விரிந்தது. நியூயார்க் நகரில் சாக்ஸபோன் இசைக் கலைஞர் அவதாரமும் 1953ல் எடுத்திருக்கிறார்.  


இசைக் கலைஞர்+இராணுவ வீரர் என்று இவரது வாழ்க்கைப் பயணத்தில் பல்வேறு அனுபவங்களை பெற்றவர் இவர்.. அது மட்டும்தானா?
அடுத்த வினாடி நிலையற்ற இவ்வாழ்வில் நாளை நடப்பதை யார் அறிவார்? 
ஒரு பாதுகாவலனாக நியூயார்க் நகரிலுள்ள நவீனத்துவ ஓவியங்களின் மியூசியத்தில் பணிக்கு சேர்ந்தவருக்கு அங்கே சோல் லீவிட் மற்றும் டான் ப்லாவின் போன்ற ஓவியர்கள் பரிச்சயமானார்கள்.  
அங்கே 1960 வரை பாதுகாவலராகவே ஓவியங்களைக் காப்பாற்றி வந்தவர் அவராவார். 


தனது அபார்ட்மெண்ட்டில் ஓவியக் கருவிகளை வாங்கி 1953முதலே பல முயற்சிகளை செய்து பழகி வந்தார். அதன் தொடர்ச்சியாகவே அவரது  சிறந்த ஓவியங்கள்  படைக்கப்பட்டு சிறிது சிறிதாக வெற்றியை சுவாசித்து இன்று ஒற்றை வெள்ளைப் பக்கத்துக்கு ஒன்பது கோடியா என உலகத்தை வாய் பிளக்க செய்திருக்கிறார். இன்று அவர் நம்மிடையே இல்லை என்றாலும் அவர் ஓவிய விரும்பிகளின் மனதில் என்றும் இளமையாக வாழ்வார்.. 


அவரது புகழ்பெற்ற வாக்கியம்.. 
"என்ன வரைந்தாய் என்று கேட்பதை விட எப்படி வரைந்தாய் என்று கேளுங்கள்.."  

ஒரு இன்டர் வியூவில் அவரிடம் கேட்கப்பட்டவை தமிழில்.. 

நீங்கள் வெள்ளை ஓவியங்களை உருவாக்குகிறீர்களா?

இல்லை, இது மேலோட்டமாகத் தோன்றலாம், ஆனால் நிறைய நுணுக்கங்கள் உள்ளன மற்றும் அதில் வண்ணம் உள்ளது. எப்போதும் மேற்பரப்பு பயன்படுத்தப்படுகிறது. எஃகு சாம்பல் மூலம் வருகிறது; நெளி காகித பழுப்பு மூலம் வருகிறது; கைத்தறி மூலம் வருகிறது, பருத்தி (இது பெயிண்ட் போன்றது அல்ல - இது வெண்மையாகத் தெரிகிறது): இவை அனைத்தும் கருதப்படுகின்றன. இது உண்மையில் ஒரே வண்ணமுடைய ஓவியம் அல்ல. அது ஒரு பெயிண்ட் மற்றும் அது தலையிடாததால் வெள்ளை நடந்தது. நான் பச்சை, சிவப்பு, மஞ்சள் பயன்படுத்த முடியும், ஆனால் ஏன்? சிவப்பு, பச்சை மற்றும் விஷயங்களை குழப்பும் எல்லாவற்றிலும் ஈடுபடாமல், வண்ணப்பூச்சியைப் பயன்படுத்துவதும், அதில் ஏதாவது ஒன்றைச் செய்வதும் எனக்கு ஒரு சவாலாக இருக்கிறது. ஆனால் நான் எப்போதும் வண்ணத்துடன் வேலை செய்கிறேன். நான் என்னை வெள்ளை ஓவியம் வரைவதாக நினைக்கவில்லை. நான் ஓவியங்கள் வரைகிறேன்; நான் ஒரு ஓவியன். வெள்ளை பெயிண்ட் என் ஊடகம். இதில் நிறைய வண்ணங்கள் உள்ளன. நான் சிவப்பு, பச்சை, மஞ்சள் போன்ற நிறங்களைக் குறிக்கவில்லை; ஆனால், நிறம், அந்த அர்த்தத்தில்.

உங்கள் வெள்ளை நிறத்தில் வேறு எந்த நிறங்களையும் கலக்கிறீர்களா?

இல்லை, பொதுவாக இது தூய வெள்ளை மற்றும் நான் மேற்பரப்பை நிறமாக அனுமதிக்கிறேன். உதாரணமாக, எஃகில் இருக்கும் நிலையான ஓவியங்களுடன், நான் எஃகின் சாம்பல் நிறத்தைப் பயன்படுத்தினேன்; துணியுடன், நான் துணியின் நிறத்தைப் பயன்படுத்துவேன். இந்த எல்லா சந்தர்ப்பங்களிலும், அது தூய வெள்ளை போடுகிறது. ஆனால் நான் செய்த லித்தோகிராப்பில் வெள்ளை நிறத்தை மாற்றினேன். நான் அதை சூடேற்றினேன்; காகிதத்தின் சூழ்நிலை மற்றும் அது எவ்வாறு அச்சிடப் போகிறது என்பதன் காரணமாக லித்தோகிராப்பின் மையில் சிறிது மஞ்சள் போட்டேன். வெதுவெதுப்பான வெள்ளை மற்றும் மிகவும் சாம்பல், குளிர் வெள்ளை நிறங்கள் உள்ளன, அது வெள்ளை நிறத்தின் பிராண்ட் அல்லது நீங்கள் எந்த வகையான பெயிண்ட் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. ஆனால், அதில் நான் அதிக கவனம் செலுத்துவதில்லை.

மேலும் வாசித்து அந்த மேதையை உணர்ந்து கொள்வது சிறப்பு இதோ அதற்கான சிறு வாசலை நான் திறந்து வைக்கிறேன்..

https://www.artforum.com/features/an-interview-with-robert-ryman-213235/


என்றும் உங்கள் அன்பின் மழையில் நனைந்து கொண்டே இருக்கும்.. 
ஜானி 


சனி, 7 டிசம்பர், 2024

விட்டோரியோ ஜியார்டினோ_குறிப்புகள்.

 

விட்டோரியோ ஜியார்டினோ வடக்கு இத்தாலியில் பிறந்து வளர்ந்து பட்டம் பெற்ற ஒரு எலக்ட்ரிக்கல் எஞ்சினியர் ஆவார். 1969ல் பணிக்கு சென்று முப்பதாம் அகவையில் தனக்கு இலக்கு அதுவல்ல என்று திடமாக முடிவெடுத்து பணியைக் கைகழுவி விட்டு தன் வாழ்க்கையைக் காமிக்ஸ் பாதையில் திசை திருப்பினார். ஆனாலும் இரண்டு ஆண்டுகள் கழித்தே தன் முதல் கதையை வெளியிட்டார். அதுவரையிலும் அர்ப்பணிப்புடன் ஓவிய மற்றும் கதை எழுதும் திறனை வளர்த்துக் கொள்ள கடும் பயிற்சிகள் மேற்கொண்டிருப்பார். இரண்டு ஆண்டுகள் என்பது நம்மால் நினைத்துப் பார்க்கவும் முடிந்திராத சைலன்ட் பீரியட்.. தன் இலக்கினைத் தீர்மானித்த இதயம் எப்படியும் அதை அடைந்தே தீரவேண்டும் என்கிற பேராவல் கொள்ளும்போது இது சாத்தியப்படும். ஏன் அப்படிப்பட்டவர்களுக்கே வானம் வசப்படும்.
முதல் கதையாக பாக்ஸ் ரோமனா இத்தாலிய கம்யூனிஸ்ட் இளைஞர் கூட்டமைப்பின்  சார்பில் வார இதழாக வெளியாகிக் கொண்டிருந்த லா சிட்டா ப்யூச்சுராவில் வெளியானது. 


அவரது சித்திரக்கதைகள் லிஸ்ட் இதோ.. 

  • Pax Romana (1978)
  • Da territori sconosciuti (1978)
  • Ritorno felice (1978)
  • La Predella di Urbino (1978)
  • Encomiendero (1978)
  • Un cattivo affare (1978)
  • Sam Pezzo: Piombo di mancia (1979)
  • Sam Pezzo: Nessuno ti rimpiangerà (1979)
  • Sam Pezzo: Risveglio amaro (1980)
  • Sam Pezzo: La trappola (1979)
  • Sam Pezzo: Merry Christmas (1980)
  • Sam Pezzo: L'ultimo colpo (1980)
  • Sam Pezzo: Juke box (1981)
  • Max Fridman: Rapsodia Ungherese (1982)
  • Sam Pezzo: Shit City (1982)
  • Sam Pezzo: Nightlife (1983)
  • L'ultimatum (1983)
  • C'era una volta in America (1984)
  • A Carnevale... (1984)
  • Circus (1984)
  • A Nord-Est di Bamba Issa (1984)
  • Max Fridman: La Porta d'Oriente (1985)
  • Little Ego (1985-1989)
  • Umido e Lontano (1987)
  • Sotto falso nome (1987)
  • Candidi segreti (1988)
  • Safari (1988)
  • Fuori stagione (1988)
  • Quel brivido sottile (1988)
  • Il ritrovamento di Paride (1988)
  • Little Ego: Beduini (1989)
  • La terza verità (1990)
  • Jonas Fink: L'infanzia (1991)
  • Vecchie volpi (1993)
  • La rotta dei sogni (1993)
  • Troppo onore (1993)
  • Restauri (1992)
  • Il maestro
  • Isola del mito (2000)
  • Jonas Fink: L'adolescenza (1998)
  • Max Fridman: No Pasaràn (1999)
  • Max Fridman: Rio de Sangre (2002)
  • Max Fridman: Sin ilusión (2008)
  • Jonas Fink. Una vita sospesa (2018)[3]


  • அவர் வாங்கியிருக்கும் விருதுகள் 

தேடல் தொடர்க தோழமை உள்ளங்களே.. 

வியாழன், 5 டிசம்பர், 2024

எலிபாபுவும் எண்பது திருடர்களும்_நரேஷ்

 

வணக்கம் அன்புள்ளங்களே.. இன்றைய எனது பிறந்த தினத்தில் நண்பர் நரேஷ் அவர்களுடன் இணைந்து இந்த சிறு பரிசினை உங்களிடம் ஒப்படைப்பதில் மகிழ்ச்சி.. 






















பிடிஎப் தரவிறக்க:

புதன், 4 டிசம்பர், 2024

வியாழன், 14 நவம்பர், 2024

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்.. 

என்றும் அன்புடன் உங்கள் நண்பன் ஜானி.

வியாழன், 7 நவம்பர், 2024

வகம் காமிக்ஸ் அப்டேட்ஸ்..

வணக்கம் தோழமை உள்ளங்களே..  2025 ஆம் வருடத்திற்கான (வகம் காமிக்ஸ்).சந்தா அறிவிப்பு இதோ.. திரு.கலீல் தொடர்கிறார்..



நண்பர்களுக்கு வணக்கம்

இதுவரை தாங்கள் கொடுத்து வந்த ஒத்துழைப்பிற்கும் ஆதரவுக்கும் எனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை வெளியிட்டுள்ள புத்தகங்கள் அனைத்துமே, தரமான புத்தகம் தரமான கதைகள் என பலராலும் பாராட்டப்பட்டுள்ளது மன நிறைவையும் மகிழ்ச்சியும் தந்துள்ளது. கடந்து வந்த வருடங்களில் பல போராட்டங்களையும் பல பிரச்சனைகளையும் சந்தித்து வந்தும் கூட, பல நல்ல கதைகளை வழங்கியதில் பெருமையும் சந்தோஷமும் அடைகிறோம். இத்தொழிலில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால், பண பலமும் படை பலமும் இருக்க வேண்டும் இரண்டு பலமும் இல்லாமலே இவ்வளவு மாதங்கள் கடந்து வந்தது மிகப் பெரிய சாதனையாகவே கருதுகிறோம். இனி வரப்போகும் காலங்களும் கடும் சவாலாகவே இருக்கும் என்று நினைக்கிறோம். இங்கு என்ன மாற்றங்களை கொண்டு வந்தாலும் அதை விழலுக்கு இறைத்த நீர் போலத்தான் இருக்கிறது. 2025 ஆம் வருடத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சந்தாவை தொடரவும் விருப்பமில்லை நிறுத்தவும் விருப்பமில்லை அதனால்தான் இந்த அறிவிப்பை அறிவிக்கிறோம். 2500/-  ரூபாய்  சந்தா கட்டி சந்தாவில்  இணைந்து கொள்ளலாம். ஆனால், என்ன கதாநாயகர்கள் எந்த மாதத்தில் என்ன புத்தகங்கள்  வெளிவரும் என்று உறுதியாக சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம். (நிக் ரைடர் +  ஆடம் ஒயில்டு + கிராபிக் நாவல்கள் + டயபாலிக் + சிஸ்கோ கிட் மற்றும் சில புதிய நாயகர்கள்  இவர்களின் கதைகளை  2025 இல் எதிர்பார்க்கலாம்) எங்கள் மீது நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் இத்திட்டத்தில்  இணைந்து பயணிக்கலாம். புத்தகங்கள் வெளிவந்த உடனே பணம் செலுத்தியவர்கள் அனைவருக்கும் புத்தகங்கள் (வழக்கம் போல்) அனுப்பி வைக்கப்படும்.  ஒருவேளை புத்தகங்களே வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டால், பணம் கொடுத்தவர்கள் அனைவருக்கும் பணம் திருப்பி கொடுக்கப்படும் (அப்படி ஒரு நிலை ஏற்படாது என்றே நம்புகிறோம்) சந்தா கட்ட நினைப்பவர்கள் ஒரே தவணையாக மட்டுமே கட்டவும். தமிழ்நாட்டிற்குள் - 2500

பிற மாநிலங்களுக்கு - 2700

Gpay and phone pe - 9894692768

வங்கி மூலமாக பணம் செலுத்த விரும்புவோர் கீழே உள்ள வங்கிகளின் மூலமாகவும் பணம் செலுத்தலாம்.


A.Kaleel 

Bank AC. No.20269024313 

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இலாஸ்பேட்டை கிளை 

IFSC Code No. SBIN0010507

Mob - 9894692768


A.Kaleel 

HDFC BANK

Current  Ac No. 50200093806672

IFSC CODE: HDFC0002611

Branch : Ambalathadayar st 

Puducherry - 605001

Mob - 9894692768


இந்த மாதம் வரவேண்டிய யானைகளின் சாம்ராஜ்யத்தில் சில பல காரணங்களால், அடுத்த மாதத்திற்கு தள்ளிப் போகிறது.  அந்த இடத்தில் கிளாசிக் ஆக்ஷன் ஸ்பெஷல் வருகிறது! டயபாலிக் புக் சைஸில் கொண்டு வருகிறோம். அநேகமாக பிரிட்டிஷ் கதைகளில் வெளிவரும் கடைசி கதைளாக இது இருக்கலாம். நிச்சயம் இந்த சைஸும் இதன் பார்மெட்டும் பிடிக்குமென்றே நம்புகிறேன். ஹியூக் மார்ஸ்டன் (வேட்டையரை வேட்டையாடு) மற்றும் வெகுமதி வேட்டையன் ஜான் கதைகள் இதில் வருகின்றன. கருப்பு வெள்ளையில் 154 பக்க ஆக்ஷன் மேளாவாக இருக்கும்.

நன்றி! தங்கள் ஆதரவை நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.. உங்கள் நண்பன் ஜானி.


வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...