எனது காமிக்ஸ் போராட்டம்

எனது காமிக்ஸ் போராட்டம்
வணக்கம் என் அருமை காமிக்ஸ் அன்பர்களே!
நலம் நலமறிய ஆவல்!!
மிக நீண்ட நாட்களுக்கு பின் ஒரு பதிவு!
நிறைய பதிய மனம் இருக்கிறது ஆனால் நேரம் மிக மிக தண்ணி காட்டுகிறது நண்பர்களே!
அப்படியும் கால தேவனின் கண்களில் மண்ணை தூவி விட்டு கொஞ்சம் பதிவிட உத்தேசித்துள்ளேன்.

முதலில் இன்றில் இருந்தே ஆரம்பிக்கிறேன்!
இன்று என் வாழ்க்கையில் ஒரு பொன் நாள்!

(நன்றி தமிழ் காமிக்ஸ் உலகம் )
மிக ஆவலுடன் எதிர் பார்த்த தலை வாங்கி குரங்கு காமிக்ஸ் என் வீட்டுக்கு வந்து விட்டதாக என் மனைவியின் செல்ல கோபம் கொண்ட போன் வந்து சேர்ந்ததில் இருந்தே அலுவலகத்தில் இருப்பு கொள்ளவில்லை. வீட்டுக்கு போனால் புத்தகத்தை எங்கோ ஒளித்து வைத்து கண்ணாமூச்சி ரே ரே ஆட வைத்து விட்டனர் என் மகனும் மனைவியும்.
நாங்கல்லாம் james bond  படித்து வாழ்கிறவர்கள் ஆயிற்றே ஆகவே என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என அலுத்துக்கொள்ளாமல் கண்டு பிடித்து விட்டு ஆஹா கண்டடைந்தேன் அரிய பொக்கிஷம் என மனதுக்குள் கூச்சல் இட்டுக்கொண்டு (பின்னே? எவன் வாங்கி கட்டி கொள்வதாம்?) ஒரே மூச்சில் ஹாட் லயன் பகுதியை முடித்து விட்டு ( அதுதானே நம்ம எல்லோரும் செய்வது?) பின் ஆற அமர தலை வாங்கியை ஆரம்பித்தேன். மிக மிக மிக அருமையான கதை. எனக்குள் ஏதோ ஒன்று உறுத்தியது கை வசம் இருக்கும் கழகு வேட்டையை எடுத்து இரண்டையும் பிரித்து பார்த்ததில் பட்டர் பேப்பரில் வந்துள்ள காமிக்ஸ் கிளசிக்க்ஸ் அவ்ளோ ஈர்க்க ஏனோ மறுக்கிறது மேலும் கட்டம் கட்டி வந்த கதை ஓரங்கள் எல்லாம் வளைந்து நெளிந்து வித்தியாசமாக பதிவாகியிருந்தன. மொழியில் சில இடங்களில் எழுத்து பிழைகள் கண்ணை பிராண்டின. இதில் உச்சகட்டமாக வைத்தியன் ஒருவனிடம் டெக்ஸ் வில்லர் பேசும்போது கழுகு குன்றை கழுதை குன்று என்று பதிவாகியுள்ளது அதை மட்டும் தான் குறையாக கொள்வேன்.


 இனி கதைக்கு வருவோமா?

அந்த இடத்துக்கு புதியவரான நம் நாயகன் அகில உலக சூப்பர் ஸ்டார் டெக்ஸ் வில்லர் தான் கேட்கும் மர்ம முரசொலியின் மர்மத்தை கண்டறிய புறப்படுகிறார். அவர் சந்திக்கும் அதனை மனிதர்களிலும் ஒரு அன்பான இருதயம் கொண்ட பெண் ஒருத்தியின் அறிவுரைகளிலும் உடனே அந்த வில்லங்கமான ஊரை விட்டு வெளியேறி இருந்தால் எல்லாம் சுகமே ஆனால் சில பல தலைகள் மேலும் உருண்டுகொண்டே இருந்திருக்கும். ஆனால் கஷ்ட காலம் நம் நாயகரின் காதுகளில் அதன் முரசொலி விழுந்து தொலைக்க வேட்டை ஆரம்பம்....

இது   மிக சிறந்த டெக்ஸ் வில்லர் கதைகளில் ஒன்று என்பது காமிக்ஸ் கற்கும் குழந்தையும் தெரிந்து கொண்டுவிடும். ஸ்பிலிட் பெர்சொனலிட்டி உள்ள நபரின் போக்கு எப்படியெல்லாம் மாற்றம் அடையும் என்பது குறித்து நமக்கு தெரிந்ததை திகிலுடன் ரசிக்கும்படியான கதை அமைப்பினை கொண்ட கதை.

இதில் வரும் கழுகு குன்று எங்கள் பக்கத்துக்கு ஊரில் (விளந்தைக்கு அருகில்)
சின்ன வயதில் இந்த புத்தகத்தினை படித்து பயந்து பயந்து பஸ்ஸில் இருந்து மிரண்டு கொண்டே கடந்த காலம் நினைவில் இருக்கிறது ) உள்ள ஒரு அமைப்பை போலவே இருக்கிறது.

 பிரமிப்பின் உச்சகட்டம் 

அந்த குரங்கை தேடி நம் நாயகன் ஆற்றில் யாரையும் நம்பியிராமல் தனது தேடலுக்கு விடை தேடி உள்ளே இறங்குவதுதான் என்பேன். மேலும் அந்த செவ்விந்திய பெண் பேயி போன்ற தோற்றம் கதையை படிக்கும் அனைவருக்கும் ஏற்படும்.
வில்லன் என்னிக்குமே தோற்க வில்லர் என்னிக்குமே நீதியை நிலை நாட்ட எல்லாம் சுகமே!
எதற்கும் உடனே வாங்கி விடுங்கள்
இல்லை தலை வாங்கியை ஏவி விட்டு விடுவேன். ஜாக்கிரதை. நம் நண்பர் திரு கிங் விஸ்வா, பயங்கரவாதி டாக்டர் 7, lucky லிமத், அய்யம் பாலயத்தார், கார்த்திக், சௌந்தர், கருந்தேள் கண்ணாயிரம் ஆகிய என் முன்னோருக்கெல்லாம் ஒரு சலாம்.
மற்றும் காமிக்ஸ் உலகில் புத்துணர்ச்சியை கொண்டு வரும் திரு விஜயன் அவர்களது குழுவினர்கள் அனைவருக்கும் எனது இந்த நீண்ட
(ஆமாங்க நிஜமாவே இப்பதான் ஒரு நீண்ட முதல் பதிவினை பதிகிறேன் இதில் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டிருந்தால் தலை வாங்கி குரங்கைதான் துரத்தி கொண்டு செல்ல வேண்டும் நண்பர்களே )  பதிவினை சமர்ப்பணம் செய்கிறேன்.. நல்லா இருங்க ஜாலியா இருங்க மகிழ்சிய இருங்க அவ்ளோதான் பார்க்கலாம் காலமும் நேரமும் கிடைத்தால் வாழ்க வளமுடன் நன்றிகள் பல!!

Comments

King Viswa said…
அண்ணே, பின்னிட்டீங்க.

முதல் பதிவே தலைவாங்கி பற்றி என்றால் சொல்லவா வேண்டும். சூப்பர்.

சென்ற வாரமே இந்த புத்தகத்தை பெரும் பேரினைப்பெற்றோம். ஆனால் ஒருவாரமாக மகா பயங்கர பிசி. (அதுல பாதி வேலை நம்ம காமிக்ஸ் குறித்துதான்).

இப்போதைக்கு பதிவு சற்றே சிரமம்தான். இருந்தாலும் நாளைக்கு முயற்சிக்கிறேன்.

உங்க மெயில் ஐடி அனுப்புங்க. இந்த புத்தகத்தோட மத்த ஸ்கான் எல்லாம் அனுப்புறேன்.
Karthik said…
முதல் முழு நீள பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா! உங்கள் பதிவை படிக்கும் பொது முழுக்கதையையும் வெளியிட்டு விடுவீர்களோ என்று தயங்கித்தான் படித்தேன்! ஏனென்றால் நான் தலை வாங்கி குரங்கை இது வரை படித்த ஞாபகம் இல்லை! அதை பற்றிய எந்த அறிதலும் இல்லாமல் புதியதாய் படித்தால் நன்றாய் இருக்குமே என்ற யோசனைதான் காரணம்!

>>வில்லன் என்னிக்குமே தோற்க வில்லர் என்னிக்குமே நீதியை நிலை நாட்ட...
அட, ரைமிங்கா பின்னுறீங்க :)

Btw, என் வலை பதிவோட சுட்டியை உங்க பதிவுல போட்ட பெருந்தன்மைக்கு ஒரு ராயல் சல்யூட்! நன்றி நண்பா!
Senthazal Ravi said…
ஏற்கனவே வந்த காமிக்ஸோட மீஸ் பதிப்பா ? அட்டை ஏன் தீபாவளி சிறப்பிதழ்னு இருக்கு ?
King Viswa said…
ரவியண்ணே, காமிக்ஸ் கிளாசிக்ஸ் என்றாலே அது மீள் பதிப்பு தானே?

அண்ணன் புதிய புத்தகத்தின் அட்டையை போடாமல் என்னுடைய பழைய ஸ்கான் ஒன்றையே எடுத்து இங்கே வெளியிட்டுள்ளார். அதான்.


உங்க மெயில் ஐடிக்கு புதிய அட்டையை அனுப்பியுள்ளேன். பாருங்கள்.
காவல் துறையில் ஒரு காமிக்ஸ் சிங்கம். சரிதானே ஜானி அண்ணே?

தலை வாங்கி குரங்கு - ஒரு ஆசையான பார்வை
john simon said…
நன்றி நண்பா
john simon said…
en mail id jsc.johny@gmail.com
viswa vanga ungalai varaverkiren!
kalaykka asai padum anbu nanbargalumthan
john simon said…
வெல்கம் ரவி என் அருமை தம்பி உன்னால் பல காமிக்ஸ் வேட்டைகளை ஆடிய அனுபவம் நேற்று போல் என் மனதில் இருக்கிறது நீ இன்று தலை நகரில் இருந்தாலும் என் எண்ணங்கள் உன்னையே சுற்றி வரும் என் காமிக்ஸ் உலக நினைவுகளில் மணம் பூண்டிக்கு நிச்சயம் இடம் உண்டு உனக்கு என் வாழ்த்துக்கள்!
ஜானி சார்,

கை கொடுங்கள் . தூள் கிளப்பி விட்டீர்கள். அசத்தல் பதிவு.

உங்கள் பணியை பற்றி விஸ்வா சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆகையால் அயராத பணிகளுக்கிடையே இப்படி ஒரு அசத்தல் பதிவு இட்டதற்கு ஒரு ராயல் சல்யூட்.

தலை வாங்கி அற்புதம். உங்கள் பதிவு அதி அற்புதம்.

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!