வெள்ளி, 1 ஜூன், 2012

அஞ்சா வீரன் லார்கோ விஞ்ச்

எனது அன்பிற்கும் பாசத்துக்கும் உரிய ரசிக படைகளே! உங்கள் காமிக்ஸ் வானில் ஜொலிக்கும் எக்கச்சக்க நட்சத்திரங்களில் ஒரு மிக அதீதமான ஒளி விட்டு பிரகாசிக்க எல்லா தகுதிகளும் நிரம்பிய நாயகன் லார்கோ விஞ்ச் நம்ம முத்து காமிக்ஸ் பதிப்பகத்தாரால் தமிழ் காமிக்ஸில் களமிறங்கி உள்ளார்! அவருக்கு பெரிய வரவேற்பு நல்கிடுவோமே!


முழு வண்ணத்தில் முத்து காமிக்ஸ் வெளியிட்டுள்ள இந்த காமிக்ஸ் புத்தகம் முழுக்க முழுக்க அதிரடி நிறைந்த புத்தகம்தான் ஆனால் அமைதியின் சின்னமாக நாயகன் அமர்ந்திருப்பது நம்மை எளிதாக ஏமாற்றி விட கூடும். ஆனால் அவசரப்பட வேண்டாம். நண்பர் லார்கோ கொஞ்சம் ஒய்வு எடுப்பது என்பதுதான் மிக அபூர்வமான காட்சி என்பதால்தான் இங்கே அதனை பிரசுரித்து இருக்கிறார்கள். மிக மிக நெருக்கடியான வாழ்வு நம் நண்பருடையது. அவர் வாழ்க்கை அவர் கையில் இல்லை. அவரது வாழ்க்கை வேறு நல்ல உள்ளம் கொண்ட நபர்களால் வடிவமைக்கப்பட்டு ஆனால் மிகுந்த நெருக்கடியில் வீழ்த்தப் பட்ட ஒன்று. சோகம் தாக்காத வாழ்க்கை வாழ்வது போல தோன்றும் ஆனால் அவரது மறுபக்கம் அவ்வளவு கடினமான ஒன்று. அதில் அவர் பட்ட அடிகளே அவரை வடிவமைப்பதுதான் அற்புதம். மாபெரும் சொத்து குவியலுக்கு சொந்தக்காரர் ஒரு அட்டகாசமான பேர்வழி என்பது நமது கிங் பிஷர் உரிமையாளர் விஜய் மல்லையாவுக்கு பொருத்தமான அடைமொழிதான். ஆனால் நம்ம நண்பர் வெரி யூத்து!
இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்து இருக்கும் இவன் வெறும் கையில் முழம் போடுறவன் ஆச்சே என்று அதனால் என் கையில் லார்கோ,

ம்ம்க்ம்ம் நீங்கள் நினைப்பது போல இது தற்பெருமைதான் என்ன பண்றது நண்பரே! விளம்பரம்தான் வாழ்க்கையின் அடிப்படை என்று ஆகி விட்டது. நகர வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா!
லார்கோவின் படைப்பாளர்களை மரியாதை செய்யும் விதமாக அவர்களது பெயர் பதித்த பக்கம்.
முதல் முதல் நம் நண்பர் அறிமுகமாகும் காட்சியை இங்கே கொஞ்சம் வேறு மாதிரி வெளியிட நினைத்து இப்படி உங்கள் கண்களுக்கு விருந்தாக்கி உள்ளேன்!


இந்த வட்ட மேசை கெட்ட மனிதர்கள் செய்யும் சேட்டைகளை தனது அதிரடிகளால் முறியடித்து வெற்றி வாகை சூடுகிறார் நம் நண்பர் லார்கோ!


சின்ன வயதில் அநாதரவாய் நின்ற தருணங்களில் கிடைத்த அன்பு மழையை திடீரென பிரியும் நேரம் வரும்போது வார்த்தைகள் பயனில்லையே! அந்த மாதிரி ஒரு உணர்ச்சி மிக்க தருணம்!
இவர்தான் ஜெட் வீரர் லோகன். விஜயன் சார் அடிக்கடி இவரை பற்றி சொல்லி இவர் மீது ஒரு தனி ஆர்வமே வந்து விட்டது. இவர் ரத்த காட்டேரிகளின் கிரகத்தில் செய்யும் அதிரடிகள் மிக நன்றாக வந்து இருக்கின்றன.


இதுதான் திகில் கதைகளின் மிக அருமையாக வந்துள்ள கதை. ஒரு பாம்பு பழி வாங்குது! நீயா? கதை போல ஒரு வெள்ளை கார பாம்பின் கதை! நம்மாளுங்க காமிக்ஸ் கதையை சுட்டு இருக்க வாய்ப்பு இருந்திருக்குமா என தெரியவில்லை. 
இந்த பேயி குளத்துக்குள்ள இருந்துகிட்டு கையாலேயே பிடிச்சு அமுக்கி கொலை பண்ணும். படு பயங்கர ஓவியங்களைத் தாங்கிய கதை!

லார்கோவின் அடுத்து வரும் அதிரடியயும் இந்த கதையிலே வெளியிட்ட நம் ஆசிரியருக்கு மிக மிக நன்றிகள் சொல்லிக்கறோம்!

அதிரடிக்கு மிக சிறந்த இடமாக தீவு தேர்ந்தெடுக்கப்பட்டு அனைத்தின் மிக தெளிவான திட்டமிடலும் நண்பர் லார்கோவாலேயே வடிவமைக்க பட்டிருப்பது கடைசியில்தான் தெரிய வருகிறது! 

அடுத்து எப்போ பார்க்க போறோம் நண்பா? ஆவலுடன் உன் இனிய புது தோழன் சைமன் (ஆமாங்க என் பெயர் ஜான் சைமன்) 
பிரிவோம் மீண்டும் சந்திக்கும் வரை! 
வாழ்க வளமுடன்!




14 கருத்துகள்:

  1. //இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்து இருக்கும் இவன் வெறும் கையில் முழம் போடுறவன் ஆச்சே என்று அதனால் என் கையில் லார்கோ//

    ஆமா அது உங்களுடைய கைதான் ....உங்களுடைய கைதான்......கண்டிப்பா உங்களுடைய கைதான்.... நம்பிட்டேன்....

    தொடர்ந்து கலக்குங்கள் .........

    பதிலளிநீக்கு
  2. ஸ்டாலின் சார் நம்ம கட்சி! அதுக்காக எனது பக்கமே பந்தை தள்ளுவார்! ஹி ஹி ஹி! நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  3. நன்றி சாக்ரடீஸ் அவர்களே! நேரம்தான் நழுவி ஓடி போய் விடுகிறது! கிடைத்தால் கைமாதான்! விருந்து படைக்க தக்க சமயத்திற்காக காத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  4. முதல் பந்தியில் உட்கார்ந்தாயிற்று ,அற்புதமான ஸ்வீட்டை வைத்து விட்டீர்கள் ,அடுத்து உங்கள் ஐ (6 -1 ) சுவை மிக்க உணவிற்காக ஐயமின்றி காத்திருக்கிறோம்

    ................................

    பதிலளிநீக்கு
  5. இரும்பு கையருக்கு என் நல்வரவு!
    கண்டிப்பா கலக்குவோம் நண்பரே! அப்பப்போ தங்கள் வரவை என்றும் விரும்பி மகிழும்_அன்பு நண்பன் ஜானி

    பதிலளிநீக்கு
  6. // முதல் முதல் நம் நண்பர் அறிமுகமாகும் காட்சியை இங்கே கொஞ்சம் வேறு மாதிரி வெளியிட நினைத்து இப்படி உங்கள் கண்களுக்கு விருந்தாக்கி உள்ளேன்! //

    நல்ல முயற்சி தொடருங்கள் உங்கள் சேவைகளை :))
    .

    பதிலளிநீக்கு
  7. நண்பரே

    புதிய பதிவுகள் எதனையும் காணோமே ?

    சீக்கிரமாக சூப்பர் டூப்பர் பதிவு ஒன்றை போட்டு தாக்கவும்

    பதிலளிநீக்கு
  8. நண்பா வந்து கொண்டே இருக்கிறேன்! பதிவு போட்டோ மற்றும் ஸ்கான் இணைப்பது அதிகம் நேரம் பிடிக்கும் வேலையாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. நன்றிகள் நண்பர் திரு விஸ்கி சுச்கி அவர்களே நல்வரவு!

    பதிலளிநீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...