Friday, 15 March 2013

வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு!
*வெளிநாடுகளுக்கு போகும்போது பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்களை மிகவும் பத்திரமாக வைத்துகொள்வது மிக மிக அவசியமான எச்சரிக்கை நடவடிக்கையாகும்! எல்லாத்தையும் ஒரு தனி கவர்ல வெச்சிகிடுங்க! அவசரத்துக்கு எடுத்து நாம என்ன படிச்சிருக்கோம்னு பார்த்துக்கிடலாம் இல்லையா? ஹி! ஹி! ஆவணங்களை பாதுகாப்பா வெச்சிகிடுங்கப்பா.  

*உங்கள் வசமுள்ள பணத்தினை அயல் நாடுகளின் கரன்சியாக மாற்றும்போது அங்கீகரிக்கப் பட்ட வங்கி மற்றும் MONEY CHANGERS மூலம் மட்டுமே மாற்ற வேண்டும். பணத்தினை சம்பந்தப்பட்ட நாட்டின் கரன்ஸியாக மாற்றும்போது அதற்கான தக்க ரசீதை மிகவும் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்! நாம சரியா ஆவணங்களை வைத்து இருந்தால் அங்குள்ள அதிகாரிகள் தேவையில்லாம நோண்ட மாட்டாங்க! எதை வாங்கினாலும் அதை கஸ்டம்ஸ் வழியாக கொண்டு போகணும் என்பது மனதில் ஓடிக்கிட்டு இருக்கணும்ங்க! 

*செல்லும் நாட்டின் இந்திய தூதரக தொலைபேசி எண் மற்றும் முகவரியை கையில் வைத்துக்கொள்வது தேவையான நேரத்தில் உதவும்.எங்கியாவது நல்லா மாட்டிகிட்டோம்னா அந்த நாட்டில் இருக்கும் நம்ம தூதரகம்தானுங்க உதவக்கூடிய ஆபத்பாந்தவன்! 

*குறைந்தது ஆறு மாத காலத்துக்கு செல்ல கூடிய வகையில்  பாஸ்போர்ட் தேதி இருப்பது நல்லது. காலாவதியான பாஸ்போர்ட் சிறைக்குள் தள்ளி விடும். எச்சரிக்கை! 


*அந்தந்த நாட்டின் முக்கியமான கட்டுப்பாடுகளை முன்பே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்! பொது இடங்களில் புகை பிடிப்பது, எச்சில் துப்புவது போன்றவற்றில் கவனம் தேவை. சில நாடுகளில் அதற்கென சில நெறி முறைகள், கட்டுப்பாடுகளை வைத்து இருப்பார்கள். அவற்றை கண்டிப்பாகக் கடைப் பிடிக்க வேண்டும்! 

          உதாரணத்திற்கு நம்ம பஸ் சாயர் கதை "சிறை மீட்டிய சித்திரம் " முத்து காமிக்ஸ் வெளியீடு எண் 44 ஐயே எடுத்துக் கொள்வோமே! சின்னஞ்சிறு குழந்தைகள் விளையாடுவது போன்ற மன நிலையில் மகிழ்ச்சியாக ஊரை சுற்றி பார்க்க ஒரு ஜோடி சின்னஞ்சிறு நாட்டில் சுற்றுலா மேற்கொள்கிறது. அந்த நாட்டினைப் பற்றி அவ்வளவாய் அறியாமல் போனதன் விளைவு அந்த நாட்டின் தேசத் தந்தை சிலை குதிரையின் மேல் கம்பீரமாக அமர்ந்திருக்க சுற்றுலா சென்றவிடத்து சிலையின் பின்னால் ஏறி அமர்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயற்சி மேற்கொள்கிறது அந்த ஜோடி. காவலர்கள் பெண்ணை சிறையில் அடைக்கிறார்கள். அந்த இளைஞன் தன் தவறால் தனது காதலி சிறைப்பட்டு விட்டதால் அவளை மீட்டே தீர வேண்டும் என்ற இலட்சியத்தோடு சிறைக்கு அருகே தவம் கிடக்கிறான். அவனுக்கு ஆதரவாக சர்க்கஸ் குடும்பம் ஒன்று இருக்க அவனது பணக்கார அப்பா நம்ம ஹீரோ பஸ் சாயரை அனுப்பி வைக்கிறார். அவரது மூளையில் உதித்த உத்திதான் கார்டூன் மூலம் கதை சொல்லும் பாணியில் தப்பிக்க அந்த பெண்ணின் பங்கிலிருந்து செயல்பட வேண்டிய முறையை செய்தித்தாள் போலவே வடிவமைத்து சிறைக்குள் அனுப்பி வைப்பது. அவ்வாறே அந்த பெண் நடந்து கொண்டு சிறையில் இருந்து மீட்கப்படுகிறாள். இந்த கதையின் நீதி என்னன்னா? மேல விதிமுறைகளை நல்லா படிங்க. மனசுல பதிங்க கல்விதாங்க ஒருத்தருக்கு உண்மையான வழிகாட்டி! அந்தந்த நாட்டப் பத்தி தெரியாம போய் மாட்டிக் கிட்டு புலம்பாதீங்க. 


குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் கதையின் தொடர்ச்சியான வசனங்களுடன் ஆரம்பிக்கும் கதையில் சின்னஞ்சிறு ஜோடியொன்று உல்லாசப் பயணமாக மால்யா என்கிற நாட்டுக்கு செல்கிறது!
*வெளி நாடு செல்லும் இடத்தில் தீம் பார்க்குகளின் சாகச விளையாட்டுகளை இதய நோயாளிகள், தீவிர நோயாளிகள் தவிர்த்து விட வேண்டும்! மருந்து, மாத்திரை எல்லாம் எடுத்துக்குங்க. அங்கே சில மருந்துங்க தடை செய்யப் பட்டிருக்கும். மருந்தை அங்கே வாங்கிக்கலாம் என்று அலட்சியமா இருக்காதீங்க! அவதிப்படாதீங்க!
*வெளிநாடுகளில் இருந்து திரும்பி வரும்போது, அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டும்தான் பொருட்களை வாங்கி வர வேண்டும்! இதனால் சுங்கப் பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ள முடியும்! பணத்திற்குக் கட்டுப்பாடு உண்டுங்க! மொத்தமா கொண்டு வரலாம் என்று அங்கேயே சேர்த்து வைத்துக் கொண்டு இருக்காதீங்க! அப்பா, அம்மா, வீட்ல எல்லாருக்கும் கொஞ்சம் கொஞ்சமா அப்பப்போ அனுப்பி வைங்க! பொருளெல்லாம் இங்கேயே வாங்கிடலாம். ஹாயா போயி ஹாயா வாங்க! அன்னிய செலாவணியை கொஞ்சமா அங்கே செலவு பண்ணுங்க. நிறைய இந்தியாவில் நிலமா, பொருளா, ஷேர் மார்கெட்ல இப்படி உங்க முதலீட்டை திருப்பி விடுங்க. 

*படகுப் பயணம் மற்றும் நீர்நிலை விளையாட்டுகளின்போது தண்ணீரில் மிதக்கும் லைப் ஜாக்கெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை தவறாமல் அணிந்து கொள்ள வேண்டும்! அங்கங்க பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம் கொடுப்பாங்க, ஆனா வாடகை உண்டு நம்ம ஆளுங்க என்ன பண்ணுவோம்? அப்பத்தான் விலைவாசி கண்ணுக்கு தென்படும், மெலிசான பர்ஸ் மனசுல மையம் கொள்ளும்! அச்சோ இதுக்கு செலவிடலாமா என நிதியமைச்சர்  மாதிரி மண்டைல ஓடும்! பாதுகாப்பெல்லாம் பார்த்துக்கலாம் அப்படின்னு கோட்டை விட்டுடுவோம்! அதாங்க செய்யவே கூடாத தப்பு! உக்காந்து யோசிச்சாதான் தெரியும் நமக்கு நீச்சலே தெரியாது என்று! உயிரை விட பணம் பெரிதில்லை! அதனால இந்த பாயிண்டு ரொம்ப ரொம்ப முக்கியமானது!

*அந்தந்த நாட்டின் கலாச்சாரம், பழக்க வழக்கம் குறித்து தாழ்வான கருத்துக்களை பொது இடங்களில் வெளிப்படுத்தக் கூடாது. இந்தியாவின் கலாச்சாரமாக அயலவர் கிண்டல் செய்ய எதுவும் இல்லையென நாம நினைக்கிறோம் இல்லையா? அதே போல வர வெளிநாட்டவர்கள் நினைக்கணும் என்று நினைக்கலாமா? யுவான் சுவாங், இபின் பட்டுடா, மார்கோ போலோ போன்ற அயல் நாட்டவர்கள்  நம்மை பற்றிய கருத்துக்களை சுமந்து பெருமை சேர்த்தது போல நல்லதை மட்டும் பதிவு செய்ங்க. வாழ்வில் பிரச்சினை வராதுங்க!  
*வெளி நாட்டுக்குச் சுற்றுலா செல்ல பாஸ்போர்ட் அவசியம். அதற்கு முதலில் விண்ணப்பம் செய்து, பாஸ்போர்ட் கிடைத்த பிறகே மற்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஒரு வேளை பாஸ்போர்ட் கிடைக்க தாமதம் அல்லது சிக்கல் ஏற்பட்டால் நீங்கள் செய்த ஏற்பாடுகளை ரத்து செய்ய நேரும் என்பதால் பணம் விரயம் ஆகாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை நல்லதுதானே?

*எல்லாவற்றுக்கும் முன்னதாக நீங்கள் செல்லவிருக்கும் நாட்டின் அரசியல், மத, சமூக நிலைமைகளை குறித்து தெளிவாக படித்தறிந்து கொண்டு செல்வது நன்மையாக அமையும்! அங்கே உள்ளவங்க மன நிலை தெரியாம போனா வடிவேலு-போக்கிரில பேப்பர்ல வடையை அமுக்கி தம்பி  டீ இன்னும் வரலன்னு கடுப்பா உக்காந்து இருப்பாரே! ஆனா அவர் செய்த தப்பு என்னன்னா, அடுத்தவன் என்ன மன நிலைல இருக்கிறான் என்று தெரியாமல் அவன் கையில் இருக்கும் பேப்பரை பறித்துக்கொண்டு சென்றதுதான். நம்ம மக்கள் வண்டியை திருப்பும்போது இதுமாதிரிதான் அலட்சியமா யாரையும் கண்டுக்காம திருப்புவாங்க. யாராவது தெரியாம இடிச்சிட்டா போதுமே! அங்கேயே பிராண்டி எடுத்துடுவாங்க! அதனால உஷார் மக்களே! 

*எல்லா நாட்டவரும் பூமியின் குடிகளே என்பதால் எங்கே சென்றாலும் அன்பை பரிமாறி அமைதியை நாடி சந்தோசமாக  இருங்கள்! வாழ்க வளமுடன்!
 தகவலுக்கு நன்றி! தினத்தந்தி - இளைஞர் மலர் நிறுவனத்திற்கே!   தங்கள் பயணம் இனிமையாக அமைய எங்கள் நல்வாழ்த்துக்கள்! BON VOYAGE!!

8 comments:

 1. தலைவரே !!!

  அப்போ நீங்க வெளிநாடு போக தயாராகிட்டீங்க போலிருக்கே ?

  நீங்க போற ஊரோட அட்ரஸ் கொஞ்சம் சொல்லீட்டு போங்க, ஏப்ரல் 1 தலைவர் டைகர் ஸ்பெஷல் ரிலீஸ் ஆகுது !!! அப்படியே உங்களுக்கு ஒரு புக் அந்த அட்ரஸ்க்கு அனுப்பிட சொல்லிடலாம்.

  நல்ல கருத்துக்கள், அதையும் நம்ம காமிக்ஸ் உடன் கலந்து சொன்ன விதம் அட்டகாசம் போங்க ...

  ஆமா வழக்கமா இருக்கிற ஜான் (அல்லது) குட்டி ஜான் போட்டோ மிஸ் ஆகுதே ?
  ReplyDelete
 2. வணக்கம் தலைவரே! ஹி ஹி நீங்க போனா உதவியாக இருக்கும்னு நெனச்சேன்! நீங்க என்னடான்னா இப்படி கவுத்திட்டிங்களே! இதுலே ரெண்டு, மூணு ஸ்கேன்களை தூக்குன பின்னாடிதான் போஸ்ட் ஆகுது! அப்புறம் நம்ம அராத்து எதுக்குன்னுதான் விட்டு விட்டேன்! வெளி நாடு போற நண்பர்களுக்கு அட்வைஸ் பண்ணிட்டு காமிக்ஸ் கேக்கலாம் ஹி ஹி ஹி! வரும்போது அட்டகாசமான காமிக்ஸோட வருவாய்ங்க அப்படியே ஒரே அமுக்கு! முத்து விசிறி அவர்கள் உஷாரய்யா உஷாரு!

  ReplyDelete
 3. சார்லி கதைகளில் மிக அற்புதமான கதை இது மிக தெளிவான ஸ்கேன் ( வாங்கிவிட்டீர்களா ?) . வர வர உங்களின் நகைச்சுவை உணர்வு உங்கள் எழுத்துக்களில் அதிகமாக மிளிர்கிறது. சூப்பர்...

  ReplyDelete
 4. அட்வைசையும் காமிக்சையும் சேர்த்து எழுதி இருக்கீங்க காவலரே. இந்த ரூட்டு நல்ல இருக்கு. கலக்குங்க

  ReplyDelete
 5. தல இந்த கதையை ரொம்ப நாளா படிக்கனும்னு நினைச்சுட்டு இருக்கேன். கொஞ்சம் எல்லா ஸ்கேன்களையும் அனுப்பி வச்சிங்கனா நல்லாருக்கும்

  ReplyDelete
 6. வணக்கம் சைமன் ஜி!

  என்னதான் தினத்தந்தி இளைஞர் மலர் கதைன்னாலும் நீங்க சொல்லிக் கேட்குறது தனி சுகம்தான்!

  நண்பர் ராஜ் முத்துக்குமார் ஆச்சரியப்பட்ட மாதிரியே நானும் படுகிறேன்!!!!

  ReplyDelete
 7. அன்பு நண்பர்களுக்கு வணக்கங்கள்! ஸ்டாலின் ஜி அவர்களது நகைச்சுவை நாமையும் பிடிச்சிகிச்சி போலிருக்கு! வேப்பிலை அடிக்கணும் சாமீய்!
  ராஜ் அவர்களே காப்பிதான் ஜி இது! ஹி ஹி
  லக்கி லிமட் அவர்களே! ஒரு பத்து பக்கம் ஸ்கான் பண்ணது அதுல ரெண்டு பக்கம் இங்கே பதிய முடியலை! கூடிய விரைவில் தங்களை நேரில் சந்தித்து கொள்ளையிடும் எண்ணத்தில் எங்க கும்பல் அலைஞ்சிகிட்டு இருக்கு! என்னைக்கு சந்திப்போம்னு காத்திட்டு இருக்கேன்! உஷாரு! மீதி கதைய சீக்கிரமா கொடுக்கிறேன்! விஜய் தலைவா! படம் எப்படி வந்திருக்கிறது ???? எங்களுக்கு சீக்கிரம் ட்ரீட் கொடுங்க ஹி ஹி!

  ReplyDelete

RC 312- உயிர் காக்கும் முத்திரை..முகமூடி வீரர் மாயாவி..

இந்த சித்திரக்கதையை தரவிறக்கம் செய்து வாசிக்க... உயிர் காக்கும் முத்திரை இந்த சித்திரக்கதையை கொண்டுவருவதில் ஆர்வமாக உத...