பொன் தேவதையின் ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்!

         அன்பு நாட்டமுடையோரே ! அன்பே அனைவருக்கும் இறைவன் கொடுத்த அள்ளக் குறையாத அமுதமாகும்! உங்கள் அனைவருக்கும் எனது ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்! இனியவர் இயேசுவின் சமாதானம் உங்களை நிரப்புவதாக! வாழ்வு மலரட்டும்! நிம்மதி நிலைக்கட்டும்! 


 ராணி காமிக்ஸின் அற்புத பொக்கிஷங்களுக்கு ஒரு காலத்தில் அவ்வளவு பெருமிதம் உண்டு! அற்புதமான அந்த தருணங்கள் வாழ்வில் மறக்கவியலாத நிகழ்வுகள்! ராணி மீண்டும் தனது பொற்கால காமிக்ஸ் வெளியீட்டு முயற்சிகளுக்குத் திரும்ப வேண்டும்! 

"பொன் தேவதை" ராணி காமிக்ஸில் வெளியிடப்பட்ட அற்புதமான, அதிரடிகள் நிரம்பிய சூப்பர் கதை. வெளியீடு எண் முப்பத்தைந்து. வெளியான வருடம் 1985. December 1-14. எனது எட்டு வயது நினைவுகளில் இன்றும் அலையடிக்கும் அழகான கதை இது!   
அட்டையில் அதிரடி!

மன்னர் பீமா சிறப்பான காட்டரசன்!


அறிமுகப் படலம்!


தமிழ் பழமொழியை புகுத்திய முறை காணீர்! 


அவரு பெயரு டிரான்ஸ்போர்ட்டர் ஹி ஹி ஆனா கையாள்வது ஜேம்ஸை ஆச்சே! விவகாரமானவராதான் இருக்கணும்!

அடப்பாவமே அதுக்குள்ளே போட்டுத் தள்ளி விட்டனரே! ரகசியமாய் ஒரு ரகசியம் ஒன்று என்கிட்டே இருக்கு அதுக்கு விலை கொடுங்க. அதுக்கு முன்னாடி ஜாமீன் பிணையாக ஜேம்ஸ்பாண்ட் என்கிட்ட அனுப்பப் படவேண்டும் என்று நம்ம ஸ்பெக்ட்ரா மேடம் கோருகிறார். அவரை அனுப்ப இங்கிலாந்து உளவுத்துறை தயாராகிறது! அப்படி போகும் அவரையும், ஸ்பெக்ட்ரா நபரையும் ஒரு கும்பல் போட்டுத் தள்ளிடுது! அவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகும் ஸ்பெக்ட்ரா நபர் இறக்கும் தருவாயில் ஒரு கோட்டை இழுத்து விட்டு சாகிறார். அவர் உச்சரிக்கும் வாசகம் பர். தப்பிக்கும் ஜேம்ஸ் அந்த கோட்டில் ரோடு போடறதுதாங்க கதையே! கோட்டோட ஒரு நுனியா கிடைக்கற குறி சொல்லும் பெண்மணியும் அந்த அடையாளம் தெரியா கும்பலால் பரலோகம் அனுப்பப்பட,தொடர்ந்து இருமுறை தப்பிக்கும் ஜேம்ஸ் புதிருக்கான விடையை ஒரு சிகரெட் லைட்டர் மூலமாக கண்டு பிடித்து அரசை எச்சரிக்கிறார். ஆனால் காலம் கடந்து விடுவதாலும், நாட்டின் முன்னேற்றம் இந்த நிகழ்வுகளால் பாதிக்கப் படக்கூடும் என்கிற காரணத்தால் சொன்ன தேதியில் விமானம் பறக்கும் அதில் ஜேம்ஸ் பயணம் செய்து பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்கிற நிலையை அரசாங்கம் எடுக்கிறது!
பர்னபாஸ் என்கிற நபர் ஸ்பெக்ட்ரா அமைப்பில் இருந்து பிரிந்து வந்தவர் தற்போது பொன் தேவதை தயாரிப்பு பணியில் முக்கியமான நபராக வலம் வருகிறார் என்கிற தகவல் உளவு அமைப்பை எட்டுகிறது. அதற்குள் பொன் தேவதை தன் பயணத்தை இங்கிலாந்தின் முக்கியஸ்தர்கள் சகிதம் துவக்கி விடுகிறாள்! இல்லாங்காட்டி விமான நிலையத்திலேயே பர்னபாசை அமுக்கி இருப்பாங்க! கதை முடிஞ்சிருக்கும்! 
நம்ம ஜேம்ஸ் - ரிப்போர்ட்டர் மில்டன் என்கிற பெயரில் உலவிக்கொண்டு பர்னபாசை பேட்டி காண்கிறார். வெல்வெட் என்கிற விமான பணிப்பெண் உதவ வர அவரிடம் முறையற்ற விதத்தில் நடக்க முயலும் பர்னபாசை ஜேம்ஸ் கண்டிக்கிறார். 
மதிய உணவு அருந்தும் அனைத்து பிரயாணிகளும் மயங்கி விழ பர்னபாஸ் ஜேம்ஸை சோதனை செய்ய முயலும்போது நம்ம ஹீரோ தனது மயக்க வினாடிகளிலும் அதிரடி செய்ய முயன்று தலையில் அடியாள் ரீகனால் அடிபட்டு மயங்குகிறார்.  

              "பொன் தேவதை " விமானத்தின் விசேஷ அம்சங்கள் என்னவெனில் அது அணு சக்தியால் இயங்க வல்லது. நேரடியாக ஒரு இடத்தில் தரையிறக்கவியலும். பொன் வண்ணம் தீட்டப் பட்டு ஜொலிக்கும். அது இறங்க ஓடு தளம் தேவையில்லை. எனவே ஒரு மொட்டை மாடியில் கூட தரை இறங்க செய்யவியலும்.
            கடத்தப்பட்ட விமானம் தென் அட்லாண்டிக் கடலில் உள்ள ஒரு தீவில் இரு பெரிய பாறைகளுக்கு இடையில் தரையிறக்கப்படுகிறது. அதன் மீது தார் பாய் போர்த்தப்படுகிறது.

இங்கிலாந்து அரசாங்கத்திடம் முன்னூற்று பத்து பிரயாணிகளையும் விடுவிக்க வேண்டுமானால் பத்து கோடி பவுண்டுகள் தர வேண்டும் என பர்னபாஸ் மிரட்டல் விடுக்கிறார்.  "பொன் தேவதையை" விடுவிக்க தனியாக பத்து கோடி பவுண்டுகள் வேண்டும் அதை அப்புறமா டீல் பண்ணிக்கிடலாம் என்கிறார்கள். "ஆசைக்கு இல்லை அளவென்ற எல்லை" ஒரு தமிழ் பழமொழி!
              ஜேம்ஸை கொன்று அதனை மிரட்டலாக பயன்படுத்தி மற்ற பயணிகள் தங்கள் உறவினர்களுக்கு கடிதம் எழுத வைக்க எண்ணுகின்ற பர்னபாஸ், ஜேம்ஸை கையைக் கட்டி படகால் இழுத்து சென்று சுறாக்கள் நிறைந்த பகுதியில் விடுவது என உத்தரவிடுகிறார். கைகள் கட்டப்பட்ட நிலையிலும் அஞ்சாமல் தன்னிடம் இருக்கும் பெல்ட்டின் ரம்பத்தினை வைத்து கைக் கட்டினை அறுத்தெறிகிறார் ஜேம்ஸ். அது கண்டு படகை பின்னால் கொண்டு வந்து படகின் ப்ரோப்பெல்லர் பிளேடுகள் அவரை வெட்டி எறிய முயல்கின்றனர் பஞ்சமா பாதகர்கள். ஒரு புறம் சுறாக்கூட்டம், மறு புறம் தீயோர் கூட்டம். தத்தளிக்கிறார் நண்பர் ஜேம்ஸ். விதி வீசிச் செல்லும் காற்று எப்போதுமே ஒரே பக்கமே பயணிப்பதில்லையே?

 ஒரு சுறா படகின் பக்கம் போய் பிளேடால் தாக்குண்டு தன் இன்னுயிரை ஈய மற்ற சுறாக்கள் தங்கள் பசிக்கு கிடைத்த இரையாக அதை நோக்கிப் பாய, குண்டுகள் தன் பின்னால் பாய ஜேம்ஸ் நீந்துகிறார் கரையை நோக்கி தன்னுயிரை காக்க! 

படகு பழுதானதால் விரைந்து செல்ல முடியாமல் அலைகடலில் ஆட, குண்டு சுடும் தொலைவை விட்டு விலகுகிறார். இருள் படரும் வரை தேடி அலுத்து திரும்புகிறார்கள் தீயவர்கள்! மறு விமானத்தில் பர்னபாஸ் பிரான்ஸ் செல்ல எண்ணி கனவுகளுடன் இரவு உணவை வெல்வெட்டுடன்   முடிக்கும் சிந்தனை மனதில் உதிக்க தனது வெற்றியை கொண்டாட முயல ஜேம்ஸ் வந்து தடுக்க  பொன் தேவதையினை மீட்கும் முயற்சியில் துணை விமானியுடன் வெற்றி பெறுகிறார் ஜேம்ஸ். பர்னபாஸ் அந்த முயற்சியை தடுக்க எத்தனித்து வானில் இருந்து துரும்பென வீழ்கிறார் தன் நிறைவேறாத கனவுகளுடன்!  

வெறி கொண்ட வேங்கை!

வானம் அளவு ஆசைப்பட்டால் அதோகதிதான்! அன்றோ!
( நன்றிகள் ராணி காமிக்ஸ் நிறுவனத்திற்கு உரித்தானது. அவர்கள் மீண்டும் முழுவீச்சில்  களத்தில் இறங்கிட வேண்டும் என்கிற ஒரு ரசிகனின் ஆர்வத்தின் விளைவாகவே இந்த பதிவு வெளியிடப் பட்டு உள்ளது. சம்மந்த பட்ட நிறுவனம் ஆட்சேபித்தால் உடனே பதிவில் உள்ள ஐந்து சதவீத படங்களை தவிர மற்றவை நீக்கம் செய்யப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்! வாங்க சார் ராமஜெயம் சார், அ.மா.சாமி போன்ற அற்புதமான ஆசிரியர்கள் கலக்கிய சிம்மாசனம் சீக்கிரம் நிரம்ப வேண்டும் என்பதே ரசிகர்களாகிய எங்களது ஆசை! )

சிறப்பு நன்றிகள் : புத்தகத்தை படிக்க கொடுத்து உதவிய அரிய மனிதர் நண்பர் திரு.முருகவேல் பாண்டியன், அலங்காநல்லூர் அவர்களுக்கு..
 பதிவுக்கு ஆலோசனை மற்றும் கருத்து தெரிவித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்! 
பின்னர்? பின்னரே! வருகிறேன்! பாய்!!
   

Comments

Vimalaharan said…
பதிவு நன்றாக இருந்தது. இந்த கதையை நானும் பழைய புத்தக கடை உபயத்தில் படித்திருக்கிறேன்.. James Bond கதைகளில் இதுவும் ஒரு சிறந்த கதை.
King Viswa said…
நண்பர் ஜான் சைமன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், நட்பு வட்டத்திற்கும், எனது உளம் கனிந்த மனமுவர்ந்த ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள்.

உதிப்பவைஎல்லாம் உன்னதமாகட்டும்,
நீங்கள் விரும்பியதெல்லாம் உங்கள் வசமாகட்டும்.
John Simon C said…
நன்றிகள் திரு விமல்! எரி நட்சத்திரம் என்று ஒரு அட்டகாசமான கதை உண்டு. மிக சிறப்பாக இருக்கும்! கிடைக்காமல் கண்ணாமூச்சி காட்டுகிறது! வருகைக்கு நன்றிகள்!
John Simon C said…
வருகைக்கு மிக்க நன்றி தலைவர் விசு! அவர்களே! நன்றிகள் தங்களுக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
Erode M.STALIN said…
John Simon C: உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள்.
John Simon C said…
thanks for visiting stalin ji! happy easter!
John Simon C said…
thanks for visiting stalin ji! happy easter!
Periyar said…
Super Post... பொன் தேவதையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!
ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஜி.

//ஒரு புறம் சுறாக்கூட்டம், மறு புறம் தீயோர் கூட்டம். தத்தளிக்கிறார் நண்பர் ஜேம்ஸ். விதி வீசிச் செல்லும் காற்று எப்போதுமே ஒரே பக்கமே பயணிப்பதில்லையே?//

அருமை ஜீ தமிழ் விளையாடுகிறது.
கண்டிப்பாக நம்ம KAUN BANEGA போட்டியில் கலந்துக்கங்க ஜி.

பதிவை உங்களுக்கே உரித்தான நகைச்சுவை நடையில் அளித்துள்ளீர்கள்.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஜி.

ஸ்கேன்கள் அனைத்தும் அருமை.
John Simon C said…
வருகைக்கு நன்றி நண்பர்களே! அடுத்தக்கட்ட முயற்சிகளில் பங்கெடுத்து கொலை பண்ணனுமா ஹி ஹி ஹி யோசிக்கிறேன்!

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!