செவ்வாய், 14 ஜனவரி, 2014

பொங்கலோ பொங்கல்!!!

வணக்கம் அன்பு உள்ளங்களே!
அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்! பால் பொங்கியாச்சா???_இந்த கேள்வியுடன் இரு தினங்கள் கழித்து தெரிந்த பெரியவர்களை எல்லாம் துரத்த்திப் பிடித்து காசு வாங்கி அதை வைத்து காமிக்ஸ் வாங்கி ரசிக்க பொங்கல் அடிக்கடி வாராதா என்கிற சிந்தனைகள் நெஞ்சினை நனைக்க பொங்கல் திருநாள் ஒவ்வொரு முறையும் இனிப்பாகவே கடந்து செல்கிறது!!! இந்த பொங்கலுக்கு அருமையான நிகழ்வுகளில் இரண்டு உண்டு! நமது லயன் காமிக்ஸ் குறித்து தினகரனில் அணில் சார் எழுதிய அட்டகாசமான கட்டுரை மற்றும் சன் செய்தியில் விஜயன் சாரின் பேட்டி என்று அதகளமான நிகழ்வுகள்!




இதை ரபிக் ராஜா அப்லோட் செய்திருக்கிறார்! முகநூலில் https://www.facebook.com/groups/lionmuthucomics/ என்கிற பக்கத்தில்! தேவைப் படுவோர் தரவிறக்கிக் கொள்ளவும்! நன்றி நண்பரே!

அப்புறம் என்னங்கப்பா? ஓ! காமிக்க்ஸா? நேற்றில் இருந்து அப்லோட் கொடுத்து கொடுத்து சரியாக தரவேறாமல் அடப் போப்பா என ஒரு காமிக்ஸை நிறுத்தி வெச்சி இருக்கிறேன்!  
நம்ம தங்கக் கரங்கள் ஒன்று சேர்ந்து இந்த பொங்கலுக்கு காமிக்ஸ் மழையாக கொட்டி இருக்காங்க https://www.facebook.com/groups/comicskk/ இங்க போய் ஒரு பார்வை பார்த்து 
ஸ்டாலின் பாகம் இரண்டு - Thanga Velபொடிச்சூர் எக்ஸ்பிரஸ் - Lucky Limatகலாட்டா தாத்தா & பஸ் - Vinoj Kumar இந்த நூல்களை அள்ளிக் கொள்ளுங்கள்!! பொங்கிப் பிரவாகிக்கட்டும் அன்பும் அமைதியும்!! வாழ்க வளமுடன்! 
  

1 கருத்து:

  1. பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஜானி ஜி.
    கட்டுரையை படித்தேன், நன்றாக இருந்தது.
    ரபிக் சுட்டிக்காட்டியதை போல பிரகாஸ் அவர்களின் முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    பதிலளிநீக்கு

எங்கள் ஊர் நூலகத்துக்கான இரஷ்ய சிறுவர் இலக்கிய அன்பளிப்புகள்

 வணக்கங்கள் அன்பு வாசக இதயங்களே. உங்கள் அனைவருக்கும் வேலன்டைன்ஸ் டே வாழ்த்துக்கள்..  சிறுவர் இலக்கியத்தில் இரஷ்ய படைப்புகள் மிகவும் சிறப்பான...