திகில் வலை!!!

வணக்கங்கள் அன்பு உள்ளங்களே!!
எங்க ஊர்ல பொங்கல் முடிந்தவுடன் பெரியவர்களை சென்று கண்டு "பால் பொங்கியாச்சா" என்று கேட்டால் துட்டு கிடைக்கும்!!! ஆமா உங்க வீட்ல பால் பொங்கியாச்சா?
ஹீ ஹீ ஹீ எனது அருமை நண்பர் சரவணா rsk அவர்களது அன்புக் கட்டளைக்கிணங்க முகமூடி வீரர் மாயாவியாரின் சிலந்தி வலை சபையேறுகிறது!! 
மிகத் தற்செயல் நிகழ்வுதான் என்றபோதிலும் என் நண்பன் சரவணனுக்கு இன்று பிறந்தநாள் என்று இப்போதுதான் தெரிதுகொண்டேன்! அதே சமயம் இந்த பதிவும் வந்தது ஒரு ஆச்சரியம் மிகுந்த ஒற்றுமை! ஹாப்பி பர்த்டே நண்பா!!! இன்றுவரை நேரில் சந்தித்ததில்லை நாம்!! நம்மை இணைக்கும் அன்புக் கயிறு காமிக்ஸ் காமிக்ஸ் மட்டுமே! வாழ்க வளமுடன்! அனைத்து நண்பர்கள் சார்பிலும் இந்த பதிவை உனக்கே அர்ப்பணிக்கிறேன்!!!! ஸ்டார்ட் தி மியூசிக் நண்பாஸ்!!!! 
ஒரு காட்டில் எத்தனையோ பழங்குடி மக்கள் வசிப்பார்கள்; அவரவர் வழி தனித்தனி வழியாக இருக்கும் என்பதை மனதில் வைத்து இந்தக் கதையை வெளியிட்டுள்ளார்கள்! உங்களுடன் இந்த நூலை பகிர்வதில் மகிழும் கிரிதரன், கணேஷ்குமார், சொக்கலிங்கம் மற்றும் ஸ்ரீராம்....
 நம் இனிய தமிழில் வந்து அதகளம் புரிந்த அரிய காமிக்ஸ்களை ஆவணப்படுத்தும் எளிய நோக்கத்தில் மட்டும்தான் இங்கு வலைப்பதிவு இட்டுள்ளேன். யாருக்கேனும் ஆட்சேபணை இருக்கும் எனில் தாராளமாக தங்கள் தங்கமான கருத்துக்களையும் பகிரலாமே??!!?!! என்றும் அதே அன்புடன் ஜானி!! என்னங்க!! உங்க வீட்ல பால் பொங்கியாச்சா?????

Comments

mohammed safnas said…
This comment has been removed by the author.
mohammed safnas said…
One of my favourite story.. Thanx ji ...
Vijay said…
நன்றி நண்பரே...!
bala10 said…
மிக்க நன்றி ஐரோப்பாவில் இருந்து பாலா
மலரும் நினைவுகள்
John Simon C said…
நல்வரவு நண்பர் கார்த்திக் முருகேசன் அவர்களே! உங்களைப் போன்ற வாசகர்கள் வந்து அவ்வப்போது தங்கள் இருப்பினைக் காட்டிக் கொண்டால்தான் பதிவிடும் என் போன்ற நண்பர்களுக்கும் கொஞ்சமாவது சந்தோஷமாக இருக்கும். இது போன்ற நிறைய பதிவுகளும் அப்போதுதான் சபையை நிறைக்கும்!
வந்தோம், கண்டோம், சென்றோம் மனப்பான்மை மாறி வரும் சூழலில் தங்களது கருத்துக்கள் எங்களுக்கு ஒரு நிறைவைத் தருவதே நிம்மதி. நன்றி நண்பரே!

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!