ஆசீருக்குப் போராடு!!!

வணக்கங்கள் காமிக்ஸ் உலக வாக்காளப் பெருமக்களே!!! உங்கள் ஓட்டை எங்கள் அன்பு நண்பர் யாக்கோபு என்கிற இஸ்ரேல் மீது சும்மா நச்சுன்னு குத்துங்க! யாக்கோபு ஒரு குறும்புக் காரர்! அண்ணன் ஆடை உடுத்தி அப்பாவை ஏமாற்றி அண்ணனுக்கு சேரவேண்டிய ஆசீர்களைப் பெற்றுக் கொண்டு நடையைக் கட்டும் அவரது வாழ்வு எப்படி இறைவனின் பால் திரும்புகிறது என்றும் அவரது வாழ்வில் அவர் எப்படி தேவ தூதனை தொல்லை செய்து மல்லுக்கு நின்று அவரது ஆசீர்களைப் பெற்று இன்றும் நின்று விளையாடும் அட்டகாசமான ஒரு தலைமுறைக்குத் தலைவராக மலர்ந்தார் என்பதை வாசித்து அறிந்து மகிழுங்கள்!! அப்புறம் மாக்னம் ஸ்பெஷல் வருவது குறித்து முகநூல் பக்கங்களில் சிறப்பாக கலந்தாய்வுகள் நடந்தேறி வருகின்றன! உங்கள் பிரதிக்கு முந்துங்கள்!! கூடுதலாக சூப்பர் ஆறு காமிக்ஸ்களுக்கு சந்தா தொகை கட்டி விட்டால் வீடுதேடி காமிக்ஸ்கள் அணிவகுத்திடுமே?? சீக்கிரம் ஆயிரம் சந்தா அனுப்பி ஆயிரம் பக்கங்களாக மலர உதவிடுங்களேன்??? கனவுகளுக்கு விலைமதிப்பே இல்லைதானே?? 

என்றும் அன்புடன் உங்கள் நண்பர் ஜானி!!!
இறை ஆசீர்!!!

Comments

King Viswa said…
பிரம்மாதமான ஸ்கான்கள் ஜானி!!!!

Popular posts from this blog

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!