திங்கள், 30 ஜூன், 2014

3 Days to Kill

Hi,
உல்ப் என்கிற ரஷ்ய தீவிரவாதியை அழித்தொழிக்க வாட்டர் வர்ல்ட் புகழ் நாயகன் கெவின் காஸ்ட்னர் போராடும் திரைப்படம்தான் 3 days to kill...




                நாயகனுக்கு வித்தியாசமான நோய். விரைவில் இறந்து விடுவார் என்கிற சூழலில் தன் மனைவி, பெண் குழந்தையைத் தேடி பாரிஸ் வந்து சேர்கிறார். உல்பை பிடிக்க முயற்சித்து தோல்வி தழுவும் அவரை CIA உளவு வேலையில் இருந்து விடுவித்து விட்ட சோகம் வேறு. இந்த நிலையில் உல்ப் பாரிஸில் சுற்றிக் கொண்டிருக்க தன் குடும்பத்தைத் தேடி வந்த நாயகனும் பாரிஸில் இருக்க அமெரிக்கா ஒரு பெண் உளவாளியை அனுப்பி வைக்கிறது. அவள் நாயகனுக்கு தன் வழிக்குக் கொண்டுவர ஒரு சோதனை நிலையில் இருக்கும் ஊசி மருந்தினையும் தன்னுடன் கொண்டு வந்து கொடுத்து நாயகனைத் தூண்டி விட ஒரு பக்கம் குடும்பத்தில் சமாதானம் கொண்டு வர வேண்டும். அதே நேரம் உல்ப் சார்ந்த அனைத்து நபர்களையும் அழித்து ஒழிக்க வேண்டும். நாயகன் மகளோ தன் டீன் வயது குழப்பங்களுடன் திரிந்து கொண்டிருக்கிறாள். அவளை வழிப்படுத்த வேண்டும். கணவனை நீண்ட காலம் பிரிந்து இருந்த மனைவியின் கோபம். அப்பாவைப் பிரிந்து இருந்த மகளின் கண்ணீர். தன் குடும்பத்தினை இவ்வளவு காலம் பிரிந்து இருந்து விட்டோமே என்கிற தகப்பனின் ஆற்றாமை. இதனூடே ஒரு அருமையான கதையைப் பின்னி அமர்க்களப் படுத்தியுள்ளார் கதாசிரியர் லக் பெஸன்.  McG என்பவர் அருமையாக இயக்கியுள்ளார். மகளுக்கு சைக்கிள் கற்றுக் கொடுக்கும் காட்சி அருமை. அதிரடிகளை சம விகித்தில் கலந்து காக்டெயில் பரிமாறியுள்ளனர். நாயகனின் வீட்டை அவர் இல்லாததால் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் கறுப்பினக் குடும்பம் நாயகன் வந்ததும் அவருடன் கொள்ளும் ஒரு அருமையான உணர்வுகள் கலந்த பரிவு. ப்பா!!! நீங்கள் கட்டாயம் ஒரு முறையேனும் கண்டு களிக்க வேண்டும் ஜென்டில்மென் அண்ட் லேடீஸ்!!!! இத் திரைப்படத்தினைக் காண பரிந்துரைத்து + உதவிய அருமை நண்பர் ரமேஷ் சண்முகசுந்தரம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இன்று பிறந்த நாள் காணும் நண்பர் கிருஷ்ணா ராஜ குமாரன் அவர்களுக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்!!! வாழ்க வளமுடன்!

அடுத்து நம்ம லக்கி லூக்கின் அதிரடி சிரிப்பிதழ் "பூம் பூம் படலம்" என் உறவினர்களை தரிசிக்க தஞ்சை வரை செல்லும் ஒரு பயணமது. செல்லும் வழியில் இந்தப் புத்தகத்தினை கடை  ஒன்றில் வாங்கி வாசித்து வயிறு புண்ணாகிப் போனது. அட்டகாசமான நைட்ரோ கிளிசரின் வெடி மருந்தை ஏற்றிக் கொண்டு கிளம்பும் ரெயிலைக் கொள்ளை அடிக்க முயலும் டால்டன் குழுவுக்கும் லக்கி லூக்குக்கும் இடையே நடக்கும் அதகளங்கள் ஆகச்சிறந்த நகைச்சுவையாகப் பரிணமிக்கும் கதை இது. வாங்கத் தவறாதீர்கள்!!
 சூப்பர்ஸ்டார் டெக்ஸ் வில்லர் காவல் கழுகாக இம்முறைப் பறந்து பறந்து தாக்கி வதம் செய்யும் கதை இது! don't miss it!!

மந்திரத் தென்றல் மாஜிக் விண்டின் அட்டகாசமானதொரு சாகசம் காத்திருக்கிறது. ஒரு தாக்குதலில் தன் நினைவை இழந்த ஹீரோ செய்யும் சாகசங்கள் இம்முறை வெய்யில் அடிக்கும் பாலையில்...தவற விடாதீர்.
மரண மண்டையார் மங்கூஸ் தலையார் பராக் பராக் பராக். அவரது நக்கலான புன்னகை எனக்கு மிகவும் பிடிக்கும். கவலையே படாமல் போட்டுத் தாக்கும் ஜென்மமப்பா!!!

இப்போதைக்கு அவ்ளோதான் நண்பர்களே!!! பை!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...