விஸ்வாவின் விஸ்வரூபம்!!!

            அருமை காமிக்ஸ் உலாவல் மேற்கொள்ளும் தோழர்களுக்கு என் இனிய வணக்கங்கள்! 
       நண்பர் கிங் விஸ்வாவை அறியாதோர் இருக்க முடியாது! பல மரமண்டைகளுக்கிடையே மலர்ந்த மல்லிகை இவர்.  விமர்சனங்களை ஓரம் தள்ளி தனது பாணியில் பதில் கொடுத்துள்ளார் என்றே நினைக்க வைக்கிறது இவர்தம் கலக்கல் அணுகுமுறைகள்! புதிதாக தமிழ் காமிக்ஸ் உலகம் பதிப்பகத்தினைக் கொண்டுவந்ததுடன் தில்லாக முதலில் காமிக்ஸ்களை களம் இறக்காமல் காமிக்ஸ் மட்டுமில்லை இன்னும் பல சாதனை இதழ்களை வெளியிடவிருக்கிறோம் என தமிழ் கூறும் நல்லுலகுக்கு தன் வரவை அழுத்தமாகத் தெரிவிக்கும் வண்ணம் சிங்கப்பூரில் சிகரம் தொட தொடர்ந்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் அருமை சகோதரி கிருத்திகா அவர்களின் (முத்து விசிறியாரின் துணைவி இவர் என்பது தனிச்சிறப்பு!!!). அருமையான பயண நாவலான உல்லாசக் கப்பல் பயணத்தினை நாவல் வடிவிலேயே வெளியிட்டு தனது இன்னிங்க்சை வெற்றிகரமாகத் துவக்கியுள்ளார். வாழ்த்துக்கள் தோழர் விஸ்வா!!! 
வாண்டு மாமாவை சந்திக்க நினைத்தபோதெல்லாம் எங்கள் பணிகளின் கடுமையைத்தாண்டி சென்று தரிசிக்க முடியாமல் போய்விட்டது. சொக்கலிங்கம் சாரிடம் இதுகுறித்து சமீபத்தில் கூட வருத்தம் தெரிவித்தேன்.
அன்னாரை சந்திக்கும் கொடுப்பினையும் அன்னாரைக் குறித்து அவ்வப்போது தகவல்களை அள்ளித் தெளித்தும் அன்னாருக்கு உரிய மரியாதையை எப்போதுமே எடுத்துக் கூறுவதில் விஸ்வா காட்டிய அக்கறை அருமையான நினைவலைகளாகும்.
வாண்டு மாமா எங்கிருந்தாலும் வாழ்க! உங்கள் நினைவலைகள் என்றும் எங்களுடனே பயணிக்கும்!!!
என்றும் அதே அன்புடன் ஜானி!!!

Comments

King Viswa said…
This comment has been removed by the author.

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!