வியாழன், 30 ஜூலை, 2015
புதன், 29 ஜூலை, 2015
கலாம்....திரும்பி வா கலாம்!
எந்திர மனிதன் நீ எங்கள்
இதயத்தில் ஓர் இடம் நீ
எளிமையின் உருவம் நீ
வலிமையின் உதாரணம் நீ
மக்களின் நாயகன் நீ
மாசற்ற மன்னன் நீ
உலகினுக்கோர் பாதை நீ
இந்தியாவின் பெருமை நீ
ஏக்கமாய் நின்று கண்டோம்
ஏவுகணை எங்கோ பறந்திடுவதை
திப்புவின் சாதனைகள்
காலத்தால் கரைந்திடினும்
எம் ஏக்கத்தின் விடையாக
ஏவுகணை ஏட்டினிலே
எழுந்து நிற்கும் இமயம் நீ
சாதனை வரிசையிலே
இளைஞருக்கோர் எழுச்சி நீ.
சத்தியம் பகர்வதிலே
அக்கினிச் சிறகு நீ!
விஞ்ஞான சித்தன் நீ!
இன்னொரு புத்தன் நீ.
எங்கிருந்தோ வந்தாய்
அசையாத உறுதி கொண்டாய்
இந்திய சரிதத்தின் மேல்
பெருமை முகமாய் நீ நின்றாய்.
எம் மண்ணின் ஏக்கங்களின்
விடையாக நீ நின்றாய்.
தேசத்தின் பெருமைதனை
தூக்கி நீ நிறுத்தினாய்.
காலம் எத்தனை கடந்திடினும்
காற்றில் உன் பெயர் எதிரொலிக்கும்
கலாம் கலாம் கலாம் என்று
சென்று வா எம் தோழா
பிறிதோர் தீர்ப்பு தினத்தில்
பார்க் கலாம் –பழ கலாம்
இன்று கொள் சாந்தி சாந்தி சாந்தி !
விடை கொடுக்கிறோம்
எம் இந்திய மகனே
மூத்தக் குடிமகனே!
போய் வா. போய் வா.போய் வா
நல்லவர்கள் திரும்புவதில்லை
இன்னொரு வாய்ப்பிருந்தால்
எம் மண்ணுக்கே திரும்ப வா.
திரும்ப வா. திரும்ப வா.
எனும் நப்பாசை நெஞ்சில்
நச்சரிப்பின் கூக்குரலை
அழுகையுடன் அழுத்திக்
கொண்டு.
செவ்வாய், 28 ஜூலை, 2015
திங்கள், 27 ஜூலை, 2015
சனி, 25 ஜூலை, 2015
வியாழன், 23 ஜூலை, 2015
வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 041_A Rare Srilankan Tamil Comics!
நேற்று முதல் வாசகர் திரு.இரகு. தனியார் பாதுகாப்புப் பிரிவில் பணிபுரிகிறார். அவர் இரண்டு புத்தகங்களை தனது வோட்டர் ஐடியினை கொடுத்துப் பெற்று சென்றுள்ளார். அவருக்கு எங்களது வாழ்த்துக்கள். காமிக்ஸ் மீதான தீரா தாகத்தினை நிறைவு செய்யும் நமது பணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். காமிக்ஸ்களின் மூலமாக எழுத்துக்களுடனான புரிதல் விரைவில் மலர்கிறது. மொழியை எளிதாகக் கற்க காமிக்ஸ்கள் ஒரு அழகான பாதை என்பது அவரது கருத்து. என் அன்ட்ராய்டு கைபேசி பழுதடைந்துள்ளதால் அவரது புகைப்படம் பின்னர் வெளியாகும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பெருமை உங்கள் அனைவருக்கும் சொந்தமானது நண்பர்களே. யாரோ முகநூலுக்கும் இணையத்துக்கும் அப்பாற்பட்ட வயதான வாசகர்களின் மனதில் பூ பூக்க வைக்கும் இந்த முயற்சி ஆதரிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தோழமை உள்ளங்களே. என்ஜாய்.
புதன், 22 ஜூலை, 2015
வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 040_A Rare Srilankan Tamil Comics!
வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.
ஒரு காமிக்ஸ் உங்களுக்குப் பிடித்து விட்டது - அதுவும் தொலைந்து போய் விட்டது என்றால் என்ன செய்வீர்கள்? எப்பாடு பட்டாவது ஒரு முறையேனும் திரும்பவும் ஒரு முறை பார்த்து விட வேண்டும் என்கிற ஏக்கத்துடன் வலம் வருவீர்கள். எங்காவது கண்ணில் படாதா என்று ஒவ்வொரு பழைய புத்தகக் கடையாக ஏறி இறங்குவீர்கள். எவரிடமாவது உள்ளதா என்று விசாரித்துக் கொண்டே திரிவீர்கள். அலுக்கவே அலுக்காத இந்த தேடல் என்னிடமும் உண்டு தோழர்களே. இன்றும் கூட என் கண்ணில் சிக்காமல் ஜெட் லி போன்ற தலைமுறை தலைமுறையாக சாகசம் செய்யும் ஒரு சீனத்துக் கதை பொன்னி போன்ற இதழில் வந்து இதுவரை என் கண்ணில் தென்படாது அலைய விட்டுக் கொண்டே இருப்பது உங்களுக்கும் தெரியும்தானே. சில வருடங்களுக்கு முன்பதாக வேளாங்கண்ணி திருத்தலத்தில் கிடைத்து வந்த காமிக்ஸ் வகை புனிதர்கள் வரலாறுகள் இன்றளவிலும் எங்கே ஒளிந்து கிடக்கின்றன என்கிற தேடல் முடிவுக்கே வராது நீண்டு கொண்டே போகிறது. டான் போஸ்கோ, டொமினிக் சாவியோ, பிரான்சிஸ் சேவியர் போன்றோரின் கதைகள் வரிசை அது. உங்கள் பகுதி தேவாலயங்களின் நூலகங்களில் இருக்கலாம். தேடுங்களேன்.
இன்று நமது காமிக்ஸ்கள் பரிமாற்றக் குழுக்களின் புண்ணியத்தில் அவ்வப்போது திரை மறைவில் இருந்து வெளியே வந்து தலை காட்டிக் காணாமல் போகின்றன. யாரோ வாங்குகிறார் யாரோ விற்கிறார் அல்லது பதிலுக்கு காமிக்ஸ் கொடுத்துக் கொள்கின்றனர். இதில் இருந்து மாறுபட்டதொரு கருத்து எனக்கும். திரு. பன்னீர் செல்வம் அவர்களுக்கும் இருந்து வந்தது. நாங்களும் மூர் மார்க்கெட் முதல் திருவல்லிக்கேணி வரை ஆழ்வார் பேட்டை தாத்தா கடை முதல் வடபழனி நூல் பாண்டியன் வரை துழாவாத இடம் இல்லை. எங்களின் அலைச்சல்களை இனி காமிக்ஸ் தேடும் நண்பர்கள் மீண்டும் அதே முறையில் திரிந்து கஷ்டப்பட்டு காமிக்ஸ் வாசிப்பதைக் குறைக்கும் வண்ணம் உருவானதுதான் காமிக்ஸ் நூலக எண்ணம். இது பல வருடங்களாகவே சிந்தனையில் இருந்து வந்ததொரு எண்ணம். இதில் யாரையும் நாங்கள் வருத்தப்படுத்தும் எண்ணமோ நோக்கமோ கொண்டவர்கள் அல்ல என்பதை மீண்டும் ஒரு முறை கனிவுடன் தெரிவித்துக் கொள்ள எண்ணுகிறேன். இதில் பங்கு பெற்றிருக்கும் அனைவருமே காமிக்ஸ் காதலர்களே. அந்தக் காதலைப் பெருமைப் படுத்தும் விதமாக அவர்களின் பங்களிப்பான புத்தகங்களையும் இதில் வைத்து கவுரவிக்கும் எண்ணத்திலேயே அவர்களது இரண்டாவது மூன்றாவது காப்பி நூல்களை மட்டும் அன்பளிப்பாகப் பெற்று நம் நூலகத்தில் சேமித்து வருகிறோம். புத்தகங்களை அன்பளித்த நண்பர்கள் தங்களை வெளிக்காட்ட எண்ணினால் மட்டும் இங்கு பகிர்வோம். அது வேண்டாம் என்பவர்களது பெயர்கள் எங்கள் குறிப்புகளில் சேமித்துப் பாதுகாக்கப்படும். இது உங்கள் நூலகம் என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்கள் பங்களிப்புகளும் அன்புடன் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.
இன்று எங்கள் நூலகத்துக்கு அன்பளித்த அன்பளிப்பாளருக்கு தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் வாசகர்கள் சார்பிலும் நமது ரசிகப் பெருமக்கள் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவை அனைத்துமே அன்பளிப்பாளர்களின் புத்தகங்களே என்பதனை மீண்டும் ஒரு முறை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.
muthu comics
252 - ஒரு மர்ம இரவு
298-புதையல் பாதை
301 -திசை திரும்பிய பில்லி சூனியம்
302 -மரண ஒப்பந்தம்
303-பேழையில் ஒரு வாள்
306-ஒரு திகில் திருமணம்
309- சித்திரமும் கொல்லுதடி
311 -நொறுங்கிய நாணல் மர்மம்
313-விண்ணில் ஒரு குள்ள நரி
lion comics
183 - கோபுரத்தில் கொள்ளை
ஆகியவை நம்ம நூலகத்தில் இனி பாதுகாப்பாக வைக்கப் படும். இங்கே அமர்ந்து படிக்க வசதிகள் இன்னும் சில மாதங்களுக்குப் பின்னர் முறைப்படுத்தப் படும். அதுவரை வாசகர்களின் அன்பளிப்புகள் மட்டும் இங்கு பட்டியலிடப்படும். நமது நெருங்கிய வட்டங்கள் குறிப்பாக சென்னை நண்பர்கள் இவற்றுள் பார்க்காத புத்தகங்களை நேரில் தரிசிக்கலாம். வாசிக்கலாம். அனைத்துத் தகவல் தொடர்புகளும் கை பேசியிலேயே இப்போதைக்கு செயல்
பட்டுக் கொண்டிருக்கிறோம்.
அப்புறம் இந்த நாற்பதாவது அத்தியாயம் அப்படியே செவ்வாயைக் கடந்த புதனில் முப்பத்து எட்டாவது அத்தியாயம் கடந்ததும் தொடர்கிறது. எனவே ஏதோ அச்சமயம் குழப்பம் நேர்ந்திருக்க வேண்டும். திரு.சந்ரா இன்று நம்மிடையே இல்லை. வீரகேசரி பத்திரிக்கையிலும் ஏதும் தகவல் தெரிந்த அந்த நாள் தோழர் எவரும் இன்று நம்மிடையே இல்லையாதலால் வாசித்து இரசிப்பதுடன் நிறுத்திக் கொள்வோமே?
-என்றும் உங்கள் இனிய நண்பன் ஜானி

செவ்வாய், 21 ஜூலை, 2015
திங்கள், 20 ஜூலை, 2015
ஞாயிறு, 19 ஜூலை, 2015
சனி, 18 ஜூலை, 2015
வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 036_A Rare Srilankan Tamil Comics!
வணக்கங்கள் தோழமை நிறை நெஞ்சங்களே!
நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
சமீபத்தில் ஒரு சகோதரர் கொடுத்த கஞ்சியை அருந்தியபோது நினைவலைகள் பின்னோக்கித் தாவின. என் நண்பன் யாசின் அகமதுவும் அவரது தம்பி பஷீர் அகமதுவும் அந்தக் காலங்களில் எங்களுடன் கைகோர்த்து நடை பழகிய காலக்கட்டத்தில் அவர்களது அம்மாவின் கரங்களால் ரம்ஜான் நோன்பு கஞ்சி அருந்தாத தினங்களே இருக்கமுடியாது. அவை ஒரு கனாக்காலம். காலம்தான் எத்தனை விரைவாக விரைந்தோடுகிறது? நண்பர் காமிக்ஸின் பாதையில் இருந்து சற்றே விலகி நின்றுகொண்டு இருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் அதிரடிக்கலாம்.
நமது வட்டத்தில் உள்ள தோழர் அஹமது பாஷா . தோழர் கலீல் . தோழர் அபு சையத் இன்னும் உள்ள அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் அதே அன்புடன் -உங்கள் இனிய நண்பன் ஜானி!

வியாழன், 16 ஜூலை, 2015
ஞாயிறு, 12 ஜூலை, 2015
சென்னையில் ஒரு காமிக்ஸ் நூலகம்!!!
சென்னையில் ஒரு காமிக்ஸ் நூலகம்!!!
காமிக்ஸ் இரசிகர்களுக்காகவே இரசிகர்களால் இரசிக்கப்பட ஒரு நூலகம்.
மிக நீண்ட நாட்களாக சிந்தனையில் கூடு கட்டி எண்ணத்தில் பாத்தி கட்டி ஏக்கத்தில் வலை பின்னி
இன்ன பிற இத்யாதி ஆகி ...
நமது காமிக்ஸ் வாசகர்படைகள் மூலைக்கு மூலை காமிக்ஸ் தேடுவதையே வேலையாகக் கொண்டு இருப்பது வழக்கம்தானே?
நாம் எதற்காகத் தேடுகிறோம்?
முதலில் அதன் கதை என்ன என்பது அறிவது. அதில் உள்ள சித்திரங்களை இரசிப்பது. பின் நமக்கே நமக்கென சொந்தம் கொண்டு ஒரு காமிக்ஸை வைத்து நினைத்தபோது எல்லாம் எடுத்து ஒரு பார்வை பார்ப்பது. இதற்கு மேல்?
அது காலத்தால் தனது வனப்பையும் எழிலையும் கொஞ்சம் கொஞ்சமாக இழப்பினை சந்திக்கும்போது கலங்குவது. வேறு எவ்வித வழிகளைப் பின்பற்றியாவது பாதுகாப்பு செய்வது. இவைதான் நமது பொதுவான எண்ணம்.
சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் அவர்கள்
நண்பர்களுக்கு என பிரத்யேகமாக ஒரு நூலகம் துவங்கும் கருத்தை முன்வைத்தார். அவரது பாதையில் பணிகள் ஒருபுறம் நிறைவேறிக் கொண்டுள்ளன.
இந்த சூழலில் அதற்கு முன்பாக நாம் இன்று சந்தித்த நண்பர்களின் அன்புக்கு இணங்க இப்போது சென்னை நண்பர்களுக்கு மட்டுமாக அவர்களின் ஆவலை ஏக்கத்தை நிறைவு செய்யும் விதமாக ஏன் காமிக்ஸ்களை படிக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தரக் கூடாது என்ற எண்ணத்தில்தான் இந்த அறிவிப்பு.
உங்களில் யாரும் இரத்தப் படலம் முழு புத்தகம் வாசித்து விட்டீர்களா? அப்படி படிக்காமல் இன்னும் வாசிக்கும் எண்ணத்துடன் இருக்கும் நம் சென்னை வாழ் நண்பர்கள் தங்கள் வீட்டுக்கே எடுத்துச் சென்று ஒரு பதினைந்து நாட்கள் வைத்துப் படிக்கும் வகையில் கொடுத்து அனுப்பலாமா? அப்படிக் கொடுக்கும் பட்சத்தில் அவர்களது ஏதேனும் முக்கிய ஆவணங்களை மட்டும் வாங்கி வைத்துக் கொண்டு தரலாமா? என்கிற சிந்தனைகள் இன்று எங்களுக்குள்.....
உங்கள் சிந்தனைகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டால் நமது நூலக வித்து ஒரு மெகா விருட்சமாக வளரும் நீராதாரமாக நீங்களும் இருப்பீர்கள் என்கிற சிந்தனைகளுடன்....உங்கள் இனிய நண்பன் ஜானி.
புதன், 8 ஜூலை, 2015
செவ்வாய், 7 ஜூலை, 2015
வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 032_A Rare Srilankan Tamil Comics!
வணக்கங்கள் பிரியமானவர்களே!
கண்ணில் பட்ட துணுக்கு ஒன்று:தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள்:
-1961 -ல் எப்டிஸ்டில் என்கிற ஆங்கிலப் படத்தில் நடித்துள்ளார்.
-1962 ல் சின்னடா கொம்பே என்கிற கன்னட திரைப்படத்தில் அறிமுகம்.
-1965-ல் மனசுற மமதனு தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகம்.
-1965-ல் வெண்ணிற ஆடை படம் மூலமாகத் தமிழகத் திரைவானில் பிரகாசிக்கத் துவங்கினார்.
-1968 -ல் இசாட் என்கிற திரைப்படத்தின் வாயிலாக பாலிவுட்டில் அறிமுகமானார்.
- தமிழ் திரையுலகில் முதன் முதலாக ஸ்கர்ட் அணிந்து நடித்த முதல் நடிகை என பெயர் வாங்கியவர்.
-1972 -ல் தமிழக அரசு கலை மாமணி விருதை வழங்கி கவுரவித்துள்ளது.
-1973 -ல் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது பெற்றுள்ளார்.
-1980 -ல் வெளியான "நதியைத் தேடி வந்த கடல்" என்கிற திரைப்படம் இவர் வெள்ளித்திரையில் நடித்த கடைசித் திரைப்படம் ஆகும்.
- 1982 -ல் அதிமுக உறுப்பினர்.
-1983 -ல் அதிமுகவின் கொள்கைப் பரப்பு செயலாளர்.
1984-1989 வரை ராஜ்ய சபா உறுப்பினர்.
- நன்றிகள் : மக்கள் மனசு பத்திரிகை
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி!
திங்கள், 6 ஜூலை, 2015
வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 031-1_A Rare Srilankan Tamil Comics!
வணக்கம் தோழமை கொண்ட உள்ளங்களே.
சென்னையில் காமிக்ஸ் தேடி பழைய புத்தகக் கடைகளைக் குடைந்தவன் நான். இன்றும் கண்டுபிடிக்க வேண்டிய அரிய காமிக்ஸ் வகைகள் நிறையவே உண்டு. அந்த நாட்களில் தெருவுக்குத் தெரு வாடகைப் புத்தக நிலையங்கள் இருந்தன. யார் சென்று வேண்டுமானாலும் எளிதாகத் தாங்கள் விரும்பும் நூல்களை வாங்கிப் படிக்கவியலும். காலப் போக்கில் அனைத்து வாடகைப் புத்தக நிலையங்களிலும் இருந்த தமிழ் காமிக்ஸ்கள் மங்கலாகி மறைந்தே போயின. இது ஒரு சிலரின் காமிக்ஸ் வியாபார வேட்டையால் நடந்ததா என்பதை நம் நண்பர்கள் அனைவருமே ஓரளவுக்கு அறிவோம். இந்த சூழலில் இது போன்று காமிக்ஸ் தேடி அலையும் சித்திரக் கதை நேயர்களுக்கு உதவிடும் விதமாக கிடைக்கும் புத்தகங்களை வைத்து ஒரு நூலகம் சென்னையில் நிறுவிட எண்ணி நானும் சொக்கலிங்கம் சாரும் களமிறங்கிய சேதி உங்களுக்குத் தெரியும். இன்னும் சிறிது காலத்தில் அது கட்டாயம் நடந்தே தீரும் என்று சொக்கலிங்கம் சார் உறுதி கூறுகிறார். இந்த எண்ணத்துக்கு வலு சேர்க்கும் விதமாக நண்பர் திரு.செந்தில் என்பவர் நேற்று வீடு தேடி வந்து ஒரு இரத்தப் படலம் பதினெட்டுப் பாகங்கள் அடங்கிய ஒட்டுமொத்த நூலை அன்பளிப்பாக நூலகத்துக்குப் பரிசளித்துள்ளார். இதைப் போன்று சில நண்பர்களது தொடர் ஆதரவும் எங்களுக்குக் கிடைத்துக் கொண்டே வருகிறது. இங்கே எப்போது வேண்டுமானாலும் நீங்கள் வந்து வாசிக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்ய எண்ணியுள்ளோம். இது தவிர சிலப்பல் முயற்சிகள் நடந்தேறிய வண்ணம் உள்ளது. உங்கள் பங்கிற்கு நீங்கள் வைத்துள்ள இரண்டாவது காப்பி புத்தகங்களை நூலகத்துக்குக் கொடுத்து உதவலாம்.
நிரூபித்து விட்டாய்.
என்றும் அதே அன்புடன்---ஜானி

அப்புறம் வாழ்ந்தது போதுமாவின் இந்த அத்தியாயம் சனிகிழமை அன்றும் திங்கள்கிழமை இன்றும் ஒரே அத்தியாய எண்ணில் அதாவது முப்பத்து ஒன்று- வெளியிடப்பட்டுள்ளதுதான் இங்கு விசேஷம். கதை தன் இறுதிக் கட்டத்துக்கு வேகமாக நகர்ந்து கொண்டு உள்ளது. சிங் நல்லவனாகத்தான் இருக்கக் கூடும் என்ற எண்ணத்தினை ஒரு பெண்ணை சுட்டுக் கொலை செய்வதுடன் ஏறக் கட்டிக் கொள்ள வேண்டியதாயிற்று. சிங்காரம் கெட்டப் பயலேதான்.
அடுத்து....
கல்லுக்குள் ஈரமிருக்கும் என்று பெண்ணே நீநிரூபித்து விட்டாய்.
என்றும் அதே அன்புடன்---ஜானி
சனி, 4 ஜூலை, 2015
வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 030_A Rare Srilankan Tamil Comics!
then
here tex 250 lion comics issue rocks on book stalls. give a big hands to editor,vijayan sir for give 3 tex stories on a single book, do not miss it, it must be in your comics collections,
for more details kindly visit editor vijayan's official blog
http://lion-muthucomics.blogspot.in/2015/07/blog-post.html?
then....bye from your friend john simon chinnappan!

வியாழன், 2 ஜூலை, 2015
வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 029_A Rare Srilankan Tamil Comics!
வணக்கங்கள் அன்பு நெஞ்சங்களே!
நம்ம நண்பர் திரு டெக்ஸ் விஜயராகவன் அவர்களின் புது வலைப்பூ இன்று மலர்கிறது. உங்கள் அனைவரின் ஆதரவையும் நண்பருக்கு நல்கிட வேண்டுகிறேன். சித்தர் பாடல்களில் சித்திரக் காரருக்கு என்ன ? என்கிற எண்ணம் இருக்குமானால் அதனை மாற்றிட வேண்டி வரலாம். நண்பர் காமிக்ஸ் உலகின் ஜித்தர்.
"தேசஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம் காசுமுன் செல்லாதடி குதம்பாய் காசுமுன் செல்லாதடி., ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில் காசுக்கு பின்னாலே குதம்பாய் காசுக்கு பின்னாலே "
http://salemtex.blogspot.in/2015/07/250.html?m=1
அன்பு நண்பர் விஸ்வா எப்போதுமே சர்வதேசத் தளத்திலான பார்வையை பதித்து வருபவர். அவரது சமீபத்திய பதிவு.
http://tcuintamil.blogspot.in/2015/07/rip-leonard-starr.html
திரு.லியோனார்ட் ஸ்டார் அவர்களது ஆன்மா இறைவனின் மடியினில் நிம்மதி பெறட்டும். தகவலுக்கு நன்றிகள் விஸ்வா!
புதன், 1 ஜூலை, 2015
ஜூராசிக் உலகமடா இது!
வணக்கம் அன்பும் ஆதரவும் நல்கும் தோழமை உள்ளங்களே!
ஜூராசிக் உலகம் வெளியாகி அசத்தலாக ஓடிக் கொண்டு இருக்கும் இத்தருணத்தில் இப்பதிவை இடவில்லை எனில் அப்புறம் எப்போது.
உண்மையிலேயே பிரமாதப் படுத்தி இருக்கிறார்கள். மோப்ப சக்தி கொண்ட சின்னஞ்சிறு டைனோசர் படையை ஆஹா அமர்க்களமாக சிந்தித்து செயலாக்கி இருக்கின்றனர். டைனோ வார் (dino war) எதிர்காலத்தில் நிகழ்ந்தால் அது இந்த மாதிரி இருக்கலாம் என்கிற கற்பனையாகட்டும். சுறா மீனை சரேலென்று பாய்ந்து பிடித்து விழுங்கும் கடல் வாழ் டைனோசராகட்டும். தகவமைப்பை மாற்றிக் கொண்டு வெறித்தனமாக வேட்டையாடும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட புத்திசாலி இனமாகட்டும், கடைசியில் தான்தான் நிஜ ஹீரோ எனக் காண்பிக்கும் காட்டரசன் - டி ரெக்ஸ் ஆகட்டும். பிரமிப்புக்கு நிறையவே கொட்டி வைத்துக் கொண்டு காத்திருக்கிறது ஜுராசிக் வேர்ல்ட். கண்டிப்பாக தவற விடக்கூடாத திரைப்படம். நான் கூட ஆரம்பத்தில் நாயகி ஜுராசிக் பார்க் டி சர்ட் அணிந்துள்ள கணிப்பொறி இயக்குனரை கலாய்க்கும்போது என்னடா இப்படி ஸ்பீல்பெர்க் படத்தை அவரது தயாரிப்பிலேயே கலாய்க்கிறார்களே என்று கொஞ்சம் திடுக்கிட்டேன். ஆனால் அந்த நாயகியே ஒரு கட்டத்தில் எடுக்கும் முடிவுதான் படத்தினைத் தூக்கிப் பிடிக்கிறது. அது என்ன என வெள்ளித்திரையில் கண்டிப்பாக ஒரு முறை தரிசியுங்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அந்த முழு குழுவுக்கும் ஒரு சல்யூட்.
இனி நம்ம கைவண்ணத்தில் ஹி ஹி தோழர் ரமேஷ் சண்முக சுந்தரம் அவர்களது பரிந்துரையில் மொழி பெயர்க்கப்பட்ட இந்த டைனோசர் அணியும் மகிழ்ச்சி தோன்ற செய்தால் புகழ் அனைத்தும் நண்பர் ரமேஷ் அவர்களுக்கே.

இது லாரன்ஸ் டேவிட் சாகசம் வண்ணத்தில் வெளியானால்? என்கிற எண்ணத்தில் உருவான வாசக முயற்சி! விஜயன் சார் அவர்களுக்கு நன்றிகள்
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩
அன்புடையீர்... இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
இனிய காமிக்ஸ் தோழமைகளுக்கு அடியேனின் அன்பு வணக்கம். இன்றைக்கு நாம் பார்க்கவிருப்பது "பரங்கா பள்ளத்தாக்கு" ரங்லீ காமிக்ஸ் 100/- ...
-
[8/12, 09:22] 🌟ஜானி_ஷீலா💐: நண்பர்களே! சீனியர் எடிட்டர் என்று நீங்கள் அன்புடன் அழைக்கும் சவுந்தர பாண்டியன் எழுதும் மடல். நமது வெளியீடுகள் ...