புதன், 1 ஜூலை, 2015

ஜூராசிக் உலகமடா இது!

வணக்கம் அன்பும் ஆதரவும் நல்கும் தோழமை உள்ளங்களே!
ஜூராசிக் உலகம் வெளியாகி அசத்தலாக ஓடிக் கொண்டு இருக்கும் இத்தருணத்தில் இப்பதிவை இடவில்லை எனில் அப்புறம் எப்போது.
உண்மையிலேயே பிரமாதப் படுத்தி இருக்கிறார்கள். மோப்ப சக்தி கொண்ட சின்னஞ்சிறு டைனோசர் படையை ஆஹா அமர்க்களமாக சிந்தித்து செயலாக்கி இருக்கின்றனர். டைனோ வார் (dino war) எதிர்காலத்தில் நிகழ்ந்தால் அது இந்த மாதிரி இருக்கலாம் என்கிற கற்பனையாகட்டும். சுறா மீனை சரேலென்று பாய்ந்து பிடித்து விழுங்கும் கடல் வாழ் டைனோசராகட்டும். தகவமைப்பை மாற்றிக் கொண்டு வெறித்தனமாக வேட்டையாடும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட புத்திசாலி இனமாகட்டும், கடைசியில் தான்தான் நிஜ ஹீரோ எனக் காண்பிக்கும் காட்டரசன் - டி ரெக்ஸ் ஆகட்டும். பிரமிப்புக்கு நிறையவே கொட்டி வைத்துக் கொண்டு காத்திருக்கிறது ஜுராசிக் வேர்ல்ட். கண்டிப்பாக தவற விடக்கூடாத திரைப்படம். நான் கூட ஆரம்பத்தில் நாயகி ஜுராசிக் பார்க் டி சர்ட் அணிந்துள்ள கணிப்பொறி இயக்குனரை கலாய்க்கும்போது என்னடா இப்படி ஸ்பீல்பெர்க் படத்தை அவரது தயாரிப்பிலேயே கலாய்க்கிறார்களே என்று கொஞ்சம் திடுக்கிட்டேன். ஆனால் அந்த நாயகியே ஒரு கட்டத்தில் எடுக்கும் முடிவுதான் படத்தினைத் தூக்கிப் பிடிக்கிறது. அது என்ன என வெள்ளித்திரையில் கண்டிப்பாக ஒரு முறை தரிசியுங்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அந்த முழு குழுவுக்கும் ஒரு சல்யூட்.
இனி நம்ம கைவண்ணத்தில் ஹி ஹி தோழர் ரமேஷ் சண்முக சுந்தரம் அவர்களது பரிந்துரையில் மொழி பெயர்க்கப்பட்ட இந்த டைனோசர் அணியும் மகிழ்ச்சி தோன்ற செய்தால் புகழ் அனைத்தும் நண்பர் ரமேஷ் அவர்களுக்கே.

இது லாரன்ஸ் டேவிட் சாகசம் வண்ணத்தில் வெளியானால்? என்கிற எண்ணத்தில் உருவான வாசக முயற்சி! விஜயன் சார் அவர்களுக்கு நன்றிகள்
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி


  

2 கருத்துகள்:

  1. நான் பார்த்த கண்ணோட்டத்திலேயே,ரசித்து 'ஜுராசிக் வேல்டு'பற்றி எழுதியிருந்திர்கள்...அருமை..ஜான்..! ரமேஷ் சண்முகசுந்தரத்திற்கும் எனது பாரட்டுக்கள்..!
    மஞ்சள் பூ மர்மத்தை விட...நீங்கள் கலராக்குவது எப்படி என்ற மர்மம் பெரிதாகவுள்ளது..!

    பதிலளிநீக்கு
  2. நல்ல விமர்சனம் சார் :)
    ரமேஷ் சாருக்கும் வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு

எங்கள் ஊர் நூலகத்துக்கான இரஷ்ய சிறுவர் இலக்கிய அன்பளிப்புகள்

 வணக்கங்கள் அன்பு வாசக இதயங்களே. உங்கள் அனைவருக்கும் வேலன்டைன்ஸ் டே வாழ்த்துக்கள்..  சிறுவர் இலக்கியத்தில் இரஷ்ய படைப்புகள் மிகவும் சிறப்பான...