சென்னையில் ஒரு காமிக்ஸ் நூலகம்!!!

சென்னையில் ஒரு காமிக்ஸ் நூலகம்!!! காமிக்ஸ் இரசிகர்களுக்காகவே இரசிகர்களால் இரசிக்கப்பட ஒரு நூலகம். மிக நீண்ட நாட்களாக சிந்தனையில் கூடு கட்டி எண்ணத்தில் பாத்தி கட்டி ஏக்கத்தில் வலை பின்னி இன்ன பிற இத்யாதி ஆகி ... நமது காமிக்ஸ் வாசகர்படைகள் மூலைக்கு மூலை காமிக்ஸ் தேடுவதையே வேலையாகக் கொண்டு இருப்பது வழக்கம்தானே? நாம் எதற்காகத் தேடுகிறோம்? முதலில் அதன் கதை என்ன என்பது அறிவது. அதில் உள்ள சித்திரங்களை இரசிப்பது. பின் நமக்கே நமக்கென சொந்தம் கொண்டு ஒரு காமிக்ஸை வைத்து நினைத்தபோது எல்லாம் எடுத்து ஒரு பார்வை பார்ப்பது. இதற்கு மேல்? அது காலத்தால் தனது வனப்பையும் எழிலையும் கொஞ்சம் கொஞ்சமாக இழப்பினை சந்திக்கும்போது கலங்குவது. வேறு எவ்வித வழிகளைப் பின்பற்றியாவது பாதுகாப்பு செய்வது. இவைதான் நமது பொதுவான எண்ணம். சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் அவர்கள் நண்பர்களுக்கு என பிரத்யேகமாக ஒரு நூலகம் துவங்கும் கருத்தை முன்வைத்தார். அவரது பாதையில் பணிகள் ஒருபுறம் நிறைவேறிக் கொண்டுள்ளன. இந்த சூழலில் அதற்கு முன்பாக நாம் இன்று சந்தித்த நண்பர்களின் அன்புக்கு இணங்க இப்போது சென்னை நண்பர்களுக்கு மட்டுமாக அவர்களின் ஆவலை ஏக்கத்தை நிறைவு செய்யும் விதமாக ஏன் காமிக்ஸ்களை படிக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தரக் கூடாது என்ற எண்ணத்தில்தான் இந்த அறிவிப்பு. உங்களில் யாரும் இரத்தப் படலம் முழு புத்தகம் வாசித்து விட்டீர்களா? அப்படி படிக்காமல் இன்னும் வாசிக்கும் எண்ணத்துடன் இருக்கும் நம் சென்னை வாழ் நண்பர்கள் தங்கள் வீட்டுக்கே எடுத்துச் சென்று ஒரு பதினைந்து நாட்கள் வைத்துப் படிக்கும் வகையில் கொடுத்து அனுப்பலாமா? அப்படிக் கொடுக்கும் பட்சத்தில் அவர்களது ஏதேனும் முக்கிய ஆவணங்களை மட்டும் வாங்கி வைத்துக் கொண்டு தரலாமா? என்கிற சிந்தனைகள் இன்று எங்களுக்குள்..... உங்கள் சிந்தனைகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டால் நமது நூலக வித்து ஒரு மெகா விருட்சமாக வளரும் நீராதாரமாக நீங்களும் இருப்பீர்கள் என்கிற சிந்தனைகளுடன்....உங்கள் இனிய நண்பன் ஜானி.

Comments

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!