கண்ணில் பட்ட துணுக்குகள்

-எல்லா வகையிலும் சமமான முக் கோணங்களுக்கு ஒரு பெயருண்டு. அது என்ன?
-கான்க்ரூயன்ட் (congruent)


-அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நிக்சன் பதவியில் இருக்கும்போது இவர் மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டது. அப்போது இவரது முகத்தை வைத்து வாட்சுகள் செய்யப்பட்டது. இந்த வாட்சுகள் மிகவும் பிரபலமடைந்தன. இந்த வாட்சுகளில் உள்ள நிக்சன் முகத்தின் கண்கள் ஒவ்வொரு நொடிக்கும் இந்தப்பக்கமும், அந்தப்பக்கமும் செல்லும். அந்த முகத்தின் தலையில் நான் திருடன் இல்லை என்று எழுதப்பட்டிருக்கும்.


-பிறக்கும் குட்டிகளிலேயே யானைக் குட்டிதான் அதிக எடையுள்ளது. யானைக் குட்டியின் எடை அறுபத்தேழு கிலோவிலிருந்து தொண்ணூறு கிலோ வரை இருக்கும்.

-தமிழ் நாட்டில் உள்ள மாநகராட்சிகள் பன்னிரண்டு. அவை உருவான ஆண்டுகள்.
சென்னை மாநகராட்சி -1688
மதுரை -1971
கோவை -1981
திருச்சி -1994
நெல்லை-1994
சேலம் -1994
திருப்பூர்-2008
ஈரோடு-2008
வேலூர்-2008
திண்டுக்கல்-2014
தஞ்சாவூர்-2014

தூத்துக்குடி-2008

என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி!

Comments

King Viswa said…
ஐயா,

மாநகராட்சி பற்றிய தகவல்களுக்கு நன்றி.

அனைத்து மாநகராட்சிகளும் அவை உருவாக்கப்பட்ட ஆண்டு வகையில் இங்கே எழுதப்பட்டு இருக்க, தூத்துக்குடி மட்டும் தனித்து இருப்பது ஏன்?
John Simon C said…
அது பிரசுரிக்கப்பட்ட விதத்திலேயே மாறுதல் இன்றி கொடுத்திருக்கிறேன் அய்யா! ஹி ஹி

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!