நீலாவின் கிளி

வணக்கங்கள் அன்பு உள்ளங்களே!
விதவிதமான சித்திரக்கதை நேயர்களில் புதுப்புது அறிமுகங்கள் கிடைப்பது என்பது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இன்று நான் அறிமுகப்படுத்தவுள்ளவர்  திருவாளர்.சுரேஷ் சந்த் அவர்கள். தமிழ் சித்திரக்கதைகளின் மீது தீராத்தாகம் கொண்டுள்ள எக்கச்சக்கமான நண்பர்களில்   இவர் வேறுபடுகிறார். விதவிதமான பொருட்கள் சேகரிப்பு, நாணயங்கள் சேகரிப்பு, ரூபாய் நோட்டுகள் சேகரிப்பு, தாயத்துகள் சேகரிப்பு என்று இவரது சேகரிப்பின் எல்லைகள் வெவ்வேறு திசைகளை நோக்கிப் பயணிக்கின்றன. தமிழ் சித்திரக்கதைகள் மீது இவர் கொண்ட நேசம் நமக்கு வரப்பிரசாதம் என அமைந்து விட்டது நமக்குக் கிடைத்த மாபெரும் அதிர்ஷ்டம். எத்தனையோ நண்பர்களது ஆதரவுக்கரங்கள், பலத்த கைதட்டல்கள்  இனி இவரை நோக்கிக் குவியும் என்பதில் சந்தேகமில்லை.  அன்னாரது வேண்டுகோளின்படி இந்தக் குறுங்கதை வெளியாகிறது. இது இதயம் பேசுகிறது இதழில் இடம்பெற்ற ஒரு சிறு சித்திரக்கதையாகும். நன்றிகள் சார். இன்னும் பல அருமையான கதைகளை வாசகர்களுக்கு அன்பளிக்க எங்கள் முன்கூட்டிய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
திருவாளர்.சுரேஷ் சந்த்.பிடிஎப்  நண்பர் திரு.ரஞ்சித் கொடுப்பார். 

அப்புறம், திருவாளர்.சுரேஷ் சந்த் அவருடைய சேகரிப்புக்கு சித்திரக்கதைகள் நிறைய தேவைப்படுகிறது. நீங்கள் அவருடன் தொடர்பு கொள்ள https://www.facebook.com/suryantex.chandran?fref=nf

திகில், லயன் முதல் நூறில் ஐம்பது புத்தகங்கள், முத்து காமிக்ஸில் முதல் நூறில் ஒரு இருபது புத்தகங்கள் என சில தேவைகள் உள்ளன. தொடர்பு கொள்ளுங்களேன்?
அப்புறம் ஒரு முக்கியமான விடயம். அவரிடம் தமிழில் பேசும்போது கவனமாகப் பேசவும். தலைவர் தமிழ் சரியாகப் பேசுவார். மற்றவர்களும் அவ்வாறே பேசவேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி 


Comments

Tiruppur Kumar said…
ஐயா நீங்கதன அது
mayavi. siva said…
சுரேஷ் சந்த் அவர்களின் முகத்தை பதிவிட்ட அருமை நண்பர் ஜான்சைமனுக்கு என் முதல் நன்றிகள்..! பூவண்ணன் பல சிறுகதைகள் ஜெயராஜ் ஓவியத்தில் வந்துள்ளன..! அவற்றை தொடர்ந்து வெளியிடுங்கள் நண்பரே..! பக்கங்கள் மாறியுள்ளன, அவற்றை அப்படியே சரிசெய்து விடுங்கள் ஜான்..!சம்பத் ஒரு பக்கம் கதையில் தவறுசெய்திருந்தாலும், மறுப்பக்கம் தவறு அழகா அவனாலேயே சரிசெய்யப்பட்டது..ஒருகதவு மூடிக்கொண்டால், மறுகதவு தானே திறக்கப்படும் என்ற அழமான தத்துவத்தை சொல்லும் கதை அருமை..! இந்த சந்தர்ப்பத்தில் இந்த கதை,பெயர் சொல்லும் நீதி மாறுபட்ட கோணத்தில் தோன்றுவது எனக்கு மட்டும் தானோ.!?!?!

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!