வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.
வலைதளத்தில் இயங்குகின்ற சில தளங்கள் இணைய இணைப்பிலேயே தங்கள் புத்தகங்களைப் படித்தலையும் அவ்வாறு படித்து நன்றாக இருந்தால் தங்கள் நூல்களை அருகாமையில் உள்ள அங்காடிகளில் வாங்கிக் கொள்ளுவதையும் ஊக்கப்படுத்துவது என்பது உலகுக்குப் புதிய புதுமையானதொரு செய்தியல்ல. அதே போல பிடிஎப் ஆகக் கூட வாங்கிப் படித்தல், டவுன்லோட் செய்து கொள்ளத் தனிக் கட்டணம் என்பவையும் உலகமெங்கிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு சங்கதியே. உங்கள் பார்வைக்கு சில ஆன் லைனில் அணுகிப் படிக்கக் கூடிய வாசிப்புத் தளங்களை இணைத்துள்ளேன். உறுப்பினராகுங்கள். இலவசப் புத்தகங்களை வாசித்து அனுபவியுங்கள். சில கட்டண விகிதங்களுக்குட்பட்டவை. பல இலவசத் தளங்கள். முயற்சியுங்களேன்.
dc Comics Reading
நிற்க தமிழகத்தில் இருந்து உலகளாவிய சர்வதேச தமிழ் சமூகம் தங்கள் அடையாளத்தை நிலைநாட்டிடும் முயற்சிகளில் பெரு வெற்றி கண்டு வரும் இந்த சூழலில் அவர்களுக்காகவும், தமிழ் மொழி வழங்கிடும் அத்தனை இந்து இடுக்குகளுக்கும் காமிக்ஸ் அனுபவத்தைக் கொண்டு சேர்க்கும் விதமாகவும் புதியதொரு மன்றம் துவங்கப்பட்டு இயங்கி வருகிறது.
உறுப்பினராவதும், அதில் உள்ள இலவசப் புத்தகங்களை வாசிப்பதும், தேவை எனில் சந்தாக் கட்டணங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது வரையில் இருபது, இருபத்திரண்டு புத்தகங்கள் மட்டுமே காணப்படுகிறது. பின்னர் சேர்க்கப்பட்டு கிடைக்கும் வாய்ப்புள்ள புத்தகங்கள் முக நூல் முகவரியிலும் காணக் கிடைக்கின்றன. முயன்று பாருங்களேன். யார் கண்டது. இதனை அடியொற்றி நிறைய வலைத் தள வாசிப்பு தளங்கள் துவக்கம் காணலாம். இது தமிழின் முதல் முயற்சி என்பது மட்டும் இப்போதைய சேதி.
இதற்கிடையில் நண்பர்கள் பல வலைப் பூக்களை இப்போது புதிதாகத் துவக்கி இருக்கிறார்கள்.
https://www.facebook.com/aravinth456
நண்பர் சாக்ரடீஸ்ன்
http://ithuenvanam.blogspot.in/2016/10/blog-post.html?zx=93dce617df76de3f
நண்பர் சாக்ரடீஸ்ன்
http://ithuenvanam.blogspot.in/2016/10/blog-post.html?zx=93dce617df76de3f
மற்றும் நமக்கு நன்கு தெரிந்த ரஞ்சித் ஆகியோர்.
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
புதிய வாசிப்பு முறைகள் அனைத்தும் வெல்லட்டும்.
என்றும் அதே அன்புடன்
உங்கள் இனிய நண்பன் ஜானி