செவ்வாய், 27 மார்ச், 2018

போராளி டாக்ஸ் - Dax The warrior

Mi foto
ஸ்பானிஷ் கதாசிரியர் ப்ளஸ் ஓவியர் எஸ்டபான் மராட்டோ...
அவர்களின் கைவண்ணத்தில் அமெரிக்காவில் இருந்து உதித்தவர்தான் இந்த டாக்ஸ் தி வாரியர். ( Dax The warrior) போராளி டாக்ஸ் கதைகள்.. சாகசமும் வீர சரித்திரமும் காதலும் கன்னிகளும் கலந்து கட்டி சிறப்பாக அமையப்பெற்ற இக்கதையில் சூனியக்காரர்களும், சூனியக்காரிகளும், விசித்திரமான ஜந்துக்களும் டாக்ஸ்க்கு எதிரிகளாக வந்து உதை தின்பார்கள். டாக்ஸின் ஒவ்வொரு பயணமும் விசித்திரம் கலந்த அனுபவமாகவும் வெவ்வேறு மண்டலங்களை நாம் இரசிக்கும் விதத்திலும் கதைக்களன் அமைக்கப்பட்டிருக்கும்.
ஈரி (EERIE) காமிக்ஸில் அதன் 39வது வெளியீட்டில் வந்தது. ஏப்ரல் 1972 முதல் தொடர்ந்து பன்னிரண்டு பாகங்கள் வெளியான இக்கதை அத்துடன் முடிந்து போனது. 


இதனை மீண்டும்
சிறப்பான கதையமைப்புடன் எழுத்தாளர் பட் லூயிஸ் கற்பனையில் மறு உருவாக்கம் செய்து அதே ஈரி பத்திரிகையில் 59வது இதழில் இருந்து பத்து கதைகளை மட்டும் மறுபதிப்பு செய்தனர். அதன் பெயரை டாக்ஸ் -சபிக்கப்பட்டவன் (Dax The Damned) என்கிற பெயரில் வெளியிட்டார்கள்.
கதை சுருக்கம்--ஒரு மாபெரும் யுத்தத்துக்குப் பின் நாடு திரும்பும் டாக்ஸ் தன் காதலியை சந்திக்க நேர்கிறது.. அவளை ஒரு விசித்திரமான ஜந்துவின் மீது அமர்ந்து பறந்து வரும் மனிதன் கடத்திப் போய் விட..அவளைத் தேடித் திரியும் டாக்ஸ் பல்வேறு எதிரிகளையும் சோதனைகளையும் கடந்து தனது காதலியை எப்படி மீட்டான்? இதனை மராட்டோவின் ஓவிய ஜாலங்களில் கண்டு களிக்க EERI வெளியிட்டிருக்கும் தொகுப்பினை ஆன்லைனில் வாங்கி டாக்ஸின் உலகில் உலாவி இரசித்து வசித்து வரலாம். தமிழ் காமிக்ஸ் டைம்ஸ்
க்காக உங்கள் இனிய நண்பன் ப்ளஸ் நிருபர் ஜானி சின்னப்பன்...
related links:

http://estebanmarotoblog.blogspot.in/

மேலும் ஓவியங்களை கண்டு இரசிக்க..
வயது வந்தவர்களுக்கு மட்டும்..
https://www.pinterest.com/maifrem/esteban-maroto/

1 கருத்து:

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...