வெள்ளி, 23 மார்ச், 2018

கடிதமும் ஒரு கறுப்பு ஓநாயும்...!_Jedar Palayam Saravanakumar

லயன் காமிக்ஸ் :- 319
ஜில் ஜோர்டனின்
கடிதமும் ஒரு கறுப்பு ஓநாயும்...!
ஹாட் லைனிலேயே எடிட்டர் சொல்லிவிட்டார்.இதுவொரு நிதானமான டிடெக்டிவ் கதையென்று.ஆகவே எந்த எதிர்பார்ப்புமின்றி நிதானமாகவே படிக்க ஆரம்பித்தேன்.கொஞ்சம் பொறுமையை சோதிக்கும் கதைதான்.
இது உருவாக்கப்பட்டது 1963 ல் எனும் போது அந்த காலகட்டத்தில் இது சூப்பர் ஹிட்டாக இருந்திருக்கும்.( பெல்ஜிய காமிக்ஸ் உலகின் டாப் ஹீரோக்களில் இவரும் ஒருவர் ).இப்போது குறை கூறுவதால் எந்தப்பலனுமில்லை.
எனக்கு என்ன ஆச்சரியமென்றால் ஜில் ஜோர்டனுக்கு இந்த வருட அட்டவணையில் வாய்ப்பு கிடைத்திருப்பது பற்றியே...! இதற்கு முன்பு வந்த மூன்று கதைகளும் வாசகர்களிடையே பிரமாதமான வரவேற்பு பெற்றதாக தெரியவில்லை.மேலும் புராதனம் என்று சொல்லி ப்ரூனோ பிரேஸிலை பரணுக்கு அனுப்பியாயிற்று.மும்மூர்த்திகளும் சாத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். ( விற்பனையில் அல்ல ) அப்படியிருக்க அதே புராதனமான ஜில் ஜோர்டன் மட்டும் அழகாய் நம் வீடு தேடி வந்து விட்டார்.
எடிட்டருக்கு மிகவும் பிடித்த கதைபோல் தெரிகிறது.
மெதுவாய் நகரும் கதையில் லிபெலின் கடி ஜோக்குகள் எந்த விதத்திலும் உதவவில்லை.
எவ்வளவோ தண்டச்செலவு செய்கிறோம்...? நமக்கு பிடித்த காமிக்ஸிற்காக ஒரு 75 ரூபாய் செலவு செய்யமுடியாதா ..? என்றெல்லாம் சமாதானமாக முடியாது.
வேண்டுமென்றால்...நமது எடிட்டர் வருடத்திற்கு 45+ கதைகளை தேர்வு செய்து..மொழி பெயர்த்து வெளியிடுகிறார்.அவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டு இதுபோல் சுமாராய் அமைந்து விடுவது சகஜமே...! தவிர்க்க முடியாததே...என்று எடுத்துக்கொள்ளலாம்.
என்னைப்பொறுத்தவரை ஜில் ஜோர்டன்...
# நல்லா வெச்சு செஞ்சிட்டார்....!
No automatic alt text available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...