திங்கள், 9 ஏப்ரல், 2018

Karate Doctor Justice கராத்தே டாக்டர் ஜஸ்டிஸ்..

கராத்தே டாக்டர் ஜஸ்டிஸ்... இந்தக் கதையின் ஆசிரியர் ஜீன் ஒலிவியர் உலக சுகாதார அமைப்பின் (WHO-World Health Organisation) பிரதிநிதியாக பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு டாக்டரை சந்திக்க நேரிட அவரது ஆளுமையே கராத்தே டாக்டர் ஜஸ்டிசாக உருமாற்றம் பெற்று பின்னர் காமிக்ஸ் ரூபமெடுத்தது. டாக்டர் பெஞ்சமின் ஜஸ்டிஸ்.. உலக சுகாதார அமைப்பில் பணியாற்றிக் கொண்டு ஏழை எளியோரின் நோய்க் கொடுமைகளோடு யுத்தம் நடத்தி ஆரோக்கியமான உலகை உருவாக்க நினைக்கும் எண்ணத்தில் சேவை செய்து வருபவர். பல்வேறு நாடுகளுக்கும் கண்டங்களுக்கும் சுற்றிப் பறந்து திரிபவர். இவரது பணிக்கு நடுவில் சதிகாரர்களையும், அழிவை ஏற்படுத்துபவர்களையும் தான் அறிந்த கராத்தே கலையின் மூலம் வீழ்த்துவதில் வல்லவர். முதன் முதலில் Pif Gadjet என்கிற பிரெஞ்சு மொழியில் வெளியான வாராந்திர பத்திரிகையில் அதன் 69வது வெளியீட்டில் ஜூன் மாதம், 1970 அறிமுகமாகிறார் நமது கராத்தே டாக்டர். அதிலிருந்து 1990வரை தொடர்ச்சியாக வெளிவந்திருக்கிறார். 1975இல் ஸ்பானிஷ் பிரெஞ்சு கூட்டணியில் கிறிஸ்டியன் ஜாக் திரை இயக்கத்தில் ஜான் பிலிப் லா நடிப்பில்
திரைப்பட அவதாரமெடுத்தும் வாசகர்களையும் இரசிகர்களையும் மகிழ செய்திருக்கிறார். தமிழ் காமிக்ஸ் டைம்ஸ்க்காக உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்.



தொடர்புடைய இடுகைகள்..

2 கருத்துகள்:

  1. Original Post:
    http://johny-johnsimon.blogspot.ae/2018/02/rani-comics-101-200-guna-karur.html

    Dear Uploader,

    I have tried all possibilities to download fro the above mediafire download link, but all I get is :
    The key you provided for file access was invalid. This is usually caused because the file is no longer stored on MediaFire. This occurs when the file is removed by the originating user or MediaFire.

    Still have questions, or think we've made a mistake? Please contact support for further assistance.

    Could you kindly send the links to:
    mujeeb7885@gmail.com
    or upload the working links please.
    Thank you.
    Best regards.

    பதிலளிநீக்கு

கிளாசிக் ஸ்பெஷல் -2-வகம் காமிக்ஸ் மார்ச் வெளியீடு

  இனிய வணக்கங்கள் தோழர்களே.. இந்த மார்ச் மாதம் வெளியாகியுள்ள காமிக்ஸ்களின் வரிசையில் வகம் லேட்டஸ்டாக இறக்கி இருப்பதுதான் இந்த கிளாசிக் ஸ்ப...