வியாழன், 10 மே, 2018

ஆதி மனுஷி ஸானா....கோடை கொண்டாட்டம்...

வணக்கம் நண்பர்களே.. கதையை வாசியுங்கள்..உங்கள் ஆர்வத்தை இங்கே தடைபோட விரும்பவில்லை...
















































மீண்டும் வணக்கங்கள் நண்பர்களே...இந்தக்கதை ஒரு ஆராய்ச்சிப்பயணம் மேற்கொண்ட திருப்தியை உங்களுக்கு வழங்கி இருக்கும் என்று நினைக்கிறேன். கதை நடக்கும் காலப்பகுதி மூன்று வெவ்வேறு காலங்களில் நடக்கிறது. எப்போதுமே மனிதனையும் இயற்கையையும் ஒடுக்கும் போக்கே காணப்பட்டு வரும் இந்த உலகினில் ந்யூற்றினோ அல்லது நியூட்ரினோ ஆராய்ச்சி என்று ஆதிகுடிகள் மலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் நம் தமிழ் மண்ணில் இந்தக்கதையின் தாக்கம் நிச்சயம் உங்களை பாதித்திருக்கும்..பாதித்திருக்க வேண்டும்.. இயற்கையையும் அதன் வளங்களையும் சுரண்டி மனித குலத்துக்கே பேராபத்தை கொண்டு வருவதும் அதே மனித இனமே...
ஆராய்ச்சிகள் அனைத்துமே மனிதகுலத்தை மேம்படுத்துவதாக அமைய வேண்டும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. ஆனால் அதே ஆராய்ச்சி மனிதனின் ஆதி குடிகளில் பண்பாட்டு, இருப்பிட, கலாச்சார, வளர்ச்சிகளை ஒருபோதும் ஒடுக்கி விடுவதாக அழித்து விடுவதாக அமைவதில் எனக்கும் உங்களுக்கும் ஒருபோதும் உடன்பாடிருக்க முடியாது. உணவு உடை உறைவிடம் ஆகியவற்றை அடிப்படைத்தேவையாகக் கொண்ட மனிதர்களுக்கு அவை மறுக்கப்படும் வேளையில் ஒடுக்கப்படும் சூழலில் அவர்களை கட்டுப்பாடு எனும் கயிறு போட்டு தடுத்து நிறுத்த முடியாது என்கிற சிந்தனைகளை இந்த கதை நம்மில் தூண்டி விடுவதே இந்தக்கதையின் வெற்றி... ஒடுக்கப்படும் ஆதி இனம்.. அதன் பின்னணி..  
இதனை தடுக்க நம்மாலான என்னாலான சிறிய பங்களிப்பாக இந்தக்கதையை தமிழில் கொண்டுவர கடும்பணிச்சூழலிலும் சில மாதங்களாகவே போராடிக் கொண்டு வந்துள்ளேன். இதனை வாசியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து இதனைப்பற்றி நான்கு வரிகள் உங்களுக்குள் விவாதியுங்கள்..அதுவே எனக்கும் இதனை உருவாக்கியோருக்கும் நீங்கள் கொடுக்கும் பெரிய அன்பளிப்பாகும்...
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய-இணைய நண்பன் ஜானி சின்னப்பன்...


இதனை காமிக்ஸ் சிபிஆர் முறையில் தரவிறக்கம் செய்ய...

இதனை பிடிஎப் முறையில் தரவிறக்கம் செய்ய...








12 கருத்துகள்:

  1. இது போன்ற கதைகள் பிரம்மிக்க செய்கின்றன. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஹலோ மிஸ்டர் ஜானி சின்னப்பன்...

    காவல் வேலையை கைகழுவிட்டீங்களா...?????(ஆச்சரியத்தில் அடியேன் முழிக்கும் படம்)

    ஏன் கேக்கறேன்னா...

    தினமும் இப்படி ஸ்கேன்லேஷன் பண்றீங்களே...ஏதுங்க உங்களுக்கு இம்புட்டு டைம்..?

    சும்மா பம்பரமா சுத்துறீங்க ஜான்.! என்னவொரு ஆர்வம்...( கைதட்டும் படங்கள் இஷ்டத்துக்கு)

    கதையை படிச்சுப்புட்டு வர்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிர்ர்ர்ர்ர்ர்ர்

      PDF ஓப்பன் ஆகலை...(அழுகாச்சி படம் ஒன்று)

      உடனே கவனிங்க பாஸ்...

      நீக்கு
  3. Dear John,
    Any updates on my previous request with the broken links?
    http://johny-johnsimon.blogspot.ae/2018/02/rani-comics-101-200-guna-karur.html

    Thank you.
    Best regards.

    பதிலளிநீக்கு

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...