வியாழன், 21 நவம்பர், 2019

IND_23_003_கில்லாடிகள் பல்டி_வேதாளர்_திருப்பூர் குமார்

கில்லாடிகள் பல்டி... ஜனவரி 19-25. ஆண்டு1986 அன்று ரூபாய்.2.00 விலையில் முழு வண்ணத்தில் வெளியான இந்தக்கதையில் நமது வேதாளர் டயானா உடன் அவருடைய கோட்டைக்கு விசிட் அடிக்கிறார். அப்போது அந்த கல் கோட்டைக்கு மேலே ஏறும் கருவியானது உடைந்து இருப்பதை காண்கிறார். மேலே கயிறு மூலம் ஏறி பார்த்தபோது அங்கே விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை யாரோ கொண்டுவந்து  ஒளித்து வைத்திருப்பது தெரியவருகிறது.. அவர்கள் யார்? அங்கு ஏன் கொண்டுவந்து அதனை வைத்தார்கள் என்று வேதாளர் ஆராய முற்பட அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களே இந்த கில்லாடிகள் பல்டி... டயானாவின் வீர மனப்பான்மையும் வேதாளரின் சாகசமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் அட்டகாசமான கதை உங்களுக்காக காத்திருக்கிறது தரவிறக்கி வாசித்து மகிழ்வுடன் நம் நண்பர் குமார் அவர்களை பாராட்டி மகிழ்வோம்.. 
ப்ரியமான காமிக்ஸ் வாசகர்களே...உங்களுக்காக தன் விலைமதிப்பற்ற நேரத்தையும் டைம் பாஸ் செய்ய வாய்ப்பிருந்தும் அதை விட்டு காமிக்ஸ் உலகுக்காக விலைமதிப்பற்ற உழைப்பையும் கொடுத்து மட்டுமல்லாது தனது கைச்செலவுக்கான தொகையை காமிக்ஸ் தேடலுக்கு செலவிட்டும் நமக்காக ஸ்கேனும் எடிட்டும் அப்லோடும் செய்து வரும் திருப்பூரைச் சேர்ந்த நண்பர் திரு.குமாரை ஊக்குவிக்கலாமே தொலைபேசி அழைப்பில்...இதோ அவரது எண்..
+918111000111
என்றென்றும் ரிப்பீட்டட் மோட் அன்புடன் உங்கள் இனிய நண்பன் பேட்மேன் ஹிஹி அவரோட நண்பன் ஜானி...

அன்னாரது அருமையான ஸ்கேனிங்கில் வேதாளரின் இந்த ஆல்பம் மிளிர்கிறது...
தரவிறக்கி மகிழுங்கள்..
IND_XXIII_003_கில்லாடிகள் பல்டி_வேதாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...