புதன், 19 பிப்ரவரி, 2020

மேலே..மேலே..வினாடி கதைகள்...ஜானி சின்னப்பன்..



விர்ரென மேலெழுந்து பறந்த அந்த விமானத்தில் குரூரமாக புன்னகைத்தார் நில்ஸன் சாண்டோஸா... போதை மருந்து மூட்டை மூட்டையாய் அடுக்கியிருந்தது அந்த விமானத்தில்.. கீழே நிற்கும் முட்டாள்களுக்கு போலியாக அச்சடித்த பணக் கட்டுகளை மேலே மட்டும் ஒரிஜினல் நோட்டுக்களை அடுக்கி வைத்து கொடுத்து வகையாக ஏமாற்றி விட்டோம் என தெரியாது ஹெஹெஹெ...அவரது மனம் குதூகலித்தது.. கீழேயோ.. அந்த கும்பலிலிருந்து தாடி மீசைகளை வீசியெறிந்து உதயமானான் இளைஞனொருவன்..அவன்..?!
பிலிப்ஸ்... என் நாட்டு இளைஞர்களை போதை மருந்து உற்பத்தி செய்யும் பாவத் தொழிலில் பணத்தைக் காட்டி இழுத்து விட்ட நீ அப்படியே மேலே..மேலே..போ... என லேசான
கேலியோடு முணுமுணுத்துக் கொண்டான்..

ரிமோட் ஒன்றின் பட்டன் அவன் விரலால் தட்டப்பட்டது.. மேலே பறந்த விமானத்தின் உள்ளே.... போதைப்பொருள் அடங்கிய மூட்டையொன்றினுள்..
சிறு வகை ப்ளாஸ்டிக் வெடி யொன்று தூண்டப்பட படீரென வெடித்து  போதை மருந்தை வெளியே விசிறியடிக்க..அது  காற்றில் சட்டென கலந்து நில்ஸனுக்கும், விமானிக்கும் மூச்சுத் திணற வைக்கவும் அவர்கள் போதையில் மேலே..மேலே..பறக்கத் துவங்க..
அவர்களது விமானமோ தரையை முத்தமிடும் பேராசையோடு சொய்ய்ங்..என அசுர வேகத்தில் கீழே..கீழே.. நோக்கிப் பாய்ந்தது..

4 கருத்துகள்:

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...