வியாழன், 22 அக்டோபர், 2020

*ஓரியண்ட் எக்ஸ்பிரஸில் ஒரு கொலை*-அகதா கிறிஸ்டி

 


அயராத பணிகளுக்கு நடுவிலும் ஆர்வமுடன் காமிக்ஸ் தொண்டாற்றும் மதுரை இளங்கோ அவர்களுக்கு இன்று திருமணநாள் வாழ்த்துக்கள். 



திருமண நாள் சிறப்பு வெளியீடாக ...

*அகதா கிறிஸ்டியின் அபார நாவல் படக்கதை வடிவில் pdf  ஆக*

*ஓரியண்ட் எக்ஸ்பிரஸில் ஒரு கொலை*

*பரபரப்பூட்டும் மொழிமாற்ற மர்மப் படக்கதை*

ஐரோப்பாவுக்குக் குறுக்காக தனது மூன்று நாட்கள் பயணத்தைத் தொடங்குகிறது ஓரியண்ட் எக்ஸ்பிரஸ். குளிர் காலத்தில் அதிகம் பேர் பயணிக்க மாட்டார்கள் என்பதால் காலியாக இருக்கும் அந்த ரயில் இம்முறை மட்டும் ஏனோ ஃபுல்லாக பயணிகளால் இருக்கிறது. பெல்கிரேடில் நின்றுவிட்டு கிளம்பும் அந்த ரயில் பயணத்தின் இரண்டாம் நாளில் எதிர்பாராமல் நிகழ்ந்த பனிப் பொழிவில் சிக்கிக் கொண்டு நடுவழியில் நகர இயலாமல் நிற்கிறது.

ரயில் கம்பெனி டைரக்டர் பெளக்கும் துப்பறியும் நிபுணர் ஹெர்குல் பொய்ரெட்டும் அந்த ரயிலில் பயணிக்கின்றனர். பனிப்பொழிவில் சிக்கி ரயில் நகர இயலாத நிலையில் அதில் பயணித்த மில்லியனர் ஸைமன் ரேச்சட் உள்பக்கமாக பூட்டப்பட்ட தன் கம்பார்ட்மெண்ட்டுக்குள் ஒரு டஜன் முறை கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப் படுகிறார். வெளியாட்கள் எவரும் வந்து கொன்றிருக்க முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியான நிலையில், கொலைகாரன் ரயிலிலேயே பயணிக்கும் பயணிகளில் ஒருவன் அல்லது ஒருவள்தான்.

அந்தக் குற்றவாளி யார் என்ற பெரும் கேள்வி எழுகிறது. அதற்கு விடை கண்டுபிடிக்கும் பொறுப்பு பொய்ரெட்டின் தலையில் சுமத்தப்படுகிறது. போலீஸ் வரமுடியாது, மோப்ப நாய்கள் கிடையாது, வெளியுலகிலிருந்து எந்தத் தகவலும் பெற முடியாது. இப்படி ஒரு வினோத சூழ்நிலை!

-இப்படி ஒரு அழுத்தமான முடிச்சைப் போட்டுவிட்டு தன் "MURDER ON THE ORIENT EXPRESS" நாவலைத் தொடங்குகிறார் மர்மக்கதை மகாராணி அகதா கிறிஸ்டி.

வழக்கைக் கையிலெடுக்கும் பொய்ரெட், ‌கொலை நடந்த இடத்திலிருந்து ஒரு துப்பு கண்டுபிடிக்கிறார். பின்னர்  விசாரணைகளில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவருகின்றன! கொலையுண்டவனுக்குத்தான் எத்தனை விரோதிகள் அந்த ரயிலினுள்ளேயே இருந்துள்ளனர் என்கிற பிரமிப்பான விஷயங்கள் வெளிவருகின்றன.  முடிவில் தர்க்கரீதியாக அலசி, எந்த ஒரு பாயிண்ட்டையும் மறுக்க இயலாதவாறு கொலை நிகழ்ந்த விதத்தை பொய்ரெட் விரிவாக விளக்கி கதையை முடிக்கும் போது படிக்கும் நம் மனதில் எழும் உணர்வு: பிரமிப்பு!

அகதா கிறிஸ்டியின் நாவல்களைப் படிக்கும் ஒவ்வொரு முறையும் கதை முடிவதற்கு முன்னேயே குற்றவாளி யாராக இருக்க முடியும் என்பதை யூகித்துவிட முயல்வோம். படித்து முடிக்கையில் ‘ஏமாந்தியா?’ என்னும் அகதாவின் கேலிச் சிரிப்பு நம் காதுகளில் ஒலிக்கும். இந்த கதையிலும் அப்படியே.

கதையின் முடிவில் குற்றவாளியும், குற்றம் நிகழ்‌ந்த விதமும் அகதாவால் விவரிக்கப்படும் போது, க்ளூ வாக கதை முழுதும் தூவப்பட்டிருந்த சில கண்ணிவெடிகளை நாம் நினைவு படுத்திக்கொண்டு  ‘அட!’ என பிரமிக்கப் போவது நிச்சயம். இந்த பிரம்மிப்பான நாவல்  மொழிமாற்று படக்கதையாக இன்று திரு.இளங்கோ அவர்களின் திருமணநாள் சிறப்பு வெளியீடு PDF வடிவில்

https://www.mediafire.com/download/epx4puvgdhf9trh

*அகதா கிறிஸ்டியின் அபார நாவல் படக்கதை வடிவில் pdf  ஆக*

*ஓரியண்ட் எக்ஸ்பிரஸில் ஒரு கொலை*

*பரபரப்பூட்டும் மொழிமாற்ற மர்மப் படக்கதை*

#COMICS_PDF_TIMES

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...