சனி, 13 பிப்ரவரி, 2021

விபரீதமாகுமுன் விலகிப்போ.._ஜானி சின்னப்பன்

 


ஒற்றையடிப் பாதையிலே

ஓரமாகப் பூப்போல 

ஒதுங்கிப் போகும்

காவியப் பெண்ணே..


ஓவியமாய் உன்னை மாற்றி

ஒற்றை வரியைத் தொடுத்திட முயன்றேன்..

ஆனால்..

ஆனால்..

என் கவிதை இரயிலேறித் 

தானே வந்து தாவித்

தொற்றிக் கொள்கின்றன 

வரிகள்.


கேட்டுவிட்டுப் போயேன்..

காதுகள் குளிரட்டும்..


ஒருக்களித்து நீ நின்றால்

இதயமே தடம் புரளுமே..


ஓரமாக நீ போனால்

காலடி நிலம் நழுவுமே..


கொலுசின் ஓசை விழுந்தால்

செவிக்குள் பூகம்பம் நிகழுமே..


கண்களின் ஓரப் பார்வையில்

அதிர்ச்சி அலைகள் சுனாமியாகுமே..


சூடிய பூ உதிர்ந்தால்

என் உயிரும் உதிர்ந்திடுமே..


விஸ்தாரமாய் விவரித்திடவே ஆசை..

விபரீதம் விபரீதம்..


விண் நழுவி விழுந்திடுமோவென

இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்..

சென்று வா.. சந்திப்போம்..


_ஜானி சின்னப்பன்..

#ஓவியஅதிகாரம் #கவியதிகாரம் #ஜானி #jscjohny #jscjohnyvisuals #jscjohnygraphites #jscjohnyarts

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...