விலங்கு...
இது கைவிலங்கு பற்றிய கதை அல்ல.. மனித மனத்தில் உறைந்திருக்கும் கொடூர விலங்கு ஒன்றினை அதன் ஆணிவேரிலிருந்து பின்பற்றி செல்லும் புதிய பாணித் தொடர். பல காட்சிகள் புத்தம்புது கோணங்களிலும் கதைக்கு நம்மை நெருக்கமாகவும் வைத்திருக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன.. கொஞ்சம் காவல் துறையின் சகல நுணுக்கங்களையும் ஏதோ உடனிருந்து பார்த்து நோட்ஸ் எடுத்ததைப் போன்றே விரிகின்றன.. ஆனால் காவல் நிலையத்தில் ஏகப்பட்ட வன்முறைக் காட்சிகளைத் திணித்திருப்பது கொடுமை. அவசியமற்ற கெட்ட வார்த்தைகளால் பொதுவான பார்வையாளர்கள் முகம் சுழிக்க வாய்ப்பிருப்பதை கொஞ்சம் புது இயக்க முயற்சிகள் மனதில் வைத்தால் நன்று. துப்பு துலக்குவதும் அதன் துணை சம்பவங்களும் மிகைப்படுத்தப்படக்கூடாது என்பதில் துவங்கி ரொம்பவே பாவப்பட்ட அப்பாவியைப் போல குற்றவாளிகள்-காவலர் உறவு சித்தரிக்கப்பட்டிருப்பது கதையோடு கொஞ்சமும் பொருத்தமில்லை. இருப்பினும் சீரிஸ் விரும்பிகளைக் கவர்ந்திழுக்கும் அம்சங்கள், திருப்பங்கள், விறுவிறுப்பான சம்பவங்கள் நம்மைக் கட்டிப் போட்டு விடுவதுதான் "விலங்கு" மேஜிக். சில முறை ரிப்பீட்டாகக் கூட பார்க்கலாம். என் பரிந்துரை: பாருங்களேன். பிடித்து விடும் பரிதியையும் போலீஸ் பலரையும்..
இந்தியாவுல எங்க சார் நல்ல போலீஸ்காரன் இருக்கான் இந்தியாகார போலீஸ்னாலே அவன் கெட்டவன்தான்...
பதிலளிநீக்கு