ஞாயிறு, 29 மே, 2022

031_காத்திருக்கும் உலகம்_இயேசு கிறிஸ்து_விவிலிய சித்திரக்கதை வரிசை

 அன்பு நண்பர்களே,

இன்று எங்கள் திருமண வாழ்வின் 17 ஆண்டுகள் நிறைவு தினம். வாழ்க்கையின் எத்தனை சோதனைகளையும் வென்றெடுக்க துணை ஒன்று வாழ்வில் இருந்தால் அது எத்தனை இனியதொரு அனுபவம் என்பதை உணரும் தருணம். துணைவியார் ஷீலாவின் அன்பும் ஆதரவும் அக்கறையும் எனக்கு நல்லதொரு மகிழ்வான நிறைவான வாழ்வாக என் வாழ்வு அமைய உதவி செய்து கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை. அவருக்கு என் நன்றிகள். 

 நிற்க.. தனித்ததொரு ஆன்மாவின் தேடலோ எப்போதுமே இறைவனை நோக்கியே. எப்போது இறைவனோடு ஆன்மா இணையுமோ அப்போதுதான் நிரந்தரமான விடுதலையும் நிரந்தரமான நீடித்த மகிழ்ச்சியும் அங்கே பூத்துக் குலுங்கும். 

    அப்படியொரு இறைவன் தன் ஒரே பேறான மகனை பூமிக்கு அனுப்பி வைப்பார் என்கிற எதிர்பார்ப்புகள் உலகெங்கிலும் தலைதூக்கி உலக மக்கள் எல்லோருமே எதிர்ப்பார்ப்புடன் இருந்த ஒரு காலக்கட்டத்தில் இறைமகன் பூமியில் அவதரித்து நல்லோரை ஆற்றுப்படுத்தி நோயுற்றோரை குணப்படுத்தி விடுதலை வழிவகைகளைக் கற்பித்தார். 

   அந்த இறைமகனின் வரலாறு விவிலியத்தில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனை சித்திர வடிவில் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த நூலே 031_காத்திருக்கும் உலகம். இப்போதிருந்து இறைமகன் இயேசுவின் வாழ்க்கைப் பயணத்தின் சம்பவங்கள் தொடங்குகின்றன. நண்பர்களுக்கு கிறிஸ்தவ தோழர்கள் இருப்பின் அவர்கள் காமிக்ஸ் வாசகர்கள் இல்லை எனில் இந்த நூலை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கலாம். நன்றி!









For Download PDF:


இந்த சித்திரக்கதை வரிசையில் இதுவரை தரவேற்றம் செய்யப்பட்டுள்ள காமிக்ஸ்கள் இங்கே உள்ளன.. 

https://www.mediafire.com/folder/aya2kkxy9kppj/bible+comics


 

செவ்வாய், 10 மே, 2022

தடத்தில்..தாகத்துடன்..#விஜயா மைந்தன்

 


காதலின் வலியை தடமாக விட்டு விட்டுப் போனவளே.. உன் பாதம் பட ஏங்கிடும் தரையின் மணலென தவங்கிடக்கிறேன்.. இன்னொரு ஜென்மம் தாண்டியாவது வா.. இன்னொரு பிரபஞ்சத்தில் இன்னிசை கீதத்துடன்
பறவைகள் சூழ படபடக்கும்
பட்டாம்பூச்சிகளாய் நீல வானின் மேகமண்டலங்களுக்குள் சிறகடித்துப் பறந்திடுவோம்.. புல்வெளிப் பனித்துளிகளை ஒன்றுசேர்த்து நமக்கோர் கூடு சமைப்போம்.. வானவில் பாலமேறிப் பரத்துடன் கைகோர்த்து ஆடிப் பாடிடுவோம்.. ஆங்கே விண்ணதிரும் பறைமுழங்க கோலாகலமாக்கிடுவோம்.. காத்திருப்பேன் கனவுகளுடன்..#கவியதிகாரம்..#விஜயாமைந்தன் #ஜானிசின்னப்பன் #jscjohny #chapterkavithai #jscjohnyfeelings

ஞாயிறு, 8 மே, 2022

காலத்தை வென்றவளே..#கவியதிகாரம்

 

விழி வலையை வீசி விண்மீன்கள் பிடிப்பவளே..

விழுந்து போனேன் விழிகளின் வீச்சினிலே..

விடையில்லாப் பயணத்தின் விளக்கமற்ற நிலை..

என்று கலைந்திடுமோ உன் மௌனத்தின் அலை?

ஆகிப் போகிறேன் அப்படியே சிலை.. 

இப்படியும் இருக்கிறதோ அளவிடற்கரிய கலை? 

குழம்பிக் குட்டையாகிப் போகிறது என் தலை..#கவியதிகாரம் #ஜானி #ஜானிசின்னப்பன்

வெள்ளி, 6 மே, 2022

கோலமே...கோலமே..!

 


அவளின் விரல் நகத்தில் உரசிய  கோலமாவின் துகள்களும் வைரத் துண்டுகளாய் மாறி ஒளிவீசிடும் மாயமென்னவோ...!

விதவிதமான வண்ணங்களில் ஒவ்வொருநாளும் அலங்காரமாகிறது அவளின் பாதம் நடனமாடியபடியே வரைந்திட்ட வாசல் கோலம்..

சாலையின் சிறுவர் குழாம் ஆர்ப்பரித்து அருவிபோல ஓடிக் கலையும் கோலத்தின் சிதறல்கள் கூட தரையில்  மெருகாகிப் பளிச்சென சிதறுகிறது.. 

தினம்தினம் இன்றென்ன கோலம் என்னை முக்திப் பேரின்பமயமாக்கிடும் என்றெண்ணியே உதிக்கும்போதே வெட்கம் பூக்க தலையை எட்டிப் பார்க்கிறான் கதிரவன்..

இருள் கவிழும் போதினில் அன்றிட்ட கோலம் மண்ணோடு மண்ணாய் மாயமானாலும் வானின் நட்சத்திரங்கள் தம்மோடு கோலத் துகள்களை விண்ணுக்கிழுத்து இணைத்துக் கொண்டு விட்டதாகவே பிரமை தட்டுகிறது..

#கவியதிகாரம் #கோலஅதிகாரம் #jscjohny #ஜானி #ஜானிசின்னப்பன்


செவ்வாய், 3 மே, 2022

மந்திரபானம்_சிறார் சித்திரக்கதை வரிசை#2-01_ரங் லீ காமிக்ஸ்

 இனிய வணக்கங்கள் பிரியமானவர்களே.. 

ரம்ஜான் பெருவிழா கொண்டாடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என் நலவாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.. 

நம் இல்லத்தின் செல்வங்களுக்கு நல்ல பொழுது போக்கினை உருவாக்கித்தர வேண்டியது நமது கடமையாகும். இப்போதைய விஷுவல் உலகினில் புத்தகங்கள் தம் பொறுப்பினை எப்போதும் உணர்ந்தே உள்ளன. அமைதியுடன் குறிப்பிட்ட தலைப்பில் நம் கவனத்தை விளம்பர இடையூறுகள் இன்றி நிலைநிறுத்தி வாசிக்க புத்தகங்களே இன்றுவரை சிறந்த கருவியாக இருந்து வருகின்றன.. அதனை நாமும் உணர்ந்து கொண்டால் நமது பிள்ளைகளுக்கு தங்கள் பாடங்கள் தவிர மற்ற பொழுது போக்குகளையும் நூல் வடிவில் கொடுப்பது சுலபமாக இருக்கும். இப்போது வரும் சித்திரக்கதைகள் பெரும்பாலும் பெரியவர்களுக்கான கதைகளாகவே அமைந்து விட்ட தருணத்தில் ரங் லீ காமிக்ஸ் தனது பறக்கும் பானம் என்கிற புதிய காமிக்ஸினை சிறார்களை கவனத்தில் கொண்டு முழுமையாக சிறார்களுக்காகவே கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களின் இந்த தைரியமான முயற்சியினைப் பாராட்ட வேண்டும். அவர்களை ஆதரித்தால் மற்ற சித்திரக்கதை நிறுவனங்களுக்கும் அது ஒரு ஊக்க சக்தியாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. 



இந்த பறக்கும் பானம் சித்திரக்கதை எளிதில் வாசிக்க ஏதுவாக சிறு சிறு கதைகளாக அமைந்திருக்கிறது. அதில் உள்ள மற்ற கதைகளின் தலைப்புகள்.. 

1. பறக்கும் பானம் 

2. ரகசிய கலவை 

3. மேதாவி கிளாரா 

4. மந்திரபான போட்டி 

5. கனவில் கொண்டாட்டம் 

டேவிட் ரீவாய் படைப்பினை தமிழில் மொழிபெயர்த்து நமக்கு வழங்குபவர் ஸஹானா இளங்குமரன். படைப்பினை சென்னை போரூரில் இயங்கி வரும் ரங்லீ பதிப்பகம் மே வெளியீடாக வெளியிட்டிருக்கிறது.    

சின்னஞ்சிறு கதைகளில் விரிகிறது நாம் கண்டிராத ஆச்சரியங்கள் மிகுந்த உலகம். அங்கே வண்ணங்கள் கண்ணைப்பறிக்கும்.. புதுமைகள் என்றும் தொடரும்.. குட்டிப் பெண் தாரா அவளது சுட்டிப் பூனை கிளாரா இருவரும் ஒன்றாக செய்யும் சாகசங்களை மேஜிக் உலகின் பின்னணியில் அருமையாக கொண்டு சென்றிருக்கிறார் டேவிட் ரீவாய்.. அவளின் மேஜிக் சக்தியினால் உருவாக்கும் பானங்களும் அதனால் உருவாகும் நன்மைகளும் சுற்றிலும் உள்ளவர்களுக்கு சிறுமி தாரா எப்படி உதவுகிறாள் என்பதைக் குறித்தெல்லாம் தானியா, குங்குமி, லவங்கி போன்றோரின் வண்ணமயமான மேஜிக் உலகில்    திறம்பட சிறுவர்களை கவரும் விதத்தில் ஓவிய ஜாலம் செய்து காண்பித்திருக்கிறார்கள்.  

இந்த கதைகள் தவிர இலவச விளம்பரங்கள் செய்து கொள்ள ஒரு வாய்ப்பினையும் ரங் லீ வழங்குகிறது. பள்ளிகளில் நடைபெறும் ஓவியப் போட்டிகளில் பங்கேற்ற சிறார்களின் ஓவியங்களை காட்சிப் படுத்தியிருப்பது சிறப்பு.. 

நூறு ரூபாய் விலையில் அருமையான ஒரு ஓவிய, சித்திரக்கதை அனுபவத்தை தங்கள் குழந்தைகளுக்கு வாங்கித் தந்து உங்கள் மழலைகளின் உலகினை இன்னும் இன்பமயமாக்கிட இந்த பறக்கும் பயணம் உதவட்டும். எனது வாழ்த்துக்களுடன்.. 

உங்கள் நண்பன் ஜானி வி சின்னப்பன் 

  

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...