செவ்வாய், 25 அக்டோபர், 2022

தகிக்கும் நிஜங்கள்_ நரகத்தின் எல்லையில் பாகம்-002

https://www.mediafire.com/file/npvki2ts8g64uog/Naragaththin_Ellaiyil_POngal_2021.pdf/file

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே... தீபாவளிப் பரிசை நட்பூக்கள் இரசித்திருப்பீர்கள்..

நல்லெண்ணெய் குளியல், கங்கா ஸ்நானம் என்று நேற்றைய பொழுது இனிமையாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்.. உங்கள் மகிழ்ச்சிக்கு கூடுதல் டாப் அப்பாக இந்த சித்திரக்கதையை என் சிறு பரிசாக ஏற்றுக் கொள்ளுங்கள்.. 

நரகத்தின் எல்லையில்..இந்த கதையின் அடுத்த பாகமான தகிக்கும் நிஜங்கள் நம்மை வேறு ஆழமான சிந்தனைகளுக்கும் தளங்களுக்கும் எடுத்துக் கொண்டு போகிறது. வாசித்து அனுபவிக்க நிறைய வாய்ப்புள்ள இந்தக் கதையை காமிக்ஸ் பதிப்பகங்கள் நினைத்தால் புத்தகமாகக் கொண்டு வரலாம். இப்போதைக்கு நம்மால் இயன்ற வகையில் வாசித்து சிந்திப்போம்.. 

உலகெங்கிலும் அடக்குமுறை, வன்முறை, தீச்செயல்கள் நடைபெற்று வருகின்றன. அவரவருக்கு ஒரு நோக்கம், கொள்கை மற்றும் இலட்சியம். இந்த காரணங்களை வைத்துக் கொண்டு மனிதத்தை இழந்து போகும்போது நிகழும் ஒவ்வொரு நிகழ்வுமே கொடுமையாக மாறிப் போகிறது.. அப்படி ஒரு நிலைமைதான் தென் அமெரிக்காவின் பூர்வ குடிகளுக்கும்.. தம் இனத்தாரும் நோயாளிகள் என்று கைவிட ஆக்கிரமிப்பாளர்களும் எளிதில் கைப்பற்ற நேரும் பூர்வ குடிகளின் நிலைமை என்னாகும்? இந்தக் கேள்விக்கான விடையைத்தான் இரண்டாம் பாகம் இரத்த வரிகளில் எழுதிக் கொண்டு போகிறது..  வாருங்கள்..தொடர்வோம்...






for PDF: 

previous Part:

https://www.mediafire.com/file/npvki2ts8g64uog/Naragaththin_Ellaiyil_POngal_2021.pdf/file


என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி 

ஞாயிறு, 23 அக்டோபர், 2022

காந்த சுடர் மாயாவி_கலா காமிக்ஸ்_தீபாவளி_2022

அன்புள்ள கொண்ட இனிய காமிக்ஸ் நட்புக்கள் அனைவருக்கும், என்றும் நட்புடன் அகம் மகிழ , அன்பான இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.💓💓💓💓💓



இந்த ஆண்டு தீபாவளிக்கு காந்த சுடர் மாயாவி நம்முடன் தீபாவளி கொண்டாட வந்திருக்கிறார்.. வாருங்கள்.. வாசியுங்கள்.. ஜானி சித்திரக்கதை ஆவணக் காப்பகத்தின் பொக்கிஷ அறையில் இருந்து இந்த முறை வெளியாகும் இந்த நூல் நம் நண்பர் டெக்ஸ் சம்பத் அவர்களது உதவியுடன் திரு. சொக்கலிங்கம் பன்னீர் செல்வம் அவர்களது தொழில் நுட்ப உதவி மற்றும் வழிகாட்டுதலுடன் தங்கள்தீபாவளி பரிசாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.. எல்லாம் வாசகர்களால் வாசகர்களுக்காக வாசிப்புக்கென கொடுக்கப்பத்திருக்க பாலமாக நான்.. 

கலா காமிக்ஸ் 

கலா காமிக்ஸின் லோகோ.. 
இருபத்தைந்தே காசுகளில் அட்டகாசமான அதிரடியை ஆடித்தள்ளியிருக்கிறார்கள் அந்நாட்களில்.. 
திரு. ராஜா அவர்களின் ஓவியத்தில் கடத்தல்காரர்கள் நகரான கடற்கரைப் பட்டிணம் மே நகரில் அதிரடி துவங்குகிறது.. 
வந்த உடனே வெடியைப் போட்டு தீபாவளி கொண்டாடுகின்றன  விமானங்கள்..  
படுபயங்கரமான விமானத் தாக்குதல்.. கைக்கடிகாரம் மூலம் மாயாவி காந்தனின் செய்தி.. விமானத்தைப் பற்றித் தொங்கியபடி சாகசம் 

காந்த சுடர் மாயாவியின் அதிரடியில் கடத்தல்காரர்கள் கூட்டம் தெறித்து ஓடி சிக்கித்தவிக்கிறது.. இறுதியில் நடந்தது என்ன?
விடை அறிய வாசியுங்கள் விலையில்லா சித்திரக்கதை ஆல்பம் இந்த காந்த சுடர் மாயாவியை.. உங்களுக்கு எங்கள் தீபாவளிப் பரிசு இது.. 
இதனை வெளியிட்டு அந்நாட்களில் பரபரப்பூட்டிய திரு. எம்.இ. பழனியப்பன் அவர்களது மதுரை அலுவலகம் இயங்கி வந்த விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன..   
எதிர்காலத்தில் யாரேனும் கலா காமிக்ஸின் மொத்த படைப்புகளையும் கூட நமக்காக கொடுக்க முன்வரலாம்.. அதை ஊக்குவிப்போம்.. ஆவணங்கள் முந்தைய வரலாற்றின் தடங்கள்.. மறவாதீர் ஒருநாளும்.. 
இந்த சித்திரக்கதையை பிடிஎப் வடிவில் வாசிக்க: 
என்ஜாய் தோழமை உள்ளங்களே.. 
ஹேப்பி தீபாவளி.. 


 

  

ஞாயிறு, 16 அக்டோபர், 2022

காத்திருப்பின் சுகங்கள்.. _விஜயா மைந்தன்

 

இன்னும் எத்தனை ஜென்மம்தான் காத்திருப்பதென்றாலும் சுகமே...

கடைக்கண் பார்வையிலென்னைக் கட்டிப் போட்டுப் போனவளே..விடுவித்திட ஒரு நாள் வருவாய் என்ற நம்பிக்கையுடன் வினாடி முட்களின் சங்கீதத்தில்..

மணித் துளிகளின் நகர்வின் இன்னிசையில்..

வருடிப் போகும் காற்றில்..

உன் வரவை எதிர் நோக்கி உயிர் மூச்சை ஸ்தம்பனம் செய்து காத்திருப்பேன்..

என் ஆகாயமே..

உன் கருணை மழைப் பொழிவை சீக்கிரம் கொடுத்தென்னை மீட்டெடு..உயிரில் கலந்த உன் இதமான சுவாசக் காற்று அன்றொரு நாள் என்னைத் தழுவிப் போன நினைவுகளுடன்..

_ஜானி சின்னப்பன்

#ஓவியஅதிகாரம் #chapterart #jscjohnyvisuals

Enter The Phantom_FREW First Issue வேதாளர் முதல் FREW இதழ்_கதைச்சுருக்கம்

 வணக்கங்கள் வாசக தோழமை உள்ளங்களே!                  இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வேதாளர் சித்திரக்கதைகளின் உலகப் புகழ் பெற்ற FREW பதிப்ப...